தமிழ் - தமிழ் அகரமுதலி - தனிக்குடை முதல் - தனையை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தனிக்குடை | தனியரசாட்சி . |
தனிக்கோல் | தனியரசாட்சி . |
தனிகம் | கொத்துமல்லி . |
தனிகன் | செல்வன் . |
தனிகை | இளம்பெண் ; கற்புடையவள் . |
தனிச்சி | கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள் . |
தனிச்சித்தம் | அமைதியான மனம் . |
தனிச்செய்கை | பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை . |
தனிச்சொல் | கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் ; தனிச்சீர் . |
தனிசர் | கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர் . |
தனிசு | கடன் . |
தனிட்டை | அவிட்டநாள் ; அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள் . |
தனித்தகுடி | அநாதக் குடும்பம் . |
தனித்தல் | ஒன்றியாதல் ; நிகரற்றிருத்தல் ; உதவியற்றிருத்தல் . |
தனித்தன்மைப்பன்மை | தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை . |
தனித்தனி | ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய் . |
தனித்தாள் | ஒன்றியாள் ; உதவியற்ற ஆள் ; ஒற்றைக் காகிதம் . |
தனித்தி | தனியாக விடப்பட்டவள் . |
தனித்திருத்தல் | தனிமையாயிருத்தல் ; ஒன்றியாயிருத்தல் . |
தனிதம் | ஒலி ; முழக்கம் . |
தனிதர் | ஒன்றியாயிருப்பவர் . |
தனிநிலை | ஆய்த எழுத்து ; தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ; ஒப்பற்ற நிலை ; தனித்து நிற்கை . |
தனிநிலையொரியல் | தாளவிகற்பங்களுள் ஒன்று . |
தனிப்படுதல் | பிரிந்து ஒன்றியாதல் . |
தனிப்பாட்டு | விடுகவி . |
தனிப்பாடல் | விடுகவி . |
தனிப்பாடு | தனிமை ; முழுப் பொறுப்பு . |
தனிப்புடம் | உட்காரும்வகை ஒன்பதனுள் ஒன்று . |
தனிப்புறம் | ஒதுங்கின இடம் . |
தனிப்பொருள் | ஒப்பு உயர்வற்ற பொருள் . |
தனிமம் | தனிப்பொருள் , மூலகம் . |
தனிமுடி | தனியரசு . |
தனிமுதல் | கடவுள் ; தனிவாணிகம் ; கூட்டு வாணிகத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட விடுமுதல் . |
தனிமை | தனித்திருக்கும் நிலைமை ; உதவியின்மை ; ஒதுக்கம் ; ஒப்பின்மை . |
தனிமைப்பாடு | ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை . |
தனிமையாற்றல் | வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை . |
தனிமொழி | தொகைப்படாது தனியே நிற்குஞ்சொல் ; பிறமொழியினின்று பிறக்காத மொழி . |
தனியரசாட்சி | ஏகாதிபத்தியம் . |
தனியன் | தனித்த ஆள் ; குரு வணக்கமான ஒற்றைச் செய்யுள் ; தனியானவன் ; இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கம்கொண்ட விலங்கு ; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச் செய்யுள் . |
தனியா | கொத்துமல்லி ; அரைக்கச்சை . |
தனியூர் | பெருநகர் . |
தனிவலிப்பெருமாள் | குப்பைமேனிப்பூடு . |
தனிவழி | துணையற்ற வழி . |
தனிவீடு | தனிமையான வீடு ; ஒற்றைக் குடியுள்ள வீடு ; ஒரே சதுரமான வீடு ; வீடுபேறு . |
தனு | உடல் ; வில் ; தனுராசி ; சிறுமை ; நான்கு கரங்கொண்ட நீட்டலளவை ; எருத்தின் முக்காரம் ; மார்கழி மாதம் ; ஊன்றிப் பேசுகை ; தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி . |
தனுக்காஞ்சி | செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று . |
தனுகாண்டன் | அம்பு ; வில் ; விற்போர் வல்லவன் . |
தனுகூபம் | மயிர்த்துளை . |
தனுசன் | மகன் ; தனுவினிடம் ; தோன்றிய அசுரன் . |
தனுசாத்திரம் | வில்வித்தை . |
தனுசாரி | இந்திரன் ; திருமால் . |
தனுசு | வில் ; தனுராசி . |
தனுசை | மகள் . |
தனுத்திரம் | கவசம் . |
தனுத்துருவம் | வில்லுக்குதவும் மரமான மூங்கில் . |
தனுமணி | ஒரு போரில் ஆயிரம்பேரைக் கொன்ற வீரர் வில்லில் கட்டும் மணி . |
தனுமானசி | பொருள்மேல் பற்றறுதலையுடைய மனநிலை . |
தனுமேகசாய்கை | நீலக்கல் . |
தனுர் | காண்க : தனுசு . |
தனுர்மாதம் | மார்கழிமாதம் . |
தனுர்வித்தை | வில்வித்தை . |
தனுர்வேதம் | வில்வித்தை . |
தனுரசம் | உடலின் ரசமாகிய வியர்வை . |
தனுருகம் | மயிர் . |
தனுரேகை | வில்வடிவான கைக்கோடு . |
தனுவாரம் | போர்க்கவசம் . |
தனுவேதம் | காண்க : தனுர்வேதம் . |
தனுவேதி | வில்லாளி . |
தனேசன் | குபேரன் . |
தனை | அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல் . |
தனையள் | மகள் . |
தனையன் | மகன் . |
தனையை | காண்க : தனையள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 554 | 555 | 556 | 557 | 558 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிக்குடை முதல் - தனையை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வீடு, வில், வில்வித்தை, காண்க, செய்யுள், ஒன்று, தனியரசாட்சி, மகன், தனுராசி, பிரிந்து, கொத்துமல்லி, மகள், தனையள், தனுர்வேதம், தனித்து, தனுசு, தனிப்பொருள், பொருள், தனியே, ஒற்றைக், அல்லது, கடன், நிலை, தனிமை, விடுகவி, சொல், ஒன்றியாதல்