முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தீவளர்த்தல் முதல் - துக்காதீதம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தீவளர்த்தல் முதல் - துக்காதீதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தீவளர்த்தல் | உடன்கட்டையேறல் முதலியவற்றிற்கு நெருப்பு வளர்த்தல் ; வேள்வித்தீயைப் பெருக்குதல் . |
| தீவளர்ப்போர் | முத்தீயைப் பேணுவோராகிய அந்தணர் ; முனிவர் . |
| தீவளி | கடுங்காற்று . |
| தீவறை | பெருநெருப்பெரிக்கும் குழியடுப்பு . |
| தீவனம் | பசி ; கால்நடைகளின் உணவு . |
| தீவாணம் | அரசாட்சி ; அறங்கூறவையம் . |
| தீவாந்தரம் | தூரத்தீவு . |
| தீவாளி | காண்க : தீபாவலி(ளி) . |
| தீவாளிகுளித்தல் | வீண்செலவு செய்து வறியவனாதல் . |
| தீவாளியாதல் | கடனால் நிலைகுலைதல் . |
| தீவான் | காண்க : திவான் ; தீவில் வாழ்பவன் ; எரிக்கப்படத்தக்க புல்லன் . |
| தீவானம் | பைத்தியம் . |
| தீவி | புலி ; பறவைவகை . |
| தீவிகை | விளக்கு . |
| தீவிதிராட்சம் | வெளிநாட்டுக் கொடிமுந்திரிகை . |
| தீவிய | இனிமையான . |
| தீவிரகந்தம் | துளசி . |
| தீவிரம் | விரைவு ; கடுமை ; கொடுமை : சூரியக்கதிர் ; உறைப்பு ; ஒரு நரகம் ; பெருங்கோபம் . |
| தீவிரித்தல் | விரைவுபடுத்துதல் ; கொடுமையாதல் . |
| தீவிழித்தல் | சினத்துடன் பார்த்தல் . |
| தீவிளி | காயாமரம் ; பசுங்காய் ; கொடுஞ்சொல் , கடுங்காற்று ; தீபாவளி . |
| தீவினை | பாவம் ; கொடுஞ்செயல் ; அக்கினி காரியம் ; தீ வழிபாடு . |
| தீவினையச்சம் | தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் . |
| தீவு | நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம் ; தொலை நாடு ; பயிர் கரிந்துபோதல் ; இனிமை . |
| தீவுக்குருவி | அயல்நாட்டுப் பறவை . |
| தீவுச்சரக்கு | வெளிநாட்டுச் சரக்கு . |
| தீவேட்டல் | திருமணஞ்செய்தல் ; வேள்வி செய்தல் . |
| தீவேள்வி | தீச்சான்றாகச் செய்யும் மணவினை . |
| தீழ்ப்பு | கீழ்மை ; தீட்டு . |
| தீற்றுதல் | சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ; ஊட்டுதல் ; பூசுதல் ; மெழுகுதல் ; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் ; கயிற்றின் முறுக்காற்றுதல் ; பல்விளக்குதல் . |
| தீன் | மதம் ; உணவு . |
| தீன்பண்டம் | காண்க : தின்பண்டம் . |
| தீனக்காரன் | நோயாளி . |
| தீனபந்து | எளியார்க்கு அன்பன் ; கடவுள் . |
| தீனம் | வறுமை ; நோய் ; கொடுமை ; நட்பு . |
| தீனரட்சகன் | எளியவரைக் காப்பவன் ; கடவுள் . |
| தீனன் | வறியவன் ; இரப்போன் ; தீம்பன் ; பெருந்தீனி தீன்பவன் . |
| தீனி | கொழுத்த உணவு ; சிற்றுண்டி ; விலங்குணவு . |
| தீனிப்பை | இரைப்பை . |
| து | ஒர் உயிர் மெய்யெழுத்து (த்+உ) ; உணவு ; அனுபவம் ; பிரிவு ; ஒருமைத் தன்மை விகுதி ; சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன் பால் குறிக்கும் விகுதி ; ஒன்றன்பால் விகுதி ; பகுதிப்பொருள் விகுதி . |
| துக்கக்காரன் | இழவு கொண்டாடுவோன் . |
| துக்ககன் | துயரமுள்ளோன் . |
| துக்கங்கேட்டல் | இழவு விசாரித்தல் . |
| துக்கங்கொண்டாடுதல் | இழவு கொண்டாடுதல் . |
| துக்கசகிதர் | மானிடர் . |
| துக்கசாகரம் | துயர்க்கடலாகிய பெருந்துயர் . |
| துக்கடா | சிறு துண்டு ; உணவிற்குரிய பச்சடி முதலிய துணை உணவுப்பொருள் ; மிகச் சிறிதான . |
| துக்கடி | சிறு துண்டு ; நிலப்பகுதி . |
| துக்கத்திரயம் | ஆதிதெய்விகம் , ஆதியான்மிகம் , ஆதிபௌதிகம் என்னும் மூவகைத் துன்பங்கள் . |
| துக்கநிவாரணம் | துயரிலிருந்து விடுபடுகை ; அவா என்னும் பற்றுவிட்டு நிற்கும் நிலையே வீடு என்னும் பௌத்தமதக் கொள்கை . |
| துக்கநிவாரணமார்க்கம் | வாய்மை நான்கனுள் பற்று இல்லாமையே துக்க நீக்கத்திற்கு வழி என்னும் பௌத்தமதக் கொள்கை . |
| துக்கம் | துன்பம் ; வாய்மை நான்கனுள் உலகப பிறப்பே துன்பம் என்று கூறும் பௌத்த மதக்கொள்கை ; நோய் ; சயரோகம் ; நரகம் ; வானம் . |
| துக்கர் | காசநோயாளிகள் . |
| துக்கரம் | செய்தற்கரியது . |
| துக்கராகம் | இழவுக்குரிய பண்வகை ; பாலை யாழ்த்திறவகை . |
| துக்கவீடு | இழவு கொண்டாடும் வீடு . |
| துக்காணி | இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம் . |
| துக்காதீதம் | இன்பம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 588 | 589 | 590 | 591 | 592 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தீவளர்த்தல் முதல் - துக்காதீதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், விகுதி, இழவு, உணவு, சிறு, காண்க, பௌத்தமதக், துன்பம், நான்கனுள், கொள்கை, வீடு, வாய்மை, துண்டு, நரகம், கடவுள், நோய், கடுங்காற்று, கொடுமை

