தமிழ் - தமிழ் அகரமுதலி - சி முதல் - சிகரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சி | ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + இ) ; சிவம் ; சிரஞ்சீவி ; ஒரு பெண்பால் விகுதி . |
| சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா | சில தாழிசைகளோடு பிறவுறுப்புகளையும் கொண்டு முடியும் கலிப்பாட்டு . |
| சிக்க | நன்றாய் ; சுருக்கமாக . |
| சிக்கடி | அவரைக்கொடி ; சிக்கல் . |
| சிக்கடிமுக்கடி | தாறுமாறு ; முட்டுப்பாடு . |
| சிக்கணம் | மழமழவென்றுள்ளது , வழுவழுப்பானது . |
| சிக்கத்துப்புழுதி | உழுதும் விதைக்கப்படாதுள்ள நன்செய் . |
| சிக்கம் | மெலிவு ; சிறைச்சாலை ; ஈயம் ; வெள்ளி ; செம்பு ; உறி ; வலை ; குடுமி ; உச்சி ; சீப்பு ; வலைப்பை . |
| சிக்கர் | கள் ; தலைநோவுடையார் . |
| சிக்கரத்தெளியல் | உசிலம்பட்டையிலிருந்து இறக்கும் கள் . |
| சிக்கல் | தாறுமாறு ; முட்டுப்பாடு ; காக்கைக்கல் ; இளைத்தல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; ஓர் ஊர் . |
| சிக்கறுக்கி | சிணுக்குவாரி என்னும் சீப்புவகை . |
| சிக்கறுத்தல் | நநூல் முதலியவற்றைச் சிக்கு விடுத்தல் ; சிக்கலான வழக்கைத் தீர்த்தல் ; துறவறம் புகுதல் . |
| சிக்கனம் | செட்டு ; இறுக்கம் . |
| சிக்கனவு | திண்மை ; மனவுறுதி ; சிக்கனம் . |
| சிக்கி | நாணம் . |
| சிக்கிமுக்கி | நெருப்புண்டாக்கும் கல் . |
| சிக்கிமுக்கிக்கல் | நெருப்புண்டாக்கும் கல் . |
| சிக்கு | நூல் முதலியவற்றின் சிக்கு ; சிக்கலான செயல் ; கண்ணி ; தடை ; மாட்டிக்கொள்ளுகை ; ஐயம் ; உறுதி ; எண்ணெய்ச் சிக்கு ; சிக்கு நாற்றம் ; மாசு . |
| சிக்குக்கழித்தல் | கலியாணகாலத்தில் மணமகனுக்குச் செய்யும் மயிர்கழி சடங்கு . |
| சிக்குண்ணுதல் | அதிக முடிச்சுப்படுதல் ; அகப்படல் . |
| சிக்குதல் | சிக்குப்படுதல் ; இறுகுதல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; கிடைத்தல் ; இளைத்தல் . |
| சிக்குப்பலகை | கலைமகள் பீடம் , புத்தகங்களை விரித்துவைத்துப் படிப்பதற்கு உதவும் கருவிவகை . |
| சிக்குப்பாடு | தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு . |
| சிக்குப்பிக்கு | தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு . |
| சிக்குரு | முருங்கைமரம் . |
| சிக்குவாங்கி | சீப்புவகை . |
| சிக்குவாங்குதல் | மயிர் முதலியவற்றின் சிக்கல் எடுத்தல் . |
| சிக்குவாரி | காண்க : சிக்குவாங்கி . |
| சிக்குவை | நாக்கு ; தண்ணீர்விட்டான்கிழங்கு . |
| சிக்கென | உறுதியாக ; இறுக ; உலோபத்தனமாக ; விரைவாக . |
| சிக்கெனவு | உறுதி ; கையிறுக்கம் . |
| சிக்கை | பயிற்சி ; இசைப்பயிற்சி ; தண்டனை . |
| சிகண்டம் | மயிற்றோகை ; தலைமுடி . |
| சிகண்டி | மயில் ; திருமால் ; அலி ; அம்பு ; கோழிச்சேவல் ; பாலையாழினோசை ; இசைநுணுக்க நூலாசிரியர் ; தொல்லைகொடுப்பவன் ; சிற்றாமணக்கு ; தலைமுடி . |
| சிகண்டிகம் | கோழி . |
| சிகண்டிகை | கருங்குன்றி . |
| சிகண்டிசன் | வியாழன் . |
| சிகதம் | வெண்மணல் . |
| சிகதை | வெண்மணல் . |
| சிகநாதம் | அப்பிரகம் . |
| சிகரம் | மலையுச்சி ; மலை ; உயர்ச்சி ; கோபுரம் ; விற்பிடி ; நீர்த்துளி ; அலை ; புளகம் ; வட்டில் ; காக்கை ; கிராம்பு ; சுக்கு ; இலவங்கம் ; கவரிமா . |
| சிகரம்வைத்தல் | கோபுரம் முதலியவற்றின் உச்சியில் கலசம் வைத்தல் ; அணிகலனில் கொண்டைவைத்தல் ; மனத்திற் பதியும்படி திறமையாகப் பேசுதல் . |
| சிகரி | மலை ; கோபுரம் ; கருநாரை ; புல்லுருவி ; எலிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 450 | 451 | 452 | 453 | 454 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சி முதல் - சிகரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிக்கு, சிக்கல், முதலியவற்றின், கோபுரம், சிக்கலாயிருப்பது, தொந்தரவு, இடையூறு, வெண்மணல், தலைமுடி, சிக்குவாங்கி, உறுதி, நெருப்புண்டாக்கும், முட்டுப்பாடு, தாறுமாறு, இளைத்தல், அகப்பட்டுக்கொள்ளுதல், சிக்கலான, சீப்புவகை, சிக்கனம்

