தமிழ் - தமிழ் அகரமுதலி - சுத்தா முதல் - சுந்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுத்தா | ஒருமிக்க . |
| சுத்தாசுத்ததத்துவம் | காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் , மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ வேறுபாடு . |
| சுத்தாத்துவைதம் | உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து துய்க்கும் நிலை . |
| சுத்தான்னம் | வெறுஞ்சோறு . |
| சுத்தி | மனமொழி மெய்களில் மாசின்மை ; மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை ; சிப்பி ; கும்பிடுகிளிஞ்சில் ; சங்கு ; தலையோடு ; கரந்தை ; அகல் ; பாத்திரவகை ; சுத்தியல் ; அரைப்பலம் ; புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு ; வயிரக் குணங்களுள் ஒன்று . |
| சுத்திகரம் | தூய்மைசெய்கை . |
| சுத்திகரிப்பு | தூய்மைசெய்கை . |
| சுத்திகை | கிளிஞ்சில் ; அகல் . |
| சுத்திசெய்தல் | துப்புரவாக்கல் ; பொன் முதலிய உலோகங்களைத் தூய்மைசெய்தல் ; மருந்துக்காகப் பாடாணம் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; மந்திரம் முதலியவற்றால் தூய்மை செய்தல் . |
| சுத்திபத்திரம் | பிழைதிருத்தக் குறிப்பு . |
| சுத்தியம் | உயர்ந்தரக ஆடை . |
| சுத்தியல் | கம்மாளர் கருவிகளுள் ஒன்றான சிறு சம்மட்டி . |
| சுத்தீகரணம் | தூய்மையாக்குகை . |
| சுத்துரம் | கண்டங்கத்திரிச்செடி . |
| சுத்துரு | கண்டங்கத்திரிச்செடி . |
| சுத்தோதகம் | நல்ல தண்ணீர் . |
| சுதகம் | குறைவு . |
| சுதசனம் | ஆயுதம் . |
| சுதசித்தம் | தானாகவே ஏற்பட்டது . |
| சுதந்தரக்காணி | உரிமை நிலம் . |
| சுதந்தரக்காரன் | சொத்து முதலியவற்றுக்கு உரிமையுடையவன் . |
| சுதந்தரம் | மரபுரிமை ; உரிமைப்பேறு ; தன் விருப்பம் ; விடுதலை . |
| சுதந்தரவறிவு | இயற்கைப் பேரறிவு . |
| சுதந்தரவாளி | சொத்தின் உரிமையாளன் . |
| சுதந்தரன் | சொத்தின் உரிமையாளன் ; தன் விருப்பம்போல் நடப்பவன் . |
| சுதந்தரித்தல் | சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல் ; தன்வயத்தனாயிருத்தல் |
| சுதந்தி | வடமேற்றிசைப் பெண்யானை ; பெண்யானை . |
| சுதம் | இறங்குகை ; அழிவு ; பரமாகமம் ; காண்க : சுருதஞானம் ; முறைமை ; நெருஞ்சில் . |
| சுதர்ச்சி | சதுரக்கள்ளிமரம் . |
| சுதரிசனம் | நற்காட்சி ; திருமாலின் சக்கரம் ; அழகு ; கண்ணாடி . |
| சுதருமம் | நல்லறம் ; இயல்பு ; அறநூல் விதித்த படி நடத்தற்குரிய அவரவர் செயல் . |
| சுதலம் | கீழேழுலகங்களுள் ஒன்று . |
| சுதன் | மகன் . |
| சுதன்மம் | நல்லறம் ; ஆயுதம் ; இந்திரனின் அத்தாணி மண்டபம் . |
| சுதன்மை | இந்திரனின் அத்தாணி மண்டபம் . |
| சுதனம் | நற்பேறு ; ஆயுதம் |
| சுதா | தன்னடைவான ; அமிர்தம் . |
| சுதாகரன் | அமிர்த கதிரையுடைய சந்திரன் . |
| சுதாச்சி | காண்க : சுதர்ச்சி . |
| சுதாதாரன் | சந்திரன் . |
| சுதாநிதி | சந்திரன் . |
| சுதாமனு | மலை ; முகில் . |
| சுதாரித்தல் | துணிவுகொள்ளல் ; திறமையாக நடத்துதல் |
| சுதாவாய் | தானாகவே ; நேரில் . |
| சுதாவில் | தானாகவே ; நேரில் . |
| சுதி | இசைச் சுருதி ; யாழின் நரம்பு ; அறிஞன் ; மலவாய்த் துளை ; வளர்பிறை ; பெண் . |
| சுதிமதிகெட்டவன் | கேள்வியும் அறிவும் இல்லாதவன் . |
| சுதியேற்றுதல் | இசைச் சுருதியை மிகுதிப்படுத்துதல் ; தூண்டிவிடுதல் . |
| சுதிலயை | சுருதியோடு இசையொன்றுகை . |
| சுதினம் | நல்ல நாள் . |
| சுதும்பு | ஒரு மீன்வகை . |
| சுதேசம் | சொந்த நாடு . |
| சுதேசி | உள்நாட்டான் ; தனது நாட்டில் செய்த பண்டம் . |
| சுதேசியம் | தனது நாட்டில் செய்த பொருள் . |
| சுதை | தேவாமிர்தம் ; பால் ; சுவை ; சுண்ணாம்பு ; வெண்மை ; நட்சத்திரம் ; மின்னல் ; உதைகால்பசு ; கேடு ; மகள் . |
| சுதைக்குன்று | சுண்ணாம்பு பூசிய செய்குன்று . |
| சுந் | சனி . |
| சுந்தரத்தோளுடையான் | அழகர்கோயில் திருமால் . |
| சுந்தரப்பொடி | சிவப்பு நறுமணத்தூள் . |
| சுந்தரம் | அழகு ; நிறம் ; நன்மை ; சிவப்பு . |
| சுந்தரன் | அழகன் ; சுந்தரமூர்த்தி ; மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . |
| சுந்தரி | அழகி ; துர்க்கை ; இந்திராணி ; பார்வதி ; மூஞ்சூறு ; ஒரு மரவகை . |
| சுந்தரேசன் | மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . |
| சுந்து | நீர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 479 | 480 | 481 | 482 | 483 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுத்தா முதல் - சுந்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சந்திரன், தானாகவே, ஆயுதம், இசைச், நேரில், மண்டபம், நல்லறம், இந்திரனின், அத்தாணி, தனது, மதுரையில், கோயில்கொண்டுள்ள, சிவபிரான், சிவப்பு, சுண்ணாம்பு, நாட்டில், செய்த, அழகு, காண்க, தூய்மை, செய்தல், தூய்மைசெய்கை, ஒன்று, அகல், சுத்தியல், கண்டங்கத்திரிச்செடி, நல்ல, பெண்யானை, முதலியவற்றின், உரிமையாளன், சொத்தின், உரிமை, சொத்து, சுதர்ச்சி

