தமிழ் - தமிழ் அகரமுதலி - சாதுகை முதல் - சாம்பார் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சாம்பார் | பருப்புக்குழம்பு . |
சாந்தி | அமைதி ; தணிவு ; கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு ; விழா ; பூசை ; சாந்திகலியாணம் ; சாந்திகலை ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் . |
சாந்திக்கூத்து | தலைவன் முதலியோர் மனவமைதி அடைவதற்கு ஆடுங்கூத்து . |
சாந்திகலியாணம் | திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு . |
சாந்திகழித்தல் | சாந்தி கிரியைகளால் கோள் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் . |
சாந்திமுகூர்த்தம் | காண்க : சாந்திகலியாணம் |
சாந்திரம் | சந்திரன் சம்பந்தமானது ; சந்திரகாந்தக் கல் . |
சாந்திரமானம் | சந்திரன் போக்கைக்கொண்டு மாத ஆண்டுகள் கணக்கிடும் முறை . |
சாந்திராயனம் | ஒரு நோன்பு ; இஃது ஒரு மாதத்தில் வெள்ளுவா முதல் காருவாவரை ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் காருவா(அமாவாசை) முதல் வெள்ளுவா (பௌர்ணமி) வரை ஒவ்வொரு பிடி கூட்டியும் சாப்பிட்டு இருப்பது . |
சாந்து | சந்தனம் ; சந்தனமரம் ; கலவைச் சந்தனம் ; கருஞ்சாந்து ; திருநீறு ; விழுது ; சுண்ணாம்பு ; மலம் . |
சாந்துக்காறை | மகளிர் கழுத்தணிவகை . |
சாந்துக்கோய் | சாந்துச் செப்பு . |
சாந்துகூட்டுதல் | நெற்றிக்கு இடுஞ்சாந்து உண்டாக்குதல் . |
சாந்துப்பொட்டு | சாந்தினால் நெற்றியிலிடும் பொட்டு . |
சாந்துப்பொடி | மணப்பொடி . |
சாந்துபூசுதல் | சந்தனம் முதலியவை பூசுதல் ; சுண்ணாம்பு பூசுதல் . |
சாந்தை | மனவமைதியுடையவள் ; பூமி . |
சாப்பறை | சாவில் அடிக்கப்படும் பறை . |
சாப்பாக்கொடுத்தல் | சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப் பார்த்தல் . |
சாப்பாடு | உணவு ; நல்ல அடி |
சாப்பிடுதல் | உண்ணுதல் ; கைப்பற்றுதல் . |
சாப்பிள்ளை | செத்துப் பிறக்கும் பிள்ளை . |
சாப்பை | புற்பாய் ; வலிமையில்லாதவன் . |
சாபங்கொடுத்தல் | சபித்தல் . |
சாபசரத்தி | தவப்பெண் . |
சாபத்திரி | சாதிபத்தரி . |
சாபம் | வில் ; தனுராசி ; விலங்கின் குட்டி ; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி . |
சாபமோசனம் | சாபத்திலிருந்து விடுபடுதல் . |
சாபல்லியம் | பயனுளதாதல் ; சபலபுத்தி . |
சாபலம் | விடாப்பற்று ; வான கணித வாக்கிய எண் ; எளிமை . |
சாபனை | சாபம் . |
சாபாலன் | ஆட்டுவாணிகன் . |
சாபித்தல் | சாபமிடுதல் . |
சாபிதா | பண்டம் முதலியவற்றின் குறிப்பு . |
சாம்பசிவன் | அம்பிகையுடன் கூடிய சிவன் . |
சாம்பம் | காண்க : ஆனைநெருஞ்சி . |
சாம்பர் | சாம்பல் , எரிந்த நீறு . |
சாம்பல் | எரிபட்ட நீறு ; வாடற்பூ ; முதுமை ; நாவல்மரம் ; புகையிலை பருத்திப் பயிர்களைக் கெடுக்கும் பூச்சி . |
சாம்பல்மொந்தன் | வாழைவகை . |
சாம்பலச்சி | வெடியுப்பு . |
சாம்பலாண்டி | உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி ; கோமாளி . |
சாம்பலொட்டி | எருக்கு . |
சாம்பவம் | சிவசம்பந்தமானது ; சைவமதபேதம் ; ஒரு புராணம் . |
சாம்பவன் | சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் . |
சாம்பவான் | சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் . |
சாம்பவி | பார்வதி ; ஒரு தீட்சைவகை ; நாவல் வகை . |
சாம்பற்பூசணி | பூசணிவகை . |
சாம்பற்பூத்தல் | நெருப்பில் நீறுபூத்தல் ; காய் , இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல் ; சாம்பல்போல் உடல்வெளுத்தல் . |
சாம்பன் | சிவன் . |
சாதுகை | காண்க : சாத்துவிகம் . |
சாதுசங்கம் | பெரியோருடன் கூட்டுறவு . |
சாதுசரணம் | சாதுக்களைச் சரண்புகுதல் . |
சாதுயர் | இறப்புத் துன்பம் . |
சாதுர்ப்பாகம் | நாலிலொரு பங்கு . |
சாதுரங்கம் | நால்வகைப் படை ; மாணிக்கவகை . |
சாதுரம் | தேர் . |
சாதுரன் | தேர்ப்பாகன் ; அறிவுள்ளன் . |
சாதுரிகன் | தேர்ப்பாகன் ; அறிவுள்ளன் . |
சாதுரியம் | திறமை ; நாகரிகம் . |
சாதுரியன் | திறமையுள்ளவன் . |
சாதுவன் | நல்லவன் ; ஐம்புலன்களடக்கியவன் ; அருகன் ; ஆதிரை கணவன் . |
சாதேவம் | குழிநாவல்மரம் ; சிறுநாவற்செடி . |
சாந்தம் | அமைதி ; பொறுமை ; சந்தனம் ; குளிர்ச்சி ; சாணி ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று . |
சாந்தம்பி | காண்க : சாத்தம்பி |
சாந்தவாரி | காண்க : சாத்திரவேரி . |
சாந்தன் | அமைதியுடையோன் ; அருகன் ; புத்தன் . |
சாந்தாற்றி | சிற்றாலவட்டம் ; பீலிவிசிறி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 444 | 445 | 446 | 447 | 448 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாதுகை முதல் - சாம்பார் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சந்தனம், சாந்திகலியாணம், சாம்பல், வழிபடுவோன், நீறு, சிவனை, இராமாயணத்தில், கரடிவேந்தன், அருகன், அறிவுள்ளன், தேர்ப்பாகன், சிவன், கூறப்படும், பூசுதல், சந்திரன், முதலியவற்றின், சடங்கு, அமைதி, வெள்ளுவா, ஒவ்வொரு, சாந்தி, சுண்ணாம்பு, பிடி, சாபம்