முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » துடைப்பக்கட்டை முதல் - துணுங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - துடைப்பக்கட்டை முதல் - துணுங்குதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
துடைப்பக்கட்டை | காண்க : துடைப்பம் ; தேய்ந்த துடைப்பம் . |
துடைப்பம் | விளக்குமாறு . |
துடையரசு | காண்க : விடமூங்கில் . |
துடைவாழை | தொடையில் உண்டாகும் கட்டிவகை ; அரையாப்புக்கட்டி . |
துடைவை | காண்க : துடவை . |
துண்டம் | துண்டு ; சிறுதுணி ; பிரிவு ; சிறிய வயற்பகுதி ; சிறிய வாய்க்கால் ; மூக்கு ; பறவை யலகு ; யானைத் துதிக்கை ; ஆயுதவலகு ; சாரைப்பாம்பு ; மீன்துண்டம் . |
துண்டமதி | பிறைச்சந்திரன் . |
துண்டமிழுத்தல் | தோட்டங்களில் சிறுவாய்க்கால் அமைத்தல் . |
துண்டரிக்கம் | கொடுமை ; தொல்லை ; கண்டிப்பு ; முகக்களை . |
துண்டரிகம் | கொடுமை ; தொல்லை . |
துண்டன் | கொலைஞன் . |
துண்டாடுதல் | துண்டுதுண்டாக வெட்டுதல் . |
துண்டாயம் | பொற்பணம் ; பொன்மணல் . |
துண்டி | துண்டுநிலம் ; கொப்பூழ் ; பறவையலகு . |
துண்டி | (வி) பிள ; வெட்டு ; கூறுபடுத்து . |
துண்டிகை | கொப்பூழ . |
துண்டித்தல் | சுருக்கிப்பேசுதல் ; வெட்டல் ; மரித்தல் ; கிழித்தல் ; கண்டித்தல் ; மறுத்தல் . |
துண்டில் | மூங்கில் . |
துண்டீரபுரம் | துண்டீரனது நகரமான காஞ்சிபுரம் . |
துண்டு | சிறுதுணி ; சீட்டு ; கையொபபச் சீட்டு ; பாக்கி ; இழப்பு ; கூறு ; புகையிலைக்கட்டு ; வெற்றிலைக்கட்டு ; மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி ; தனியானது . |
துண்டுகத்திரி | ஒரு நச்சுப்புழுவகை . |
துண்டுதுடுக்கு | சிறு துணுக்கு ; தீண்டக்கூடாத பொருள் . |
துண்டுந்துணியுமாக | துண்டுதுண்டாக . |
துண்டுப்பத்திரிகை | தனிக் கடிதமாக வெளியிடும் செய்திச்சீட்டு . |
துண்டுபடுதல் | வேண்டிய அளவுக்குமேல் மிச்சப்பகுதி அமைதல் ; வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல் ; இழப்புண்டாதல் . |
துண்டுவிழுதல் | வேண்டிய அளவுக்குமேல் மிச்சப்பகுதி அமைதல் ; வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல் ; இழப்புண்டாதல் . |
துண்ணிடுதல் | அச்சம் முதலியவற்றால் ; திடுக்கிடுதல் . |
துண்ணெனல் | திடுக்கிடுதற்குறிப்பு ; அச்சக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
துணங்கல் | கூத்து . |
துணங்கறல் | இருள் திருவிழா . |
துணங்கு | இருள் . |
துணங்கை | பேய் ; முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியாடும் கூத்துவகை ; திருவிழா ; திருவாதிரைநாள் . |
துணதுணத்தல் | விடாதுபேசுதல் . |
துணர் | பூ ; பூங்கொத்து ; பூந்தாது ; குலை . |
துணர்த்தல் | கொத்துடையதாதல் . |
துணர்தல் | கொத்துடையதாதல் . |
துணரி | பூங்கொத்து . |
துணவு | விரைவு ; நுணாமரம் . |
துணி | ஒளி ; தெளிவு ; துண்டம் ; மரவுரி ; சோதிநாள் ; உறுதி ; ஆடை ; தொங்கல் ; தேரில் கட்டிய கொடி . |
துணிக்கை | சிறுதுண்டு . |
துணிகரம் | துடுக்கு . |
துணிகரித்தல் | துணிவுகொள்ளுதல் , ஊக்கங் கொள்ளுதல் . |
துணிச்சல் | காண்க : துணிகரம் . |
துணித்தல் | வெட்டுதல் . |
துணிதல் | வெட்டுண்ணுதல் ; நீங்குதல் ; கிழிதல் ; தெளிவாதல் ; உறுதிசெய்தல் ; ஊக்கமடைதல் ; தொடங்குதல் . |
துணிதாண்டுதல் | ஆடையைத் தாண்டிச் சத்தியம் பண்ணுதல் ; உறுதிமொழி கூறுதல் . |
துணிந்தவன் | எதற்கும் அஞ்சாதவன் . |
துணிந்துமணியங்கட்டுதல் | பிடிவாதமாயிருத்தல் ; ஊக்கத்தோடு முயலுதல் . |
துணிநிலா | பிறைச்சந்திரன் . |
துணிபு | காண்க : துணிவு ; கொள்கை . |
துணிபொருள் | துணிந்த மெய்ப்பொருள் ; உறுதி செய்யப்பட்ட பொருள் ; சித்தாந்தம் ; தத்துவம் ; பரம்பொருள் . |
துணியல் | துண்டு . |
துணிவு | தெளிவு ; மனத்திட்பம் ; நம்பிக்கை ; நோக்கம் ; துண்டு ; ஆண்மை ; துணிச்சல் ; உறுதி ; முடிவு ; கொள்கை ; தாளம் ; கைக்கிளை வகையுள் ஒன்று . |
துணிவுவமை | உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை . |
துணுக்கம் | நடுக்கம் ; அச்சம் ; உள்ளோசை . |
துணுக்கிடுதல் | திடுக்கிடுதல் ; அஞ்சுதல் . |
துணுக்கு | துண்டு ; காண்க : துணுக்கம் . |
துணுக்குறுதல் | அச்சங்கொள்ளுதல் . |
துணுக்கெறிதல் | அச்சத்தால் துள்ளுதல் . |
துணுக்கெனல் | அச்சக்குறிப்பு . |
துணுக்கை | காண்க : துணியல் . |
துணுங்குதல் | வெருவுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 591 | 592 | 593 | 594 | 595 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துடைப்பக்கட்டை முதல் - துணுங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துண்டு, வேண்டிய, உறுதி, துடைப்பம், இருள், திருவிழா, துணுக்கம், திடுக்கிடுதல், அச்சம், பூங்கொத்து, இழப்புண்டாதல், கொத்துடையதாதல், துணிவு, கொள்கை, துணிச்சல், துணிகரம், தெளிவு, குறைவுபடுதல், துணியல், மிச்சப்பகுதி, கொடுமை, தொல்லை, பிறைச்சந்திரன், சிறிய, துண்டம், சிறுதுணி, துண்டுதுண்டாக, வெட்டுதல், அளவுக்குமேல், அமைதல், பொருள், துணுக்கு, துண்டி, சீட்டு, அளவுக்குக்