தமிழ் - தமிழ் அகரமுதலி - தூவிப்பொன் முதல் - தெட்சணம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தூவிப்பொன் | கிளிச்சிறை என்னும் பொன் . |
தூவியளத்தல் | எளிதாகப் பெய்து அளத்தல் . |
தூவு | ஊன் . |
தூவு | (வி) தூவுஎன் ஏவல் ; சிதறு ; தெளி . |
தூவுதல் | தெளிதல் ; இறைத்தல் ; அளக்கும் போது எளிதாக மேலே பெய்தல் ; அருச்சித்தல் ; மிகச் சொரிதல் ; ஒழிதல் ; மழைபெய்தல் . |
தூவுரை | நல்லுரை . |
தூவெள்ளறுவை | அழுக்கற்ற வெண்ணிறமுள்ள ஆடை . |
தூவெளி | அறிவுவெளி , சிதாகாசம் . |
தூவையர் | புலாலுண்போர் . |
தூள் | துகள் ; புழுதி ; பூந்தாது ; மருந்துப்பொடி ; திருநீறு ; கறிப்பொடி ; மூக்குத்தூள் ; சிறியவை ; சிறுமுத்து . |
தூள்படுத்துதல் | முற்றம் அழித்தல் ; அட்டகாசம் செய்தல் . |
தூள்படுதல் | கடுமையாகச் செயல்புரிதல் . |
தூளம் | தூள் ; திருநீற்றை நீரில் குழையாது பூசுதல் . |
தூளனம் | தூள் ; திருநீற்றை நீரில் குழையாது பூசுதல் . |
தூளி | புழுதி ; பூந்தாது ; குதிரை ; குதிரையின் ஆர்ப்பு ; ஏணை ; குழந்தைத் தொட்டில் . |
தூளிசாலம் | அருகன் கோயிலின் முதல் மதில் . |
தூளித்தல் | பருத்தல் ; திருநீற்றால் உத்தூளனஞ் செய்தல் . |
தூளித்துவசன் | காற்று . |
தூளிதம் | பொடிக்கப்பட்டது ; திருநீறு . |
தூளிமட்டம் | தரைமட்டம் . |
தூற்றல் | பழிச்சொல் ; சிறுமழை . |
தூற்றாப்பொலி | தூற்றாத நெற்குவியல் . |
தூற்றி | புறங்கூறுவோன் ; பெருக்குவோன் . |
தூற்றிக்கொள்ளுதல் | தெரிந்துகொள்ளுதல் . |
தூற்று | பொலிதூற்றுகை ; பழிப்பு . |
தூற்றுக்காடு | சிறுதூறு . |
தூற்றுக்கூடை | பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை ; பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் . |
தூற்றுகூடை | பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை ; பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் . |
தூற்றுத்தலையன் | பிராய்மரம் . |
தூற்றுதல் | சிதறுதல் ; தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் ; புழுதி முதலியவற்றை இறைத்தல் ; பரப்புதல் ; அறிவித்தல் ; பழிகூறுதல் ; வீண்செலவு செய்தல் . |
தூற்றுமுறம் | நெற்பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் . |
தூறல் | காண்க : தூற்றல் . |
தூறன் | அவதூறு சொல்பவன் ; காமுகன் ; குடிக்குப் பழியாயுள்ளவன் . |
தூறாக்குதல் | பழித்தல் . |
தூறு | புதர் ; குவியல் ; குறுங்காடு ; சுடுகாடு ; காண்க : திராய் ; மஞ்சள் ; பழிச்சொல் ; தீங்கு . |
தூறுகுணம் | காண்க : கடம்பு . |
தூறுதல் | மழை தூவுதல் ; கிளைத்தல் ; செய்தி பரவுதல் ; சடைபற்றுதல் ; நிந்தித்தல் . |
தூறுதலை | சிலும்பலான மயிர்த்தலை . |
தூறுதலையன் | பற்றைத் தலையன் ; காண்க : பிராய் . |
தூறுபடுதல் | சிதறிப்போதல் ; சடைபற்றுதல் ; பழிமொழி கூறப்படல் . |
தூறுபுட்பம் | சீந்திற்கொடி ; சிலந்தி . |
தூறுமாறு | தீநெறி . |
தூறுவாதி | தீம்பாலைமரம் . |
தூனம் | வருத்தம் ; அசைவு . |
தூனனம் | அகற்றல் ; அசைதல் . |
தெ | ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+எ) . |
தெக்கணம் | தெற்கு ; வலப்பக்கம் . |
தெக்கணை | தட்சிணை , குரு முதலியோருக்குக் கொடுக்கும் நன்கொடை . |
தெக்கு | தெற்கு . |
தெக்குதல் | கொள்ளுதல் . |
தெகிட்டு | தெவிட்டுகை ; வாந்திவருகை . |
தெகிடி | சூது விளையாட்டுவகை ; புரட்டு . |
தெகிழ்தல் | விளங்குதல் ; வாய்விடுதல் ; நிறைதல் . |
தெகிள் | கொடிப்புன்கு . |
தெகுட்டி | தேட்கொடுக்கிச்செடி . |
தெகுட்டிகை | தேட்கொடுக்கிச்செடி . |
தெகுட்டுதல் | தெவிட்டுதல் . |
தெகுடாடுதல் | திண்டாடுதல் . |
தெகுள்தல் | நிறைதல் ; பெருகுதல் . |
தெகுளம் | நிறைவு ; பெருக்கம் . |
தெங்கங்காய் | தேங்காய் . |
தெங்கம் | தென்னைமரம் . |
தெங்கம்பழம் | தேங்காய்நெற்று . |
தெங்கு | தென்னைமரம் ; தித்திப்பு ; போர்ச்சேவலின் தன்மை குறிக்கும் குழூஉக்குறியுள் ஒன்று ; ஏழு தீவுகளுள் ஒன்று . |
தெசலம் | மாமரம் . |
தெட்சகன் | இரட்சகன் ; எட்டு நாகத்துள் ஒன்று . |
தெட்சணதேசம் | விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு . |
தெட்சணம் | தெற்கு ; வலப்பக்கம் ; காளாமுகம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 606 | 607 | 608 | 609 | 610 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூவிப்பொன் முதல் - தெட்சணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தூற்றுவதற்கு, உதவும், பொலி, காண்க, முறம், தெற்கு, செய்தல், தூவுதல், தூள், புழுதி, ஒன்று, நிறைதல், தென்னைமரம், தேட்கொடுக்கிச்செடி, தட்டுக்கூடை, வலப்பக்கம், சடைபற்றுதல், பழிச்சொல், திருநீறு, பூந்தாது, இறைத்தல், திருநீற்றை, நீரில், தூற்றல், பூசுதல், குழையாது, தூவு