தமிழ் - தமிழ் அகரமுதலி - துறப்பணவலகு முதல் - துனாவி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துறப்பணவலகு | துறப்பணக்கோலிலுள்ள ஊசி . |
| துறப்பு | பிரிவு ; துறவு ; பூட்டு ; திறவுகோல் ; விடுதல் ; துறவிகளுக்கு விதித்துள்ள அறம் . |
| துறம் | காண்க : துறவு . |
| துறவர் | முனிவர் ; துறந்தவர் . |
| துறவறம் | இல்லறந்துறத்தல் ; பற்றற்ற நிலை ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவி | சன்னியாசி ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவு | விடுதல் ; இரகசியம் ; வாய்ப்பான நிலை ; வெளியிடம் ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவோர் | முனிவர் . |
| துறு | நெருக்கம் ; உண்ணுகை ; செம்பூரான்கல் . |
| துறுகல் | பாறை ; குன்று ; நீர்க்கால் அடைக்குங்கல் . |
| துறுட்டி | ஏலவகை . |
| துறுத்தல் | அமைத்தல் ; அமுக்கல் ; திணித்தல் ; வெளியே நீளல் . |
| துறுதல் | நெருங்குதல் ; குவிதல் ; அடைதல் ; சூட்டுதல் . |
| துறுதுறுவெனல் | காண்க : துருதுருவெனல் . |
| துறுபடை | போர்ப்படை . |
| துறுபவம் | நெருக்கம் . |
| துறும்புதல் | காண்க : துறுமுதல் . |
| துறுமல் | நெருக்கம் ; திரட்சி . |
| துறுமுதல் | நெருங்குதல் ; திரட்டல் . |
| துறுவல் | நெருங்குகை ; நுகர்ச்சி ; உண்ணல் . |
| துறுவுதல் | நெருங்குகை ; நுகர்ச்சி ; உண்ணல் . |
| துறை | இடம் ; நீர்த்துறை ; நியாயவழி ; பகுதி ; உபாயம் ; சபை கூடுமிடம் ; ஆறு ; வண்ணார்துறை ; கடல் ; கடற்றுறை ; நூல் ; வரலாறு ; அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு ; பாவினங்களில் ஒன்று ; அலுவலகத் துறை , இலாகா . |
| துறைக்குறை | ஆற்றிடைக்குறை , துருத்தி . |
| துறைகாட்டுதல் | வழிகாட்டுதல் . |
| துறைகூட்டுதல் | துறைமுழுக்கைப் பூர்த்திசெய்தல் . |
| துறைத்தோணி | கரைகடத்துந் தோணி . |
| துறைப்பேச்சு | கொச்சைப்பேச்சு ; நாட்டு மொழி . |
| துறைபடிதல் | நீர்நிலைகளில் நீராடுதல் . |
| துறைபிடித்தல் | துறைமுகம் சேர்தல் ; வழிவகை ; தேடுதல் ; மனத்துக்கு ஏற்றதாதல் . |
| துறைபோதல் | நிரம்புதல் ; செயல் முடிவாதல் ; முழுமையுங் கற்றுத்தெளிதல் . |
| துறைமாறுதல் | முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல் ; வழிதவறுதல் . |
| துறைமுகம் | கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை ; கடற்கரைப்பட்டினம் . |
| துறைமுழுக்கு | ஐப்பசித் திங்களில் பெண்கள் ஆற்றில் முறைப்படி நீராடுகை ; துறை மூழ்கல் . |
| துறைமுன்றில் | வீட்டின் முற்றம் . |
| துறைவன் | நெய்தல்நிலத் தலைவன் . |
| துன் | வளை . |
| துன்பம் | மனவருத்தம் ; மெய்வருத்தம் ; நோய் ; கெடுதி ; வறுமை . |
| துன்பன் | துன்பமுள்ளவன் . |
| துன்பு | காண்க : துன்பம் . |
| துன்புறுத்துதல் | வருத்துதல் . |
| துன்புறுதல் | வருந்துதல் . |
| துன்மதி | கெடுமதி ; தீயோன் ; மூடத்தன்மை , அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தைந்தாம் ஆண்டு . |
| துன்மந்திரி | தீயவுரை சொல்லும் அமைச்சன் . |
| துன்மரணம் | தற்கொலை முதலியவற்றால் நேரும் சாவு . |
| துன்மார்க்கம் | தீநெறி . |
| துன்மார்க்கன் | தீநெறியாளன் . |
| துன்முகி | அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு ; தீய முகத்தோற்றமுள்ளவன் . |
| துன்மை | தீமை . |
| துன்றுதல் | நெருங்குதல் ; கிட்டுதல் ; பொருந்துதல் . |
| துன்றுநர் | நண்பர் . |
| துன்னகாரர் | தையற்காரர் . |
| துன்னநாயகர் | தையற்காரர் . |
| துன்னபோத்து | உழவெருமை . |
| துன்னம் | தையல் ; ஊசித்துளை ; ஒரு மரவகை . |
| துன்னம்பெய்தல் | தைத்தலைக்கொள்ளுதல் . |
| துன்னர் | தையற்காரர் ; தோல்வினைஞர் . |
| துன்னல் | நெருங்கல் ; தைத்தல் ; சிறு திவலை . |
| துன்னலர் | பகைவர் . |
| துன்னாதார் | பகைவர் . |
| துன்னார் | பகைவர் . |
| துன்னிமித்தம் | தீய சகுனம் . |
| துன்னியார் | அடுத்தோர் ; நண்பர் . |
| துன்னீதி | தீயவழி . |
| துன்னீர் | எச்சில் ; கழிவுநீர் . |
| துன்னு | இறைச்சி ; முதுகு ; தசை . |
| துன்னு | (வி) நெருங்கு ; பொருந்து . |
| துன்னுதல் | பொருந்துதல் ; மேவுதல் ; அணுகுதல் ; செறிதல் ; செய்தல் ; அடைதல் ; ஆராய்தல் ; தைத்தல் ; உழுதல் . |
| துன்னுநர் | நண்பர் . |
| துன்னூசி | தையலூசி ; கலப்பையின் கொழு . |
| துன்னெறி | தீயவழி . |
| துனாவி | திப்பிலி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 601 | 602 | 603 | 604 | 605 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துறப்பணவலகு முதல் - துனாவி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விதித்துள்ள, அறம், தையற்காரர், நண்பர், துறவு, துறை, நெருங்குதல், நெருக்கம், பகைவர், துறவியருக்கு, துன்னு, கணக்கில், அறுபதாண்டுக், ஆண்டு, பொருந்துதல், தைத்தல், துன்பம், தீயவழி, நுகர்ச்சி, சன்னியாசம், நிலை, முனிவர், விடுதல், அடைதல், துறுமுதல், கடற்றுறை, உண்ணல், நெருங்குகை, துறைமுகம்

