முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தெய்வத்தச்சன் முதல் - தெரிசம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தெய்வத்தச்சன் முதல் - தெரிசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தெய்வத்தச்சன் | தேவலோகத்துச் சிற்பியான விசுவகன்மா . |
| தெய்வத்தரு | காண்க : தேவதாரு . |
| தெய்வத்தன்மை | கடவுளின் இயல்பு . |
| தெய்வத்தானம் | கடவுட்கோயில் , தேவாலயம் . |
| தெய்வத்துவம் | கடவுள் தன்மை . |
| தெய்வத்துவனி | தேவர் அருகதேவருக்குச் செய்யும் சிறப்புகளுள் ஒன்று . |
| தெய்வதம் | தெய்வம் ; ஆண்டு . |
| தெய்வதயானை | காண்க : தெய்வயானை . |
| தெய்வதலம் | கோயில் ; திருப்பதி . |
| தெய்வதுந்துமி | தேவலோகத்து முரசு . |
| தெய்வதூடணம் | கடவுள் நிந்தனை . |
| தெய்வதை | கடவுள் ; பேய் . |
| தெய்வநதி | கங்கையாறு . |
| தெய்வப்பசு | காமதேனு . |
| தெய்வப்பாவை | காண்க : கொல்லிப்பாவை . |
| தெய்வப்பிரமம் | தெய்வத் தன்மையுடைய பிரமவீணை . |
| தெய்வப்பிறப்பு | தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு ; தெய்வக் கூறான பிறப்பு . |
| தெய்வப்பிறவி | தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு ; தெய்வக் கூறான பிறப்பு . |
| தெய்வப்புணர்ச்சி | முன்பின் அறியாத ஆணும் பெண்ணும் எதிர்பாராத நிலையில் கண்டு காதலித்துக் கூடும் கூட்டம் . |
| தெய்வப்புலமை | தெய்வ அருளினால் வந்த புலமை ; தெய்வத்தன்மை வாய்ந்த புலமை . |
| தெய்வப்புள் | தெய்வத்தன்மையுள்ள பறவையான கருடன் . |
| தெய்வப்பெண் | தேவலோகத்துப் பெண் . |
| தெய்வபத்தி | கடவுளிடத்தில் செய்யும் அன்பு . |
| தெய்வபயம் | கடவுளாணைக்கு அஞ்சுதல் . |
| தெய்வம் | கடவுள் ; ஊழ்வினை ; தெய்வத்தன்மை ; எண்வகை மணத்துள் ஒன்றாகிய தெய்வமணம் ; தெய்வச்செயல் ; ஆண்டு ; புதுமை ; தெய்வத்தன்மை உள்ளது ; மணம் . |
| தெய்வமணம் | மிக மேலான மணம் ; காண்க : தெய்வப்புணர்ச்சி : வேள்வி செய்விக்கும் ஆசிரியன் ஒருவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்து அந்த வேள்வித்தீயின் முன்னர்க்கொடுப்பது . |
| தெய்வமணி | சிந்தாமணி ; இழிந்த தாதுப் பொருள்களைப் பொன்னாக்கும் மருந்து ; குதிரைக் கழுத்திலுள்ள நற்சுழி ; நற்சுழியுள்ள குதிரைவகை . |
| தெய்வமந்திரி | தேவர்களுக்குரிய அமைச்சனான வியாழன் . |
| தெய்வமயக்கம் | தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் . |
| தெய்வமயக்கு | தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் . |
| தெய்வமரம் | கற்பகதரு ; தேவதாருமரம் . |
| தெய்வமாடம் | தெய்வத் திருக்கோயில் . |
| தெய்வமாடுதல் | தெய்வம் ஏறப்பெறுதல் . |
| தெய்வமானுடம் | தெய்வத்தன்மையோடு கூடிய மானுடத்தன்மை . |
| தெய்வமுறுதல் | ஆவேசமடைகை ; தெய்வத்தன்மை பெறுகை . |
| தெய்வமேயென்று | எவ்வகை உதவியுமின்றிக் கடவுளே கதியாக ; பிறர் செயல்களில் தலையிடாமல் ; வாளா . |
| தெய்வமேறுதல் | காண்க : தெய்வமுறுதல் . |
| தெய்வயாகம் | கடவுளரின்பொருட்டுச் செய்யப்படும் வேள்வி . |
| தெய்வயானை | இந்திரனின் யானையாகிய ஐராவதம் ; முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி . |
| தெய்வயானைகாந்தன் | தெய்வயானையின் கணவனான முருகக்கடவுள் . |
| தெய்வலோகம் | மேலுலகம் ; துறக்கம் . |
| தெய்வவணக்கம் | கடவுளை வணங்குகை ; நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து . |
| தெய்வவாக்கு | கடவுளின் திருவாக்கு ; உருவிலிவாக்கு . |
| தெய்வவிசுவாசம் | கடவுள் உண்டு என்னும் கொள்கை ; கடவுளிடம் நம்பிக்கை ; கடவுளிடத்துக் காட்டுவதுபோன்று காட்டும் நம்பிக்கை . |
| தெய்வவிரதன் | சிறப்புமிக்க நோன்பைக் கொண்ட வீடுமன் . |
| தெய்வவீடு | விமானம் . |
| தெய்வவுத்தி | சீதேவி என்னும் தலைக்கோலம் . |
| தெய்வாதனம் | ஒருகால் மடித்து ஒருகால் ஊன்றியிருக்கும் இருப்புநிலை . |
| தெய்வாதீனம் | தெய்வச்செயல் ; தற்செயல் , எதிர்பாரா நிகழ்ச்சி . |
| தெய்வாவி | பரிசுத்த ஆவி . |
| தெய்விகம் | தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு . |
| தெய்வீகம் | தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு . |
| தெய்வீகமாதல் | இறத்தல் . |
| தெய்வோபாசனை | கடவுள் வழிபாடு . |
| தெரிக்கல் | விரித்துக் கூறுதல் . |
| தெரிகடை | நல்லவை தெரிந்தெடுத்தபின் எஞ்சியது . |
| தெரிகவி | தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள் திரட்டு . |
| தெரிகோல் | பொருள்களை ஆராயும் துலாக்கோல் . |
| தெரிசம் | அமாவாசை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 608 | 609 | 610 | 611 | 612 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெய்வத்தச்சன் முதல் - தெரிசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், தெய்வத்தன்மை, காண்க, பிறப்பு, தெய்வச்செயல், தெய்வ, தற்செயல், தெய்வம், தெய்வத்தால், தெய்வமுறுதல், சித்தமயக்கம், என்னும், ஏற்பட்ட, ஒருகால், உயரமுள்ள, ஓரளவு, ஒன்பதுபனை, மகிமை, ஆவேசம், தெய்வத்தன்மையுள்ளது, நம்பிக்கை, தெய்வமணம், தெய்வயானை, தெய்வத், ஆண்டு, செய்யும், கடவுளின், தெய்வத்தினிடமிருந்து, பிறக்கும், புலமை, மணம், தெய்வப்புணர்ச்சி, கூறான, தெய்வக், வேள்வி

