தமிழ் - தமிழ் அகரமுதலி - தா முதல் - தாசநம்பி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தா | ஒர் உயிர்மெய்யெழுத்து ( த் + ஆ) வலிமை ; வருத்தம் ; கேடு ; குற்றம் ; பகை ; பாய்கை ; குறை . |
| தா | (வி) தா என்னும் ஏவல் ; ஒத்தவர் தமக்குள் ஒன்றை வேண்டிச் சொல்லும் சொல் . |
| தாஅம் | பரக்கும் . |
| தாஅயது | தாவியது ; கடந்தது . |
| தாஅவண்ணம் | இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம் . |
| தாஅனாட்டித் தனாஅது நிறுப்பு | எழுவகை மதங்களுள் தானே ஒரு பொருளைப் புதிதாய் எடுத்துக்கூறி அதனை நிலைநிறுத்துகை . |
| தாக்கடைப்பன் | மாட்டுநோய்வகை . |
| தாக்கணங்கு | தீண்டி வருத்துந் தெய்வம் ; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் ; திருமகள் ; உமாதேவியாரின் பரிவாரப் பெண் பூதங்களுள் ஒருவகை . |
| தாக்கணித்தல் | மெய்ப்பித்துக் காட்டல் . |
| தாக்கம் | தாக்கு ; எதிர்தாக்குகை ; வேகம் ; கனத்திருக்கை ; மிக்கிருக்கை ; வீக்கம் ; முதற்கொண்டு . |
| தாக்கல் | எதிர்த்தல் ; பாய்ந்து மோதுகை ; பதிகை ; தகவல் ; சுவாதீனப்படுத்துகை ; செய்தி ; சம்பந்தம் . |
| தாக்காட்டுதல் | நாட்கடத்தி ஏமாற்றுதல் ; பராக்குக்காட்டல் ; உதவிசெய்தல் ; தந்திரமாய் வயப்படுத்தல் . |
| தாக்காயணி | தக்கன் மகளாகிய உமாதேவி . |
| தாக்கீது | ஆணை . |
| தாக்கு | அடி ; போர் ; படை ; வேகம் ; பாதிக்கை ; சாதனை ; குறுந்தடி ; இடம் ; பெருக்கல் ; நெல்வயல் ; பற்று ; வளமை ; ஆணை ; நிலவறை ; மிகு சுமை ; எதிர்க்கை ; எதிரெழுகை . |
| தாக்குதல் | எதிர்த்தல் ; மோதுதல் ; முட்டுதல் ; பாய்தல் ; தீண்டுதல் ; அடித்தல் ; வெட்டுதல் ; பற்றியிருத்தல் ; எண்கூட்டிப் பெருக்கல் ; குடித்தல் ; சரிக்கட்டுதல் ; உறைத்தல் ; கடுமையாதல் ; பழிவாங்குதல் ; தலையிட்டுக்கொள்ளுதல் ; பலித்தல் ; பெருகுதல் ; பாரமாதல் ; நெளித்துப்போதல் . |
| தாக்கோல் | காண்க : தாட்கோல் . |
| தாகசாந்தி | நீர்வேட்கையைப் போக்குதல் . |
| தாகசுரம் | நீர்வேட்கையை உண்டுபண்ணும் ஒரு சுரநோய்வகை . |
| தாகம் | நீர்வேட்கை ; ஆசை ; காமம் . |
| தாகமடக்கி | புளியாரை என்னும் பூண்டுவகை . |
| தாகமெடுத்தல் | நீரில் விருப்பங்கொள்ளுகை . |
| தாகீது | காண்க : தாக்கீது . |
| தாகித்தல் | நீர்வேட்கை உண்டாதல் . |
| தாங்கல் | தாங்குகை ; உட்கிடைக் கிராமம் ; மனக்குறை ; துன்பம் ; சகிப்பு ; பூமி ; நீர்நிலை ; பாசனத்துக்குப் பயன்படும் இயற்கை ஏரி ; தயக்கம் ; தூக்குகை . |
| தாங்கள் | மரியாதையுடன் கூடிய முன்னிலைப் பன்மைச் சொல் . |
| தாங்கி | ஆதாரம் ; தாங்குபவன் ; ஒரு பொருளைத் தாங்கிநிற்கும் கருவி ; பூண் ; பணிகளின் கடைப்பூட்டு ; யானைக் கொம்பில் அணியும் கிம்புரி ; கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை ; காண்க : மலைதாங்கி . |
| தாங்கித்தடுக்கிடுதல் | மிகுந்த உபசாரம் செய்தல் . |
| தாங்கிப்பேசுதல் | பரிந்துபேசுதல் ; ஒருவர் சொன்னதை ஆதரித்துப் பேசுதல் . |
| தாங்கு | தாங்கல் ; ஆதாரம் ; ஈட்டிக்காம்பு . |
| தாங்குகோல் | தோணியை ஊன்றித் தள்ளும் கோல் ; உதவி . |
| தாங்குசுவர் | முட்டுச்சுவர் . |
| தாங்குதல் | சுமத்தல் ; புரத்தல் ; ஆதரித்தல் ; தடுத்தல் ; பொறுத்தல் ; தோணி தள்ளுதல் ; வருந்துதல் ; மனத்திற் கொள்ளுதல் ; அன்பால் நடத்தல் ; தாமதித்தல் ; நிறுத்துதல் ; குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல் ; நொண்டுதல் ; இளைப்பாற்றுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அணிதல் ; சிறப்பித்தல் ; அழுத்துதல் ; பிடித்துக்கொள்ளுதல் . |
| தாங்குநன் | காப்பாற்றுவோன் . |
| தாச்சா | முந்திரிகை . |
| தாச்சி | கருவுற்றிருப்பவள் ; தாய்ப்பால் கொடுப்பவள் ; விளையாட்டில் ஒரு கட்சியிலுள்ள தலைவன் ; விளையாட்டில் தொடவேண்டுமிடம் ; சோனைப்புல்வகை . |
| தாசத்துவம் | அடிமைத்தன்மை . |
| தாசநம்பி | பூணூல் அணியாத வைணவரின் பட்டப்பெயர் ; பூணூல் தரியாத வைணவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 555 | 556 | 557 | 558 | 559 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தா முதல் - தாசநம்பி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், தாங்கல், நீர்வேட்கை, ஆதாரம், பூணூல், விளையாட்டில், நீர்நிலை, தாக்கீது, வருத்துந், என்னும், தெய்வம், தாக்கு, எதிர்த்தல், வேகம், பெருக்கல்

