முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுறுக்கொள்ளுதல் முதல் - சூசிக்கை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுறுக்கொள்ளுதல் முதல் - சூசிக்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுறுக்கொள்ளுதல் | மயிர்க்குச்செறிதல் ; தீய்ந்துபோதல் . |
| சுறுசுறுத்தல் | தீவிரப்படுதல் , கடுமையாதல் . |
| சுறுசுறுப்பு | ஊக்கம் ; தீவிரம் . |
| சுறுசுறெனல் | ஒர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; உட்செல்லுதற்குறிப்பு ; கடுத்தற்குறிப்பு . |
| சுறுதி | சுறுசுறுப்பு . |
| சுறை | இலையற்ற கொடிவகை . |
| சுறோணிதம் | காண்க : சுரோணிதம் . |
| சுன் | சனி . |
| சுன்னச்சி | சத்திசாரம் . |
| சுன்னத்துச்செய்தல் | ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சடங்கு செய்தல் . |
| சுன்னம் | சுழி ; சுண்ணாம்பு . |
| சுன்னிதம் | நுட்பம் . |
| சுன்னுக்கட்டி | பாற்கட்டி . |
| சுன்னை | காண்க : சுன்னம் . |
| சுனக்குடம் | சதுரக்கள்ளிமரம் . |
| சுனகன் | நாய் ; தென்மேற்றிசை . |
| சுனம் | வெள்ளுள்ளி . |
| சுனாசமாய் | காண்க : சுனாயாசமாய் . |
| சுனாசி | இந்திரன் . |
| சுனாசீரன் | இந்திரன் . |
| சுனாசு | இந்திரன் . |
| சுனாயாசமாய் | வருத்தமின்றி . |
| சுனாவணி | விண்ணப்பம் வாசிக்கை . |
| சுனி | பெண்நாய் . |
| சுனிசனம் | புளியாரை . |
| சுனுக்கு | காண்க : சுனக்குடம் . |
| சுனுகி | காண்க : சுனக்குடம் . |
| சுனை | மலையூற்று ; குகையிலுள்ள நீர்நிலை ; நீர்நிலையும் நிழல்மரமும் உள்ள பசும்புற்றரை ; தினவு ; சுரணை ; சுரசுரப்பு . |
| சுனைக்கரந்தை | திருநீற்றுப்பச்சை . |
| சுனைத்தண்ணீர் | சுனையிலுள்ளநீர் ; புண்ணீர் . |
| சுனைத்தல் | தினவெடுத்தல் . |
| சுனைதல் | குழைதல் ; வாடுதல் . |
| சுனைவு | சுனைநீர் ; பேய்க்கடலை . |
| சூ | ஓர்உயிர்மெய்ழுத்து (ச்+ஊ) ; நாயை ஏவும் ஓலிக்குறிப்பு ; வியப்புச்சொல் ; வாணவகை ; சுளுந்து . |
| சூக்கம் | நுண்மை ; தூலப்பொருளிள் நுண்ணிய உருவம் ; நுண்ணிய பொருள் ; கூர்மை . |
| சூக்காட்டுதல் | நாயை ஏவுதல் ; சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல் . |
| சூக்காய் | நண்டுவகை . |
| சூக்கீடம் | கம்பளிப்பூச்சி . |
| சூக்குமசரீரம் | காண்க : சூட்சுமசரீரம் . |
| சூக்குமதண்டுலம் | திப்பிலி . |
| சூக்குமதாரி | வஞ்சகன் . |
| சூக்குமதேகம் | காண்க : சூட்சுமசரீரம் . |
| சூக்குமபத்திரம் | கடுகு ; கொத்துமல்லி ; சீரகம் ; செங்கரும்பு . |
| சூக்குமபுத்தி | கூர்மையான அறிவு . |
| சூக்குமம் | நுண்மை ; பருப்பொருளின் நுண்ணியவடிவம் ; காண்க : சீந்தில் ; ஏலம் ; சிவாகமம் . |
| சூக்குமாலங்காரம் | ஒருகருத்தைக் குறிப்பினால் உணர்த்தும் அணி . |
| சூக்குமித்தல் | நுட்பமாதல் . |
| சூக்குமில் | சிலந்திக்கூடு . |
| சூக்குளி | வெற்றிலை . |
| சூக்கொட்டுதல் | சூவொலியிட்டுச் சம்மதங் காட்டுதல் ; வெறுப்புக்குறி காட்டுதல் . |
| சூகம் | தாமரைக்கொடி ; ஊர்வன ; நெல்வால் ; அம்பு ; இரக்கம் ; காற்று ; சுனை . |
| சூகரம் | பன்றி ; மான்வகை . |
| சூகரை | குளத்தில் உடைப்புநீர் வெளிப் போகாதபடி இடும் அணை , அடைகரை . |
| சூகை | தலைசுற்றல் ; வீட்டின் பின்புறம் ; கரிய சிற்றெறும்புவகை ; யானை . |
| சூகைக்கண் | அண்மைப்பார்வை . |
| சூகையாடுதல் | தலைசுற்றுதல் . |
| சூங்குமம் | வேலிப்பருத்தி . |
| சூச்சான் | கிட்டிப்புள் விளையாட்டு . |
| சூச்சூவெனல் | சத்தத்தை அடக்குங் குறிப்பு ; நாயை எவுதற்குறிப்பு . |
| சூசகம் | அறிகுறி ; தருப்பை . |
| சூசகவாயு | காண்க : சூதகவாயு . |
| சூசகன் | ஒற்றன் ; ஆசிரியன் ; பின்பற்றத்தக்கவன் முன்மாதிரியான நடத்தையுடையவன் . |
| சூசம் | செம்மறியாட்டுக்கடா . |
| சூசனம் | குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை . |
| சூசனை | குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை . |
| சூசி | ஊசி ; ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை ; மெல்லிய கரையுள்ள துணிவகை ; காண்க : சூசிக்கை ; அட்டவணை . |
| சூசிக்கல் | ஊசிக்காந்தம் . |
| சூசிக்கை | நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 490 | 491 | 492 | 493 | 494 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுறுக்கொள்ளுதல் முதல் - சூசிக்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குறிப்பு, கூர்மை, நாயை, இந்திரன், சுனக்குடம், காட்டுதல், சூசிக்கை, திட்டம், குறிப்பிக்கை, சூட்சுமசரீரம், நுண்மை, சுன்னம், சுனாயாசமாய், சுனை, சுறுசுறுப்பு, நுண்ணிய

