தமிழ் - தமிழ் அகரமுதலி - சாம்பான் முதல் - சாய்மணை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சாய்த்தல் | சாயச்செய்தல் ; ஒரு பக்கமாக ஓட்டுதல் ; கரைக்குச் செலுத்துதல் ; கெடுத்தல் ; மெய்ப்படுத்துதல் ; முறித்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; மனம் சாயப்பண்ணுதல் . |
| சாய்த்துக்கொடுத்தல் | ஒருசேரக் கொடுத்தல் . |
| சாய்த்துவிடுதல் | தள்ளிக் கொல்லுதல் ; ஒருசேரக் கொடுத்தல் ; கவிழ்த்துவிடுதல் . |
| சாய்தல் | மெலிதல் ; கவிழ்தல் ; வளைதல் ; திரண்டுசெல்லுதல் ; நடுநிலைமை மாறுதல் ; சார்தல் ; நடந்தேறுதல் ; ஒதுங்குதல் ; கோள் முதலியவை சாய்தல் ; படுத்தல் ; தோற்றோடுதல் . |
| சாய்ப்பிடம் | படை பின்வாங்குமிடம் ; சிறு கொட்டகை . |
| சாய்ப்பு | தாழ்வு ; மலைச்சரிவு ; சாய்வான கூரை ; சாய்வு ; இறப்பு ; இரிதல் ; மட்ட வெற்றிலை ; முகச்சாய்ப்பு . |
| சாய்மணை | சார்மணை ; திண்டு . |
| சாம்பான் | பறையர் பட்டப்பெயர் . |
| சாம்பி | உயரத் தூக்கும் கருவிவகை . |
| சாம்பிராச்சியம் | காண்க : சாம்ராச்சியம் . |
| சாம்பிராணி | காண்க : பறங்கிச் சாம்பிராணி ; ஒரு மரவகை ; மூடன் ; தூபவர்க்கத்துள் ஒன்று . |
| சாம்பிராணிபோடுதல் | ஆவேசம் வரச்செய்தல் ; தூண்டுதலைச் செய்தல் ; நறும்புகை காட்டுதல் ; புகழ்தல் . |
| சாம்பு | பறை ; படுக்கை ; புடைவை ; பொன் ; நாவல்மரம் . |
| சாம்புதல் | இழுத்தல் ; அறைதல் ; உணர்வழிதல் ; வாடுதல் ; கூம்புதல் ; ஒடுங்குதல் ; கெடுதல் ; குவிதல் ; ஒளிமழுங்குதல் . |
| சாம்புநதம் | நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு . |
| சாம்பூநதம் | நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு . |
| சாம்ராச்சியம் | தனியரசாட்சி ; பெரும்பதவி . |
| சாமக்காவல் | இராக்காவல் . |
| சாமக்கிரி | உணவுப்பண்டம் ; துணைக்கருவி . |
| சாமக்கிரியை | உணவுப்பண்டம் ; துணைக்கருவி . |
| சாமக்கோழி | நள்ளிரவில் கூவுங் கோழி . |
| சாமகண்டர் | நீலகண்டமுடைய சிவன் . |
| சாமகம் | சாணைக்கல் . |
| சாமகானம் | சாமவேதம் பாடுதல் . |
| சாமணம் | தட்டார் கருவிவகை . |
| சாமந்தம் | ஒரு பண்வகை ; பக்கம் . |
| சாமந்தன் | சிற்றரசன் ; படைத்தலைவன் ; அமைச்சன் . |
| சாமந்தி | செவ்வந்தி ; பூச்செடிவகை ; சீமைச்சாமந்தி . |
| சாமம் | ஏழரை நாழிகைகொண்ட காலம் ; இடைச்சாமம் ; சாமவேதம் ; கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள் ; ஓர் உபாயம் ; கருமை ; பச்சை ; பஞ்சம் ; அறுகு . |
| சாமர்த்தியம் | திறமை ; பூப்படைதல் . |
| சாமரபுட்பம் | கமுகு ; மாமரம் . |
| சாமரம் | கழு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் ; சிவதைக்கொடி . |
| சாமரை | கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் . |
| சாமளம் | கருமை ; பசுமை . |
| சாமளாதேவி | பசிய நிறமுடைய பார்வதி . |
| சாமளை | பசிய நிறமுடைய பார்வதி . |
| சாமன் | புதன் ; மன்மதன் தம்பி . |
| சாமாசி | நடுநிலையாளன் ; தூதன் ; ஆலோசனை . |
| சாமான் | பண்டம் , பொருள் . |
| சாமானியம் | சாதாரணம் ; பொது ; பெறுதற்கெளியது ; முழுமை . |
| சாமானியன் | சாதாரண சக்தியுள்ள மனிதன் ; தன் சாதியில் மட்டமானவன் . |
| சாமி | கடவுள் ; முருகக்கடவுள் ; அருகன் ; குரு ; தலைவன் ; மூத்தோன் ; தாய் ; தலைவி ; பொன் ; செல்வம் ; சாமை ; மரியாதைச்சொல் . |
| சாமிபோகம் | மேல்வாரதாரருக்குக் கொடுக்கும் துண்டுவாரம் . |
| சாமியம் | ஒப்புமை ; சொத்துரிமை . |
| சாமியாடுதல் | தெய்வமேறியதால் குறி சொல்லுதல் . |
| சாமீகரம் | பொன் . |
| சாமீப்பியம் | அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை . |
| சாமீபம் | அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை . |
| சாமுசித்தன் | முற்பிறப்பிலே சரியை கிரியையோக முடித்து ஞானத்தோடு பிறந்தவன் . |
| சாமுண்டி | துர்க்கை ; அவுரிப்பூண்டு ; நாணல் ; பொன்னாவிரை . |
| சாமுதம் | கடுக்காய் ; கோரைப்புல் . |
| சாமேளம் | சாப்பறை . |
| சாமை | ஒரு தானியம் ; வரகு ; கற்சேம்பு ; பெரு நெருஞ்சில் . |
| சாமோபாயம் | நான்கு சூழ்ச்சிகளுள் ஒன்று , இன்சொற் கூறிப் பகைவனைத் தன்வசமாக்கும் சூழ்ச்சி . |
| சாமோற்பலம் | யானைநெற்றியிலணியும் சிந்தூரம் . |
| சாமோற்பவை | பெண்யானை . |
| சாய் | ஒளி ; அழகு ; நிறம் ; புகழ் ; தண்டாங்கோரைப்புல் ; செறும்பு . |
| சாய்கால் | செல்வாக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 445 | 446 | 447 | 448 | 449 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாம்பான் முதல் - சாய்மணை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, கொடுத்தல், பொன், சின்னம், பசிய, அமைந்த, மயிரால், கவரிமான், நிலை, நிறமுடைய, பார்வதி, அண்மை, பதவி, சாமை, அணுகியிருக்கும், கருமை, கடவுளை, துணைக்கருவி, காண்க, சாம்ராச்சியம், கருவிவகை, சாய்தல், ஒருசேரக், சாம்பிராணி, நால்வகைப், நாவற்சாறுள்ள, உணவுப்பண்டம், வடக்கிலுள்ள, மேருமலைக்கு, பொன்னுள், சாமவேதம்

