தமிழ் - தமிழ் அகரமுதலி - துள்ளுமா முதல் - துறப்பணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துள்ளுமா | தேவதைகளுக்கு வெல்லத்துடன் கலந்து படைக்கும் மாவகை . |
| துள்ளொலி | அலை எழும் ஓசை . |
| துளக்கம் | அசைவு ; நடுக்கம் ; மனக்கலக்கம் ; குறைதல் ; சோதிநாள் ; ஒளி . |
| துளக்கு | அசைவு ; வருத்தம் . |
| துளக்குதல் | அசைத்தல் ; விளக்குதல் ; வணங்குதல் . |
| துளங்குதல் | அசைதல் ; நிலைகலங்குதல் ; தளர்தல் ; வருந்துதல் ; ஒலித்தல் ; ஒளிசெய்தல் . |
| துளங்கொளி | மிக்க ஒளி ; கேட்டைநாள் . |
| துளசி | காண்க : குழிமிட்டான் ; திருத்துழாய் . |
| துளசிமணி | திருமாலடியார் அணியும் துளசிக்கட்டையைக் கடைந்து செய்த மணி . |
| துளசிமாடம் | வழிபடப்படும் துளசியைக் கொண்ட மேடை . |
| துளசிமாலை | துளசியிலைக் கொத்தால் கட்டிய மாலை ; துளசிமணிமாலை . |
| துளபம் | காண்க : துளசி . |
| துளம் | காண்க : மாதுளை ; மயிலிறகின் அடி . |
| துளம்பிக்கிரி | ஆதொண்டைக்கொடி . |
| துளர் | பயிரின் களை ; களைக்கொட்டு . |
| துளர்தல் | நிலம் முதலியவற்றைக் கொத்துதல் ; மணம் முதலியன வீசுதல் . |
| துளவம் | காண்க : துளசி . |
| துளவன் | துளசி அணிந்த திருமால் . |
| துளவு | காண்க : துளவம் . |
| துளவை | துளை ; மூங்கிற்பற்றை . |
| துளாரி | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| துளி | திவலை ; மழை ; ஒரு சொட்டு அளவு ; சிறிதளவு ; நஞ்சு ; பெண்ணாமை ; துளித்தல் . |
| துளித்தல் | துளியாய் விழுதல் ; சொட்டுதல் ; மழைபெய்தல் . |
| துளிநசைப்புள் | மழைத்துளி விரும்பும் வானம்பாடி . |
| துளிர் | தளிர் . |
| துளிர்த்தல் | தளிர்த்தல் ; செழித்தல் . |
| துளு | துளுநாடு ; துளுநாட்டு மொழி . |
| துளுப்பிடுதல் | கலக்குதல் . |
| துளும்புதல் | அசைதல் ; தளும்புதல் ; துள்ளுதல் ; மேலெழுதல் ; திமிறுதல் ; வருந்துதல் ; விளங்குதல் ; மிகுதல் ; இளகுதல் ; சோதிவிடுதல் . |
| துளுவம் | காண்க : துளு . |
| துளுவவேளாளர் | துளுவ நாட்டிலிருந்து தொண்டைநாட்டிற்கு வந்து குடியேறிய வேளாளவகையினர் . |
| துளுவன் | ஒரு வாழைவகை ; துளுநாட்டான் . |
| துளை | தொளை ; உட்டுளை ; மூங்கில் ; வாயில் ; சுருட்சி ; வயிரக் குற்றங்களுள் ஒன்று . |
| துளைக்கருவி | உள்ளே துளையுடைய வாத்தியம் . |
| துளைக்கை | தும்பிக்கை . |
| துளைச்செவி | உட்செவி ; உட்செவியுள்ள உயிர்கள் . |
| துளைத்தல் | தொளைசெய்தல் ; ஊடுருவுதல் ; வருத்துதல் ; நுட்பமாய்க் கேட்டல் . |
| துளைதல் | நீரில் விளையாடுதல் ; அழுந்திக்கிடத்தல் . |
| துளைநிறை | காண்க : துளைப்பொன் . |
| துளைப்பு | துளைத்தல் ; இடைவிடாத்தொல்லை . |
| துளைப்பொன் | புடமிட்ட தூய பொன் . |
| துளையடித்தல் | துளைத்தல் ; தொளையுண்டாக்குதல் . |
| துளையம் | நீரில் துளைகை . |
| துற்கதம் | தொல்லை ; வறுமை . |
| துற்கதி | ஒடுங்கிய பாதை ; வறுமை ; கெட்டவிதி ; துன்பக்காலம் ; கெட்ட நடத்தை ; தீய வாழ்க்கை ; நரகம் . |
| துற்கை | காண்க : துர்க்காதேவி . |
| துற்பரிசம் | சிறுகாஞ்சொறி . |
| துற்றர் | உண்பவர் . |
| துற்றவை | நுகர்பொருள் . |
| துற்றி | உண்பவை . |
| துற்று | உணவு ; கவளம் ; கூட்டம் . |
| துற்றுதல் | உண்ணுதல் ; கவ்வுதல் ; குற்றுதல் ; நெருங்குதல் ; மேற்கொண்டு நடத்தல் . |
| துறக்கநாடு | சுவர்க்கம் , தேவருலகம் . |
| துறக்கம் | சுவர்க்கம் , தேவருலகம் . |
| துறட்டி | அங்குசம் ; காய் முதலியன பறிக்குந் துறட்டுக்கோல் ; சிக்கு ; காண்க : துறட்டிச்செடி . |
| துறட்டிச்செடி | ஒரு முட்செடிவகை . |
| துறட்டிபோடுதல் | இரகசியத்தை உசாவி உளவறிதல் ; தன்வயப்படுத்த முயலுதல் . |
| துறட்டிரும்பு | இரும்புக்கொக்கி . |
| துறட்டு | முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; கேடு . |
| துறட்டுக்கோல் | காய் முதலியன பறிக்க உதவும் கோல்வகை . |
| துறட்டுப்பிடி | காண்க : துறட்டுவாதம் . |
| துறட்டுமுள் | இரும்புக்கொக்கி ; துறட்டிச்செடி . |
| துறட்டுவாதம் | பிடிவாதம் . |
| துறடு | அங்குசம் ; காய் முதலியன பறிக்கும் துறட்டுக்கோல் ; சிக்கு . |
| துறத்தல் | கைவிடுதல் ; பற்றற்றுத் துறவுபூணுதல் ; நீங்குதல் . |
| துறந்தார் | பற்றுவிட்ட முனிவர் . |
| துறந்தோர் | பற்றுவிட்ட முனிவர் . |
| துறப்பணம் | துளையிடும் தச்சுக்கருவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 600 | 601 | 602 | 603 | 604 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துள்ளுமா முதல் - துறப்பணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியன, துளசி, துறட்டிச்செடி, துளைத்தல், காய், துறட்டுக்கோல், அங்குசம், தேவருலகம், இரும்புக்கொக்கி, முனிவர், பற்றுவிட்ட, துறட்டுவாதம், சுவர்க்கம், சிக்கு, நீரில், துளை, துளவம், வருந்துதல், அசைதல், ஒன்று, துளித்தல், துளைப்பொன், அசைவு, துளு, வறுமை

