தமிழ் - தமிழ் அகரமுதலி - தூங்கலோசை முதல் - தூதாள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தூங்கலோசை | வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை . |
| தூங்காமை | செயலில் சோர்வில்லாமை . |
| தூங்காவிளக்கு | எப்போதும் அணையாது எரியும் விளக்கு . |
| தூங்கானைமாடம் | யானையின் முதுகுபோன்று அமைக்கப்பட்ட கோயில் ; தென்னார்க்காட்டு மாவட்டத்துள்ள பெண்ணாகடச் சிவன் கோயில் . |
| தூங்கிசை | செய்யுளுக்குரிய நால்வகை ஒசையுள் ஒன்று . |
| தூங்கிசைச்செப்பல் | இயற்சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை . |
| தூங்கிசைத்துள்ளல் | கலிப்பாவுக்குரிய ஓசை . |
| தூங்கிசையகவல் | நிரையொன்றாசிரியத் தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை . |
| தூங்கிருள் | செறிந்த இருள் , மிகுந்த இருள் . |
| தூங்குகட்டில் | தொங்கியாடும் கட்டில் . |
| தூங்குதல் | அசைதல் ; தொங்குதல் ; ஊசல் முதலியவற்றில் ஆடுதல் ; சோம்பலாயிருத்தல் ; வாடுதல் ; சாதல் ; இடையறாது விழுதல் ; ஒலித்தல் ; நிலையாகத் தங்குதல் ; மெத்தென நடத்தல் ; செறிதல் ; கூத்தாடுதல் ; துயிலுதல் ; தாமதித்தல் ; அழுந்துதல் ; மிகுதல் . |
| தூங்குதோல் | பாம்பின் சட்டை . |
| தூங்குமஞ்சம் | தொங்கி ஆடும் கட்டில் . |
| தூங்குமூஞ்சி | மந்தன் ; சீமைவாகைமரம் ; காண்க : கரிசலாங்கண்ணி . |
| தூங்கெயில் | சோழன் ஒருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை . |
| தூசக்குடிஞை | கூடாரம் . |
| தூசம் | யானையின் கழுத்திலிடுங் கயிறு . |
| தூசர் | வண்ணார் ; படைவீரர் . |
| தூசரம் | சாம்பல் நிறம் . |
| தூசரன் | எண்ணெய் வாணிகன் . |
| தூசறுத்தல் | அடியோடு அழித்தல் . |
| தூசனம் | நிந்தைச்சொல் . |
| தூசி | குதிரை ; கொடிப்படை ; போர் ; உச்சி ; கூத்துத் தொழில்வகை ; மிகச் சிறிது ; புழுதி . |
| தூசிகம் | காண்க : புளியாரை . |
| தூசிதாங்கி | அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை ; மேல்மறைப்பு . |
| தூசிப்படை | கொடிப்படை . |
| தூசியம் | கூடாரம் . |
| தூசு | ஆடை ; பஞ்சு ; முன்னணிப்படை ; சித்திரைநாள் ; யானைக் கழுத்திடுகயிறு ; புழுதி ; மிகச் சிறிது ; தூய்மை . |
| தூசுப்பு | தண்ணீர்விட்டான்கொடி . |
| தூட்டி | ஆடை . |
| தூட்டிகம் | காண்க : தும்பை . |
| தூடணம் | நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் . |
| தூடணை | நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் . |
| தூடிதம் | கெடுக்கப்பட்டது . |
| தூடியம் | கூடாரம் . |
| தூண் | தம்பம் ; கட்டடத் தூண் ; பற்றுக்கோடு ; தறி . |
| தூண்டாவிளக்கு | எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு ; நாகரத்தினமாகிய மணிவிளக்கு . |
| தூண்டிக்காட்டுதல் | விவரித்தல் ; பிறன் செய்த குற்றத்தை அவனிடம் குத்திக்காட்டுதல் ; தூண்டிக் கொடுத்தல் . |
| தூண்டிக்கொடுத்தல் | நினைப்பூட்டுதல் ; குற்றத்தை வெளியிடுதல் ; குறிப்பாக அறிவித்தல் ; கோட்சொல்லுதல் . |
| தூண்டில் | மீன்பிடிக்கும் ஒரு கருவி ; கொக்கி ; வரிக்கூத்துவகை . |
| தூண்டில்போடுதல் | உளவறிதல் ; தன்வயப்படுத்துதல் ; தூண்டிலிடுதல் . |
| தூண்டில்முள் | தூண்டிலின் கொக்கிமுனை . |
| தூண்டில்வேட்டுவன் | தூண்டிலைக் கொண்டு வேட்டையாடுபவனான மீன் பிடிப்போன் . |
| தூண்டிவிடுதல் | காண்க : தூண்டிக்கொடுத்தல் , விளக்கைத் தூண்டுதல் . |
| தூண்டுகோல் | விளக்குத்திரியைத் தூண்டும் ஈர்க்கு ; ஏவிவிடுவோன் . |
| தூண்டுதல் | செலுத்துதல் ; ஏவுதல் ; தள்ளுதல் ; விளக்கைத் தூண்டுதல் ; நினைப்பூட்டுதல் ; செலுத்துதல் ; அனுப்புதல் ; கிளப்பிவிடுதல் . |
| தூண்மாலை | தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை . |
| தூணம் | தூண் ; பற்றுக்கோடு ; பகை ; அம்புக் கூடு ; தீய நாள்வகை ; பாத்திரம் தூக்க இடும் கயிற்றுச் சுருக்கு . |
| தூணி | அம்புக்கூடு ; நான்குமரக்கால் கொண்ட ஓர் அளவு . |
| தூணிகர் | வாணிகர் , தனவணிகர் . |
| தூணித்தல் | பருத்தல் . |
| தூணியங்கம் | அத்திப்பிசின் . |
| தூணீரம் | அம்புக்கூடு . |
| தூத்தியம் | தூதன் செயல் அல்லது மொழி . |
| தூதம் | அசைவு ; நிந்தை . |
| தூதளை | காண்க : தூதுளை . |
| தூதன் | செய்தியறிவிப்போன் ; அரசனின் தூதன் ; ஒற்றன் ; ஏவலாளன் ; புதன் ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்குவோன் ; தேவதூதன் . |
| தூதாடுதல் | தூதாகப் போதல் . |
| தூதாள் | காண்க : தூதன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 603 | 604 | 605 | 606 | 607 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூங்கலோசை முதல் - தூதாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தூதன், நிந்தைச்சொல், நிந்தை, தூண், கூடாரம், தூண்டுதல், பற்றுக்கோடு, அம்புக்கூடு, குற்றத்தை, நினைப்பூட்டுதல், செலுத்துதல், விளக்கைத், தூண்டிக்கொடுத்தல், புழுதி, இருள், வரும், கோயில், யானையின், கட்டில், கொடிப்படை, எரியும், சிறிது, மிகச், கண்டனம்

