தமிழ் - தமிழ் அகரமுதலி - துப்பன் முதல் - துமித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துப்பன் | வலிமையுள்ளவன் ; ஒற்றன் . |
| துப்பாக்கி | துமுக்கி ; சுடுங்கருவி ; கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய் . |
| துப்பாக்கிக்குதிரை | துப்பாக்கி சுடுதற்குக் கையினால் இழுத்துவிடும் உறுப்பு . |
| துப்பாசி | இடைநின்று மொழிபெயர்ப்போன் ; ஐரோப்பியரின் வாணிகத்தில் இடைநின்று உதவும் இந்தியத் தரகன் . |
| துப்பார் | உண்பவர் . |
| துப்பிரசம் | கருஞ்சுண்டிமரம் . |
| துப்பு | வலிமை ; அறிவு ; திறமை ; ஆராயச்சி ; முயற்சி ; பெருமை ; துணை ; ஊக்கம் ; பொலிவு ; நன்மை ; பற்றுக்கோடு ; தன்மை ; தூய்மை ; உளவு ; பகை ; பவளம் ; அரக்கு ; சிவப்பு ; நுகர்ச்சி ; நுகர்பொருள் ; உணவு ; துரு ; உமிழ்நீர் ; நெய் ; ஆயுதப்பொது . |
| துப்பு | (வி) துப்புஎன் ஏவல் ; காறியுமிழ் . |
| துப்புக்கூலி | உளவு கண்டுபிடித்தற்கு உதவும் பொருள் . |
| துப்புக்கெட்டவன் | திறமையில்லாதவன் ; அறிவற்றவன் ; அழுக்குப் பிடித்தவன் . |
| துப்புக்கேடு | சீர்கேடு . |
| துப்புண்ணி | சீர்கெட்டவர் . |
| துப்புத்துருப்பிடித்தல் | உளவு கண்டுபிடித்தல் ; விவரமாக விசாரித்தல் . |
| துப்புத்துருவிவிசாரித்தல் | உளவு கண்டுபிடித்தல் ; விவரமாக விசாரித்தல் . |
| துப்புதல் | உமிழ்தல் . |
| துப்புரவாய் | தூய்மையாய் ; முழுதும் . |
| துப்புரவு | தூய்மை ; நுகர்ச்சிப்பொருள் ; ஐம்பொறி நுகர்ச்சி ; அனுபவம் ; திறமை ; முறைமை ; மேன்மை ; வேண்டற்பாடு ; அழகு . |
| துபாக்கி | காண்க : துப்பாக்கி . |
| துபாசி | காண்க : துப்பாசி . |
| தும் | தூசி ; இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி . |
| தும்சம் | அழிவு . |
| தும்பகா | காண்க : தும்பை . |
| தும்படைசி | நாடாவில் ஓர் உறுப்பு . |
| தும்பரம் | அத்திமரம் . |
| தும்பராட்டகம் | காண்க : பேரரத்தை . |
| தும்பன் | தீயவன் . |
| தும்பால் | இறையிலிநிலம் . |
| தும்பாலை | சுரைக்கொடி . |
| தும்பி | யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை . |
| தும்பிக்கை | யானைத் துதிக்கை . |
| தும்பிச்சி | கற்பில்லாதவள் ; பழைய நாணயவகை . |
| தும்பிப்பதக்கம் | வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட அணிவகை . |
| தும்பியூதுதல் | வண்டுபோல ஒலித்தல் ; ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல் ; எச்சில் , சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக் குமிழி உண்டாக்குதல் . |
| தும்பிலி | ஒரு மரவகை ; கடல்மீன்வகை . |
| தும்பினி | மின்மினிப்பூச்சி . |
| தும்பு | கயிறு ; நார் ; சிம்பு ; தாலியுரு ; நெருஞ்சி ; கரும்பு ; வரம்பு ; தூசி ; குற்றம் ; அநாகரிகச் சொல் . |
| தும்புக்கட்டு | தேங்காய் நாரால் செய்த துடைப்பம் . |
| தும்புக்கயிறு | தென்னை , பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ; மாட்டுத்தும்பு . |
| தும்புதட்டுதல் | நையப் புடைத்தல் . |
| தும்புபோடுதல் | கயிறு திரித்தல் ; துருவியறிதல் . |
| தும்புரு | யாழ்வகை ; ஒரு கந்தருவன் . |
| தும்புவெட்டு | ஆடையின் ஓரத்தைக் கத்தரித்தல் . |
| தும்பை | ஒரு செடிவகை ; போர் செய்வோர்அணியும் அடையாளமலை ; போர் ; தும்பைத்திணை ; கூட்டம் ; வெற்றிலை ; ஒரு மீன்வகை ; தானியவகை . |
| தும்பைத்திணை | பெருவீரச் செயல் காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக் கூறும் பகுதி . |
| தும்பைமாலை | தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் நூல்வகை . |
| தும்மட்டி | சிறுகொம்மட்டி . |
| தும்மல் | தும்முதல் ; மூச்சு . |
| தும்மற்காதல் | தும்மலைக்கொண்டு குறி சொல்லுகை . |
| தும்மு | தும்முதல் ; கொசு . |
| தும்முட்டி | சிறுகொம்மட்டி . |
| தும்முதல் | தும்மல் ; மூச்சுத் தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய்வழியாய் வெளிவருதல் ; விடுதல் ; மூச்சுவிடுதல் . |
| துமாலா | இறையிலிநிலம் ; வெள்ளி அல்லது பொன்சரிகை யிழுக்கும் தொழிலின் கடைசிச் செயல் . |
| துமானம் | அணிகலப்பெட்டி . |
| துமி | வெட்டு ; தூறல் ; மழைத்துளி ; நீர்த்துளி . |
| துமித்தல் | வெட்டுதல் ; அறுத்தல் ; விலக்குதல் ; துளித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 593 | 594 | 595 | 596 | 597 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துப்பன் முதல் - துமித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உளவு, கயிறு, போர், துப்பாக்கி, தும்முதல், மூச்சு, கற்பில்லாதவள், கரும்பு, மீன்வகை, நாரால், தும்பைத்திணை, சிறுகொம்மட்டி, தும்மல், தும்பைமாலை, கூறும், செயல், சுரைக்கொடி, தும்பை, துப்பு, திறமை, உதவும், இடைநின்று, உறுப்பு, துப்பாசி, தூய்மை, நுகர்ச்சி, தூசி, சொல், விசாரித்தல், விவரமாக, கண்டுபிடித்தல், இறையிலிநிலம்

