முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சிவசத்தி முதல் - சிவனார்பாகல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சிவசத்தி முதல் - சிவனார்பாகல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிவசத்தி | ஐந்துவகைச் சத்தி ; துரிசு . |
| சிவசமயம் | சைவமதம் . |
| சிவசன் | சிவனிடம் பிறந்தவனாகிய சுக்கிரன் . |
| சிவசாதனம் | உருத்திராக்கம் , திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள் ; உருத்திராக்கம் . |
| சிவசாதாக்கியம் | அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம் . |
| சிவசித்தர் | சைவ சமயத்திற் கூறிய பரமுத்தியை அடைந்தவர் . |
| சிவசிவ | ஓர் இரக்கக்குறிப்பு . |
| சிவசின்னம் | காண்க : சிவசாதனம் . |
| சிவஞானம் | இறையுணர்வு , தெய்வ அறிவு . |
| சிவஞானி | சிவஞானம் பெற்றோன் . |
| சிவண | உவமைச்சொல் . |
| சிவணுதல் | நட்புக்கொள்ளுதல் ; பொருந்துதல் ; அளவளாவுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; பெறுதல் ; |
| சிவத்ததாசி | செடிவகை ; செம்பருத்தி ; செம்பரத்தை . |
| சிவத்தம் | செம்முருங்கைமரம் . |
| சிவத்தல் | சிவக்குதல் ; கோபித்தல் ; சினக்குறிப்பு . |
| சிவத்துருமம் | வில்வமரம் . |
| சிவதடி | வெள்ளரி . |
| சிவதரம் | அதிக மங்களமானது . |
| சிவதலம் | சிவபிரான் கோயில்கொண்ட இடம் . |
| சிவதாரம் | தேவதாரு என்னும் மரவகை . |
| சிவதுளசி | திருநீற்றுப்பச்சை . |
| சிவதூதி | துர்க்கை . |
| சிவதை | கொடிவகை . |
| சிவந்தசோறு | தீயந்துபோன சோறு . |
| சிவந்தவேசை | செமபரத்தைச்செடி . |
| சிவந்தி | பாலைவகை ; பூச்செடிவகை ; கடுக்காய்வகை . |
| சிவந்திரம் | கைம்மாறு ; வேலையில் இருப்பவர்க்கு அம் முறையில் கொடுக்கும் சுதந்தரம் . |
| சிவநாபம் | ஒருவகை இலிங்கம் . |
| சிவநிசி | சிவராத்திரி . |
| சிவப்பன் | செந்நிறமுள்ளவன் . |
| சிவப்பி | செந்நிறமுள்ளவள் ; செந்தெங்கு . |
| சிவப்பிராமணர் | காண்க : ஆதிசைவர் . |
| சிவப்பிரியம் | உருத்திராக்கம் . |
| சிவப்பிரியை | சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி . |
| சிவப்பு | செந்நிறம் ; சிவப்புக்கல் ; சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு ; கோபம் ; கறுப்பு . |
| சிவப்புக்கந்தி | கோழித்தலைக் கந்தகம் . |
| சிவப்புக்கல் | ஈரற்கல் ; ஒரு மணிவகை . |
| சிவப்புச்சிலை | கெம்பு . |
| சிவப்பூர்தல் | சிவந்தநிறமடைதல் . |
| சிவப்பேறு | சிவமாம் தன்மையை அடைகை . |
| சிவபண்டாரி | சிவாலயக் கருவூலக்காரன் . |
| சிவபதம் | சிவனடியார்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தான் ஆள் உலகிருத்தல் , தன்பால் இருத்தல் , தான் ஆம் பதம் பெறல் , தான் ஆகுதல் என்னும் நால்வகைச்சிவபதவி . |
| சிவபாத்தியன் | சிவனடியான் . |
| சிவபீசம் | காண்க : சிவவிந்து . |
| சிவபுரம் | சிவலோகம் . |
| சிவபூசை | சிவவழிபாடு . |
| சிவபோகம் | சிவானந்தம் . |
| சிவம் | மங்களம் ; உயர்வு ; களிப்பு ; நன்மை ; குறுணி ; முத்தி ; கடவுளின் அருவுரு நிலை ; சிவத்துவம் . |
| சிவமது | சிறுபுள்ளடிப்பூடு . |
| சிவமயம் | சிவமாந்தன்மை ; மங்கலமொழி . |
| சிவமரம் | வெண்கடப்பமரம் ; சவுக்குமரம் . |
| சிவமல்லி | காண்க : கொக்குமந்தாரை . |
| சிவயோகி | சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு . |
| சிவரசம் | மூன்றுநாள் ஊறிய கஞ்சி ; பாதரசம் . |
| சிவராத்திரி | சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம் . |
| சிவல் | கவுதாரி ; காடைவகை ; செந்நிலம் ; பகன்றைக்கொடி . |
| சிவலை | சிவப்பு நிறமுள்ள ஆள் ; சிவப்புநிறமுள்ளது ; செந்நிற விலங்கு . |
| சிவலோகச்சேவகன் | காந்தம் . |
| சிவலோகம் | கைலாசம் . |
| சிவவல்லபம் | எருக்கு ; ஒருவகை நாவல் ; செவந்திச் செடி . |
| சிவவிந்து | இதள் , பாதரசம் . |
| சிவவெற்பு | பழநி . |
| சிவவேடம் | உருத்திராக்கம் முதலிய சிவசின்னம் தரித்த கோலம் . |
| சிவளிகை | தலையணி . |
| சிவளிகைக்கச்சு | உடைமேல் கட்டும் கச்சு . |
| சிவன் | மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள் ; சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் . |
| சிவனார்கிழங்கு | காண்க : கார்த்திகைக்கிழங்கு . |
| சிவனார்பாகல் | கோவைக்கொடி ; ஐவிரலிக்கொடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 462 | 463 | 464 | 465 | 466 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவசத்தி முதல் - சிவனார்பாகல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உருத்திராக்கம், முதலிய, தான், சிவனடியார்கள், சிவப்புக்கல், சிவலோகம், பாதரசம், சிவப்பு, சிவவிந்து, ஒருவகை, சிவசின்னம், சிவம், சிவஞானம், என்னும், சிவசாதனம், சிவராத்திரி

