தமிழ் - தமிழ் அகரமுதலி - தறுகண் முதல் - தன்னரசுநாடு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தறுகண் | கொடுமை ; அஞ்சாமையாகிய வீரம் ; கொல்லுகை . |
தறுகண்ணண் | வன்கண்மையுள்ளவன் ; வீரன் . |
தறுகண்மை | காண்க : தறுகண் . |
தறுகணாளன் | காண்க : தறுகண்ணன் . |
தறுகணி | வன்கண்மையுள்ளவள் . |
தறுகுதல் | தடைப்படுதல் ; தவறுதல் ; திக்கிப்பேசுதல் ; தாமதித்தல் . |
தறுகுறும்பன் | தீயோன் ; முரடன் . |
தறுகுறும்பு | முருட்டுத்தன்மை ; தீம்பு . |
தறுசு | இழைக்குளிர்த்தி . |
தறுதல் | இறுக உடுத்துதல் ; கட்டுதல் . |
தறுதலை | அடங்காதவன் . |
தறுதலையன் | அடங்காதவன் . |
தறுதும்பன் | அடங்காதவன் . |
தறும்பு | நீரணை ; முளை . |
தறுவாய் | உற்ற சமயம் ; பருவம் . |
தறுவுதல் | குறைதல் . |
தறைதல் | ஆணி முதலியவற்றை இறுக்கல் ; தைத்தல் ; குற்றப்படுத்துதல் ; தட்டையாதல் . |
தறைமலர் | ஆணியின் மரை . |
தறையடித்தல் | நிலத்தில் அசையாமல் இருத்துதல் . |
தன் | தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு . |
தன்கடையே | தன்னடைவே . |
தன்காரியக்குட்டி | தன்னலக்காரன் . |
தன்காரியம் | சொந்தச் செயல் . |
தன்காலம் | உரிய பருவம் ; கள் மிகுதியாகக் கிடைக்கும் காலம் . |
தன்கு | மகிழ்ச்சி . |
தன்குலம்வெட்டி | தன்குலத்தை அழிப்பதான கோடரிக்காம்பு . |
தன்கோட்கூறல் | முன்னூல் ஆசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை . |
தன்தரை | வெறுந்தரை ; போடு மண்ணின்றி இயற்கையான தரை . |
தன்படியே | தானாகவே ; தன்னிச்சைப்படி . |
தன்படுவன் | தானாக உண்டாகும் விளையுப்பு . |
தன்பாட்டில் | தானாகவே ; பிறர் செயலில் தலையிடாமல் . |
தன்பாடு | தன் செயல் ; தன் உழைப்பு . |
தன்பிடி | தன் கொள்கை . |
தன்பேறு | சொந்தப் பயன் . |
தன்பொறுப்பு | தனதாக ஏற்றுக்கொள்ளும் கடமை . |
தன்மசரணம் | தருமத்தைச் சரண்புகுகை . |
தன்மணி | அறச்சிந்தனை உள்ளவன் . |
தன்மதிப்பு | தற்பெருமை . |
தன்மப்பயிர் | அறத்தை விளைவிக்கும் பயிரான பேருபகாரி . |
தன்மப்புத்திரன் | காண்க : தருமபுத்திரன் . |
தன்மம் | தருமம் ; சலாசனவகை . |
தன்மயம் | தன் இயற்கை ; திறமை ; வேறொன்றனொடு ஒன்றுபடுகை . |
தன்மயமாதல் | வேறுபாடின்றி ஒன்றாதல் . |
தன்மராசா | தருமபுத்திரன் ; பாலைமரம் ; அறச்சிந்தனையுள்ளவன் . |
தன்மன் | யமன் ; தருமபுத்திரன் ; திப்பிலி . |
தன்மாத்திகாயம் | பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்குச் சாதனமான பொருள் . |
தன்மாத்திரை | ஐம்பொறிகளுக்குக் காரணமான சுவை , ஒளி , ஊறு , ஒசை , நாற்றம் என்னும் மூலப்பொருள்கள் . |
தன்மானி | வறுமை . |
தன்மி | காண்க : தருமி . |
தன்மிட்டன் | அறச்சிந்தை உள்ளவன் ; நன்னெறியில் ஒழுகுபவன் . |
தன்மூப்பு | இறுமாப்பு ; எதேச்சை . |
தன்மேம்பாட்டுரை | தற்புகழ்ச்சி அணி . |
தன்மை | குணம் ; இயல்பு ; நிலைமை ; முறை ; பெருமை ; ஆற்றல் ; நன்மை ; மெய்ம்மை ; தன்னைக் குறிக்குமிடம் ; ஒரணி . |
தன்மைநவிற்சி | பொருள் முதலியவற்றை இயற்கையிலுள்ளவாறே கூறும் அணி . |
தன்மைமிகுத்துரை | ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக் கூறுகை . |
தன்வசப்படுத்துதல் | தன்னுடையதாக்குதல் . |
தன்வயத்தனாதல் | கடவுள் எண்குணத்துள் சுதந்தரனாந் தன்மை . |
தன்வழி | தன் மரபு ; தன் விருப்பம் . |
தன்வினை | ஊழ்வினை ; இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் ; தனது செயல் . |
தன்வேதனை | தன் அனுபவம் . |
தன்னடக்கம் | தன்னைக் கட்டுப்பாடு பண்ணல் ; அமைதி . |
தன்னடிச்சோதி | பரந்தாமனது திருவடியின் ஒளியாகிய பரமபதம் . |
தன்னந்தனி | முற்றுந்தனிமை . |
தன்னந்தனித்தல் | முழுதும் தனிமையாதல் . |
தன்னம் | பசுவின்கன்று ; மான்கன்று ; மரக்கன்று ; சிறுமை . |
தன்னமை | நட்பு ; இணக்கம் . |
தன்னயம் | தன்னலம் . |
தன்னரசு | சுதந்தர அரசு ; அரசியலற்றிருக்கை . |
தன்னரசுநாடு | ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு ; அராசக நாடு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 552 | 553 | 554 | 555 | 556 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தறுகண் முதல் - தன்னரசுநாடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தருமபுத்திரன், சொல், செயல், அடங்காதவன், தன்மை, பொருள், தன்னைக், நாடு, தறுகண், தானாகவே, முதலியவற்றை, என்னும், கூறுகை, பருவம், உள்ளவன்