தமிழ் - தமிழ் அகரமுதலி - துக்கி முதல் - துட்டக்கிளவி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துக்கி | துயரமுடையோன் ; துயரமுடையோள் . |
| துக்கித்தல் | மனம் வருந்துதல் . |
| துக்கிதம் | துன்பம் . |
| துக்கிதன் | துயரமுடையோன் . |
| துக்கு | கீழ்மை ; பயனின்மை ; உதவாதவன் ; உதவாதது ; துரு ; துவக்கு என்னும் தோல் . |
| துக்குடி | காண்க : துக்கடி . |
| துக்குணி | மிகச் சிறியது . |
| துக்குப்பிடித்தவன் | பயனற்றவன் . |
| துக்கை | துர்க்கை ; மகளிர் மாதத்தீட்டு . |
| துக்கோற்பத்தி | வாய்மை நான்கனுள் அவாவே எல்லாவகைத் துயரத்திற்கும் காரணம் என்னும் பௌத்தமதக் கொள்கை . |
| துகத்தல் | கசத்தல் . |
| துகம் | நிலத்தாக்கு ; பங்கு . |
| துகள் | தூளி ; குற்றம் ; பூந்தாது . |
| துகளிதம் | தூளி . |
| துகளிலி | குற்றமற்றவனான கடவுள் . |
| துகிதை | மகள் . |
| துகிர் | பவளம் , பவளக்கொடி . |
| துகிர்த்தாளி | காண்க : பவழமல்லிகை . |
| துகிரிகை | எழுதுகோல் ; சாந்து ; சித்திரம் . |
| துகில் | நல்லாடை ; துணிக்கொடி ; விருதுக்கொடி . |
| துகிலிகை | எழுதுகோல் ; சித்திரம் ; துணிக்கொடி . |
| துகிற்கிழி | உறை . |
| துகிற்பீசம் | பருத்திவிதை . |
| துகின்மனை | கூடாரம் . |
| துகின்முடி | தலைப்பாகை . |
| துகின்முடித்தல் | தலைப்பாகை கட்டுதல் . |
| துகினசயிலம் | பனிமலையான இமயமலை . |
| துகினம் | பனி ; நிலாவின் கதிர் . |
| துகினூல் | வெண்ணூல் . |
| துகு | வருத்தம் . |
| துகுத்தல் | தொகுதியாக்குதல் . |
| துகுதல் | தொகுதியாதல் . |
| துகுதுகுவெனல் | பெருங்கூட்டம் வருகையில் எழும் ஒலிக்குறிப்பு . |
| துகூலம் | நுண்ணிய சீலை ; வெண்பட்டு . |
| துகைத்தல் | மிதித்துழக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; திரிதல் . |
| துகையல் | தேங்காய் காய்கறிகளை அரைத்துச் செய்யும் உணவின் துணைப்பொருள்வகை . |
| துங்கசேகரம் | மலை . |
| துங்கதை | உயர்ச்சி ; பெருமை . |
| துங்கபத்திரி | துங்கபத்திரையாறு . |
| துங்கம் | உயர்வு ; அகலம் ; பெருமை ; நுனி ; தூய்மை ; மலை ; வெற்றி ; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம் . |
| துங்கரிகம் | காவிக்கல் . |
| துங்கன் | தூயவன் ; உயர்ந்தோன் ; மேன்மையுடையோன் ; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம் . |
| துங்கி | இரவு . |
| துங்கீசன் | சூரியன் ; சிவன் ; திருமால் ; சந்திரன் . |
| துங்கீபதி | சந்திரன் . |
| துச்சத்தரு | ஆமணக்கு . |
| துச்சதானியம் | பதர் . |
| துச்சம் | இழிவு ; கீழ்மை ; வெறுமை ; பதர் ; நிலையின்மை ; பொய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; இன்மை ; கொம்மட்டி மாதுளைக் கொடி . |
| துச்சரிதம் | தீயொழுக்கம் . |
| துச்சவனன் | இந்திரன் . |
| துச்சன் | இழிந்தவன் . |
| துச்சாரி | தீய நடத்தையுள்ளவன் . |
| துச்சி | உண்ணுகை ; அனுபவம் ; தேர்வு ; பூநீறு . |
| துச்சிமை | கீழ்மை . |
| துச்சில் | ஒதுக்கிடம் ; தங்குமிடம் ; மயில் முதலியவற்றின் கொண்டை . |
| துச்சு | இழிவு . |
| துசகம் | மாதுளைமரம் ; கொம்மட்டிமாதுளை . |
| துசம் | கொடி ; பல் ; உமி ; குங்கிலியம் ; முட்டையில் பிறப்பது . |
| துசன் | பார்ப்பான் . |
| துஞ்சர் | அசுரர் . |
| துஞ்சரித்தல் | கண்விழித்தல் . |
| துஞ்சற | முழுமையும் . |
| துஞ்சு | ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை . |
| துஞ்சுகுழல் | ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை . |
| துஞ்சுதல் | தூங்குதல் ; துயிலுதல் ; சோம்புதல் ; தொழிலின்றி இருத்தல் ; சோர்தல் ; இறத்தல் ; வலியழிதல் ; குறைதல் ; தொங்குதல் ; தங்குதல் ; நிலைபெறுதல் . |
| துஞ்சுநிலை | கட்டில் . |
| துஞ்சுமரம் | மதில் வாயிலில் இடும் கணையமரம் ; கழுக்கோல் . |
| துஞ்சுமன் | சோம்பலுள்ளவன் . |
| துஞ்சை | காண்க : துஞ்சுகுழல் . |
| துட்கரம் | வருந்தி முடித்தற்குரியது . |
| துட்கிரமம் | ஒழுங்கற்றது ; எட்டாதது . |
| துட்கு | அச்சம் . |
| துட்குதல் | அச்சங்கொள்ளுதல் . |
| துட்கெனல் | அச்சக்குறிப்பு . |
| துட்சணத்துவம் | குறும்புத்தனம் . |
| துட்சணம் | குறும்புத்தனம் ; அவையில் கூறத்தகாத சொல் . |
| துட்டக்கிளவி | தீய சொல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 589 | 590 | 591 | 592 | 593 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துக்கி முதல் - துட்டக்கிளவி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சந்திரன், கொடி, காண்க, சொல், கீழ்மை, ஐம்பால்களுள், இழிவு, பதர், பின்னித், தொங்கவிட்ட, குறும்புத்தனம், துஞ்சுகுழல், கூந்தல்வகை, தூரம், அதிக, துணிக்கொடி, சித்திரம், எழுதுகோல், தூளி, தலைப்பாகை, பெருமை, செல்லும், துயரமுடையோன், கதிவலயத்திலிருந்து, என்னும்

