தமிழ் - தமிழ் அகரமுதலி - துர்ப்பலம் முதல் - துருக்கம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துர்ப்பலம் | வலுவின்மை ; தாழ்நிலை . |
| துர்ப்பலன் | வலியற்றவன் ; கோள் முதலியவற்றின் தீப்பயன் . |
| துர்ப்பிட்சம் | பஞ்சம் . |
| துர்ப்புத்தி | கெடுமதி ; தீய கொள்கை ; கெடுமதியுடையோர் ; தீயுரை . |
| துர்மரணம் | தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு . |
| துர்லபம் | பெறுதற்கரியது . |
| துர்வாதம் | நேர்மையற்ற வாதம் . |
| துர்விநியோகம் | தீயவழியில் செலவிடுகை . |
| துரக்கு | ஐயப்பாடு . |
| துரகதம் | குதிரை . |
| துரகதாமன் | அசுவத்தாமன் . |
| துரகம் | குதிரை ; காண்க : குதிரைத்தறி , குதிரைப்பல் பாடாணம் . |
| துரங்கம் | குதிரை ; மனம் . |
| துரங்கமம் | குதிரை . |
| துரங்கவதனன் | குதிரை முகத்தையுடையவனான கின்னரன் . |
| துரங்காரி | எருமை . |
| துரங்கி | குதிரைக்காரன் . |
| துரட்டன் | தீநெறி ஒழுகுபவன் . |
| துரட்டு | முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; அபாயம் . |
| துரத்தல் | ஓட்டிச் செலுத்துதல் ; எய்தல் ; போக்குதல் ; அடித்தல் ; தூண்டுதல் ; முடுக்கி உட்செலுத்துதல் ; முயலுதல் ; வீசுதல் ; எரிதல் ; போதல் . |
| துரத்துதல் | வெருட்டி ஓட்டுதல் ; அப்புறப்படுத்துதல் ; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல் ; வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல் . |
| துரதிட்டம் | நல்வினையின்மை , நற்பேறின்மை . |
| துரந்தரம் | பொதியெருது ; பொறுப்பு . |
| துரந்தரன் | பொறுப்பு ஏற்பவன் ; முயன்று நிற்போன் ; வெற்றிபெற்றவன் . |
| துரந்தரி | பொறுப்பு ஏற்போள் . |
| துரப்பணம் | காண்க : துறப்பணம் . |
| துரப்பு | முடுக்குதல் ; அகற்றுதல் ; மலையிற் குடையப்பட்ட பாதை . |
| துரப்புதல் | தேடுதல் . |
| துரபிமானம் | தகாத இடத்தில் வைக்கப்பட்ட பற்று ; வீண்பெருமை ; வெறுப்பு . |
| துரம் | பொறுப்பு ; சுமை ; ஓர் இசைக்கருவி ; கோயிற்குரிய வரிவசூலிக்கும் அலுவலகம் . |
| துரமி | தொடரிச்செடி ; தூதுளைக்கொடி . |
| துரவு | பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு ; மணற்கேணி ; தூது . |
| துரவுவாரகம் | கிணறுவெட்டக் கொடுக்கும் கடன் . |
| துராகதம் | உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை . |
| துராகிருதம் | உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை . |
| துராசர் | கெட்ட ஆசையை உடையவர் . |
| துராசாரம் | தீயொழுக்கம் ; அவமரியாதை ; ஒழுக்கக்கேடு . |
| துராசாரி | தீயொழுக்கமுடையான்(ள்) . |
| துராசை | தகாத இச்சை . |
| துராத்தியம் | ஏழைமை . |
| துராத்துமா | தீயோன் . |
| துராய் | அறுகம்புல்லால் திரித்த பழுதை ; தலையணிவகை ; செடிவகை . |
| துராய்க்கட்டை | தரா என்னும் உலோகத்தாற் செய்த பாத்திரம் . |
| துராரம்பலம் | தீச்செயல் . |
| துரால் | செத்தை ; துன்பம் . |
| துராலபம் | சிறுகாஞ்சொறிக்செடி ; அடைதற்கு அரியது . |
| துராலோசனை | தீய யோசனை . |
| துராலோபம் | சிறுகாஞ்சொறிக்செடி . |
| துரி | எழுதுகோல் ; பாரம் ; பாவாற்றி . |
| துரிசு | துன்பம் ; குற்றம் ; குறும்பு ; மயில் துத்தம் . |
| துரிஞ்சில் | வௌவால்வகை ; சீக்கிரிமரம் . |
| துரிதம் | விரைவு , வேகம் , ஆடல்பாடல்களில் தாள விரைவு ; பாவம் ; கலக்கம் ; கேடு . |
| துரியசிவன் | மும்மூர்த்திகட்கும் மேலான சிவன் . |
| துரியத்தானம் | ஆன்மா துரியநிலையில் அடங்குவதற்குரிய உந்திப்பகுதி . |
| துரியம் | நான்காவது ; நான்காம் அவத்தை ; யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ; பொதியெருது ; சுமத்தல் . |
| துரியன் | சுத்தான்மா ; கடவுள் . |
| துரியாதீதம் | துரியம் என்னும் நான்காம் நிலைக்கும் மேம்பட்ட ஐந்தாம் நிலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| துரீ | நெசவுப் பாவாற்றி . |
| துரீயம் | பொதியெருது ; சுமக்கை . |
| துரீலெனல் | எதிர்பாராது விரைந்துவருதற்குறிப்பு . |
| துரு | இருப்புக்கறை ; களிம்பு ; குற்றம் ; செம்மறியாடு ; வேதம் முதலியன ஓதும் சந்தவகை ; மரவகை . |
| துருக்கம் | செல்லுதற்கு அரிய இடம் ; ஒடுக்க வழி ; மலையரண் ; மதில் ; குறிஞ்சிநிலம் ; காடு ; கலக்கம் ; கத்தூரி ; காண்க : குங்குமம் , குங்குமமரம் ; காண்க : குந்துருக்கம் ; கத்தூரிமான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 595 | 596 | 597 | 598 | 599 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துர்ப்பலம் முதல் - துருக்கம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குதிரை, பொறுப்பு, காண்க, பொதியெருது, கெட்ட, துன்பம், பாவாற்றி, சிறுகாஞ்சொறிக்செடி, கலக்கம், நான்காம், துரியம், என்னும், விரைவு, குற்றம், நடத்தை, இல்லாவிடத்து, உரிமை, தகாத, வலிய, நிகழ்த்தும், கற்பழிப்பு, பலவந்தக், செயல், நிந்தை

