தமிழ் - தமிழ் அகரமுதலி - சுற்று முதல் - சுறுக்கெனல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுற்று | வட்டமாயோடல் ; அச்சின்மேல் சுழற்சி ; சுருளுதல் ; சுற்றளவு ; சுற்றுவழி ; சுற்றிடம் ; கால்விரலணி ; மதில் ; கோயிலின் சுற்றுமதில் ; சொற்பொருள்களின் சிக்கல் . |
| சுற்றுக்கட்டு | வீட்டின் புறக்கட்டு ; அயலிடம் ; உறவினர்களிள் கூட்டம் ; கட்டுக்கதை ; இலஞ்சம் . |
| சுற்றுக்கட்டை | கொத்தன் பூசுவதற்குப் பயன்படுத்தும் மணியாசிக்கட்டை . |
| சுற்றுக்கல் | கொப்பு முதலிய நகையைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள் . |
| சுற்றுக்காரியம் | காண்க : சுற்றுவேலை . |
| சுற்றுக்கால் | சுற்றுப்புறம் ; அயலிடம் ; சுற்றியுள்ள கால்வாய் . |
| சுற்றுக்காலிடுதல் | விடாது பற்றித்தொடர்தல் ; விடாதுகெஞ்சுதல் . |
| சுற்றுக்கோயில் | ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள சிறு சன்னதிகள் . |
| சுற்றுக்கோள் | சுற்றிக்கொள்ளுகை . |
| சுற்றுச்சுவர் | சுற்றுப்புற மதில் . |
| சுற்றுச்சுழற்சி | சுற்றுவழி ; செயற்சிக்கல் ; குறித்த செய்தியை நேரின்றி வளர்த்துக் கூறுகை . |
| சுற்றுடைமை | வட்டவடிவு . |
| சுற்றுத்தேவதை | கோயிலிலுள்ள பரிவாரத் தெய்வம் ; பெரியோரை அடுத்திருப்பவர் . |
| சுற்றுதல் | சுற்றிவரல் ; சுழன்றுசெல்லுதல் ; வளைந்தமைதல் ; கிறுகிறுத்தல் ; மனங்கலங்குதல் ; தழுவுதல் ; விடாதுபற்றுதல் ; சூழ்ந்திருத்தல் ; வளையச் சூடுதல் ; வளையக் கட்டுதல் ; சுருட்டுதல் ; சிந்தித்தல் ; அலைதல் ; உடுத்துதல் ; சுழற்றுதல் ; கம்பிகட்டுதல் ; வஞ்சித்தல்: கைப்பற்றல் . |
| சுற்றுப்பட்டு | அயலிடம் . |
| சுற்றுப்படாகை | சுற்றுப்புறத்து ஊர்கள் . |
| சுற்றுப்பயணம் | இன்பப்பயணம் ; சுற்றுவழி ; அதிகார முறையில் அதிகாரிகள் பல ஊர்களுக்கும் சென்றுவருகை . |
| சுற்றுப்பிராகாரம் | காண்க : சுற்றுமதில் . |
| சுற்றுப்புடைகொள்ளுதல் | பக்கம் புடைத்திருத்தல் |
| சுற்றுப்புறம் | அயலிடம் . |
| சுற்றும் | சூழ . |
| சுற்றுமண் | வார்ப்புக்கருவியின் புறம்பூசியமண் ; ஒலைக் கடிதத்தில் இடும் முத்திரைமண் . |
| சுற்றுமதில் | கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில் . |
| சுற்றுமுற்றும் | நாலு பக்கமும் . |
| சுற்றுலா | இன்பச்செலவு . |
| சுற்றுவட்டாரம் | சுற்றுப்புறத்து ஊர்கள் . |
| சுற்றுவரவு | சூழ்ந்துவருகை ; குதிரையின் வட்டசாரி ; மேல் வரும்படி . |
| சுற்றுவழி | நேரற்ற பாதை ; தந்திரச் செயல் . |
| சுற்றுவளையம் | உருட்டி விளையாடும் சக்கரம் ; வட்டம் ; தெருவில் சுற்றிக்கொண்டிருக்கை ; கைகட்டிச் சேவகம் . |
| சுற்றுவாரி | சுவர்ப்புறத்து நீண்ட கூரை . |
| சுற்றுவீதி | கோயிலைச் சுற்றியுள்ள தெரு ; வளைந்துசெல்லும் சாலை . |
| சுற்றுவேலை | உதவித்தொழில் . |
| சுற | காண்க : சுறவம் , சுறவு . |
| சுறட்டன் | தொந்தரவுக்காரன் . |
| சுறட்டு | கொடுமை , தொந்தரவு ; பிடிவாதம் ; சிக்கு ; தலையிடுகை . |
| சுறட்டுக்கோல் | காண்க : துறட்டுக்கோல் . |
| சுறட்டுத்தனம் | முருட்டுத்தனம் . |
| சுறட்டுப்பிடி | முருட்டுத்தனம் . |
| சுறட்டுவலி | வாதநோய்வகை ; பிடிவாதம் . |
| சுறட்டை | பசையின்றி வறண்டது . |
| சுறண்டி | காண்க : சுரண்டி . |
| சுறண்டுதல் | நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல் ; சண்டைக்கிழுத்தல் ; இரத்தல் ; தூண்டி விடுதல் ; கவர்தல் ; விபசாரம் செய்தல் . |
| சுறணம் | காண்க : காறாக்கருணை . |
| சுறவம் | சுறாமீன் , மகரமீன் . |
| சுறவு | சுறாமீன் , மகரமீன் . |
| சுறவுக்குழை | மகரமீன் வடிவாகச் செய்த காதணி . |
| சுறவுக்கோடு | நெய்தல்நில மக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு . |
| சுறவுவாய் | மகரவாய் என்னும் தலைக்கோலம் . |
| சுறவை | கடுமை , உக்கிரம் . |
| சுறா | மகரமீன் ; மகரராசி ; உடம்பில் பூக்கும் உப்பு ; தேக அழுக்கு . |
| சுறாமுள் | சுறாமீன் எலும்பு . |
| சுறாளம் | வேகம் ; கோபம் . |
| சுறீரெனல் | கடுத்தற்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; ஒர் ஒலிக்குறிப்பு . |
| சுறு | மயிர் முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம் . |
| சுறுக்கன் | சுறுசுறுப்புள்ளவன் ; கோபக்காரன் . |
| சுறுக்கு | விரைவு ; வேகம் ; ஆத்திரம் ; சுறுசுறுப்பு ; கூர்மை ; கடுமை ; காரம் ; விலையேற்றம் . |
| சுறுக்குக்காட்டுதல் | அடிகொடுத்து அச்சுறுத்தல் . |
| சுறுக்கெனல் | கடுத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தீடீரெனக் குத்துதற்குறிப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 489 | 490 | 491 | 492 | 493 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுற்று முதல் - சுறுக்கெனல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சுறாமீன், சுற்றுவழி, அயலிடம், மகரமீன், சுற்றுமதில், மதில், முருட்டுத்தனம், கடுத்தற்குறிப்பு, பிடிவாதம், வேகம், கடுமை, ஊர்கள், சுற்றுப்புறம், சுற்றுவேலை, சுற்றியுள்ள, சுற்றுப்புறத்து, சுறவம், சுறவு

