முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தெறிகெடுதல் முதல் - தென்னமட்டை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தெறிகெடுதல் முதல் - தென்னமட்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தெறிகெடுதல் | நிலைகுலைதல் . |
| தெறித்தல் | சிதறுதல் ; குலைதல் ; துள்ளிவிழுதல் ; முரிதல் ; பிளத்தல் ; உடைத்தல் ; அறுதல் ; வேறுபடுதல் ; நீங்குதல் ; தவறுதல் ; செருக்காயிருத்தல் ; பிதுங்குதல் ; குறும்புபண்ணுதல் ; நரம்புதுடித்து நோவுண்டாக்குதல் ; விரலால் சுண்டுதல் ; விரலால் உந்துதல் ; முற்றுதல் ; தாக்கப்பட்டு வெளிப்படுதல் . |
| தெறித்தளத்தல் | ஒன்றைத் தட்டுதலால் உண்டாகும் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளப்பது . |
| தெறித்துநடை | துள்ளுநடை . |
| தெறிநடை | துள்ளுநடை . |
| தெறிப்பு | செருக்கு மேலிட்ட நடக்கை ; கடைப்பூட்டு ; அதிர்கை ; சிணுக்கி . |
| தெறிபடுதல் | சிதறுண்ணுதல் ; அலைந்துலைதல் ; தோற்றோடுதல் ; திக்கறுதல் ; கலங்குதல் ; தவறுதல் . |
| தெறிமுற்றுதல் | முழுதும் பழுத்தல் . |
| தெறிவில் | சுண்டுவில் . |
| தெறு | சுடுகை ; கோபம் ; அச்சம் ; துன்பம் . |
| தெறுக்கால் | தேள் ; விருச்சிகராசி . |
| தெறுத்தல் | நெரித்தல் ; குவித்தல் . |
| தெறுதல் | சுடுதல் ; காய்ச்சுதல் ; கோபித்தல் ; வருத்துதல் ; தண்டஞ்செய்தல் ; அழித்தல் ; கொட்டுதல் ; பகைத்தல் ; கொல்லுதல் ; தங்கல் ; நெரித்தல் . |
| தெறுநர் | பகைவர் ; கொலையாளர் . |
| தெறுவி | அகப்பை . |
| தெறுழ் | ஒரு காட்டுக் கொடிவகை ; காண்க : புளிமா . |
| தென் | அழகு ; இனிமை ; இசை ; இசைப்பாடடு ; கற்பு ; தெற்கு ; தென்னைமரம ; வலப்பக்கம் . |
| தென்கயிலை | கயிலாயத்தை ஒத்ததும் தென்னாட்டில் உள்ளதுமான சிதம்பரம் , திருக்காளத்தி , திருவையாறுபோன்ற சிவதலங்கள் . |
| தென்கலை | தென்னாட்டுக்குரிய கலையான தமிழ் . |
| தென்கலைநாமம் | தென்கலை வைணவர் தரிக்கும் திருமண்குறி . |
| தென்கலையார் | தென்கலை நாமம் தரிக்கும் வைணவப் பிரிவினர் . |
| தென்கால் | தென்றல் . |
| தென்காற்று | தென்றல் . |
| தென்கிழக்கு | தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை . |
| தென்கீழ்த்திசை | தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை . |
| தென்கீழ்த்திசைப்பாலன் | தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் . |
| தென்கீழ்த்திசையிறை | தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் . |
| தென்கீழ்த்திசையோன் | தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் . |
| தென்கோடு | தென்முனை ; பிறைச்சந்திரனின் தென்முனை . |
| தென்படுதல் | புலப்படுதல் ; பயிற்சி அடைதல் . |
| தென்பல்லி | புல்லகம் என்னும் தலையணியின் உறுப்பு இரண்டனுள் ஒன்று . |
| தென்பாண்டி | நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி . |
| தென்பாண்டிநாடு | நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி . |
| தென்பார் | தென்னாடு ; பூமியின் தென்பாகமாகிய பாண்டிநாடு . |
| தென்பு | காண்க : தெம்பு . |
| தென்புலக்கோன் | தென்திசைக்குத் தலைவனாகிய யமன் . |
| தென்புலத்தார் | தென்திசையிலுள்ள பிதிரர் ; யமபடர் . |
| தென்புலத்தார்வேள்வி | இறந்தோர்பொருட்டுச் செய்யும் நீர்க்கடன் . |
| தென்புலம் | தென்னாடு ; பாண்டிநாடு ; யமனுலகம் ; பிதிரர்கள் வாழுமிடம் . |
| தென்புலர் | யமபடர் . |
| தென்மலை | பொதியமலை ; சோலைமலை . |
| தென்முனி | தெற்கில் வாழும் முனிவராகிய அகத்தியன் . |
| தென்மொழி | தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ் . |
| தென்றமிழ் | தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ் . |
| தென்றல் | தென்காற்று . |
| தென்றல்வருமலை | பொதியமலை . |
| தென்றற்கோன் | தென்றலையுடைய அரசனாகிய பாண்டிய மன்னன் . |
| தென்றற்றேரான் | தென்றலைத் தேராகவுடைய மன்மதன் . |
| தென்றி | தெற்கு ; காண்க : தென்றல் . |
| தென்றிசைக்கிழவன் | தென்திசையின் தலைவனாகிய யமன் . |
| தென்றிசைக்கோன் | தென்திசையின் தலைவனாகிய யமன் . |
| தென்றிசைப்பாலன் | தென்திசையின் தலைவனாகிய யமன் . |
| தென்றிசைமுதல்வன் | தென்திசையின் தலைவனாகிய யமன் . |
| தென்றிசையங்கி | காண்க : தக்கணாக்கினி . |
| தென்றுதல் | சிதறுதல் ; இனம்பிரிதல் . |
| தென்னகர் | தெற்கிலுள்ள நகரமாகிய யமபுரம் . |
| தென்னங்கிடுகு | தென்னங்கீற்றால் முடைந்ததட்டி ; விரியிலைத்தட்டி . |
| தென்னங்குரும்பை | இளநீர் பிடியாத இளங்காய் . |
| தென்னம்பாளை | தென்னம்பூ உள்ளடஙகிய உறை ; தென்னம்பூவின் உறை . |
| தென்னம்பிள்ளை | தென்னங்கன்று ; தென்னைமரம் . |
| தென்னம்பொருப்பு | தெற்கின்கண் உள்ள பொதியமலை . |
| தென்னமட்டை | தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை ; தேங்காயின் கூந்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 611 | 612 | 613 | 614 | 615 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெறிகெடுதல் முதல் - தென்னமட்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தலைவனாகிய, யமன், காண்க, தென்திசையின், தென்றல், தென்கீழ்த்திசையின், அக்கினிதேவன், பொதியமலை, தலைவனான, தென்கலை, தமிழ், துள்ளுநடை, நெரித்தல், தென்னாடு, தென்பகுதி, யமபடர், பாண்டிநாடு, விரலால், தவறுதல், மொழியாகிய, வழங்கும், தென்திசையில், பாண்டிநாட்டின், நாடாகக், கூடும், கிழக்கும், தெற்கும், தென்காற்று, கோணத்திசை, சிதறுதல், தரிக்கும், நாஞ்சில், தென்முனை, தெற்கு, கருதப்படும்

