தமிழ் - தமிழ் அகரமுதலி - சாதரூபம் முதல் - சாதுகம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சாதி | குலம் ; பிறப்பு ; ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை ; இனம் ; தன்மையிற் சிறந்தது ; திரள் ; சாதிமல்லிகை ; சிறு சண்பகம் ; சாதிக்காய் ; தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று ; போலிப் பதில் ; திப்பிலி ; பிரம்பு ; பிரப்பம் பாய் ; ஆடாதோடை ; கள் ; சீந்தில் ; புழுகுகூட்டம் . |
சாதிக்கட்டு | சாதி ஒற்றுமை ; சாதி ஒழுக்கம் . |
சாதிக்கலப்பு | பல சாதியினர் திருமண சம்பந்தத்தால் ஒன்றுபடுகை . |
சாதிக்காய் | ஐந்து மணச்சரக்குள் ஒன்று ; சீமைக் கள்ளிமரம் . |
சாதிக்காய்ப்பெட்டி | சீமைக் கள்ளிப்பெட்டி . |
சாதிக்காரன் | கலப்பற்ற சாதியான் , ஒரே இனத்தைச்சேர்ந்தவன் . |
சாதிக்காரை | தகுதி . |
சாதிகம் | காண்க : சாதிமுறை . |
சாதிகுலம் | உயர்குலம் . |
சாதிகெட்டவன் | தாழ்குலத்தோன் ; சாதிமாறினவன் . |
சாதிங்குலிகம் | சாதிலிங்கம் |
சாதிசம் | நறும்பிசின் ; ஐந்து மணச்சரக்குள் ஒன்று . |
சாதிசனம் | இனத்தாரும் , உறவினரும் . |
சாதித்தல் | நிறைவேற்றுதல் ; நிலைநாட்டுதல் ; விடாது பற்றுதல் ; மந்நிரசித்தி பெறுதல் ; தேய்த்தல் ; கண்டித்தல் ; அழித்தல் ; அளித்தல் ; பரிமாறுதல் ; சொல்லுதல் ; மறைத்தல் ; அருள்புரிதல் ; வெல்லுதல் . |
சாதித்துவாங்குதல் | முயன்று வாங்குதல் ; கோட்டை முதலியவற்றைப் பிடித்தல் . |
சாதிப்பகை | சாதி வேற்றுமையால் மாந்தர் பாராட்டும் பகை . |
சாதிப்பதங்கம் | காண்க : சாதிலிங்கம் . |
சாதிப்பன்மை | இனத்தைக் குறிக்கும் பன்மை . |
சாதிப்பெயர் | சாதியைக் குறிக்கும் பெயர் . |
சாதிப்பெரும்பண் | அகநிலை , புறநிலை , அருகியல் , பெருகியல் ; என்னும் நால்வகைத் தலைமைப் பண்கள் . |
சாதிமல்லிகை | ஒரு மல்லிகைவகை . |
சாதிமான் | நற்குலத்தோன் . |
சாதிமுறை | சாதிக்குரிய ஒழுகலாறு . |
சாதிமை | பெருமை ; ஓர் இனத்துக்குரிய சிறப்புக் குணம் . |
சாதிருகியம் | ஒப்புமை . |
சாதிரேகம் | குங்குமப் . |
சாதிரேசம் | குங்குமப் . |
சாதிரை | ஊர்வலம் . |
சாதிலிங்கம் | வைப்புப் பாடாணவகை . |
சாதிவிருத்தி | இனத்தொழில் . |
சாதினி | காண்க : முசுக்கட்டை ; பீர்க்கங்கொடி . |
சாதீகம் | சாதியின் பழக்கவழக்கம் ; உயர்ந்தது . |
சாதீயம் | சாதியின் பழக்கவழக்கம் ; உயர்ந்தது . |
சாது | துறவி ; நற்குணத்தோன் ; அருகன் ; பைராகி ; அப்பாவி ; தயிர் . |
சாதுகம் | பெருங்காயம் . |
சாதரூபம் | நால்வகைப் பொன்களுள் ஒன்று |
சாதரூபி | பொன்னிறமுடைய அருகன் |
சாதல் | இறத்தல் |
சாதலம் | திராய் என்னும் துலாக்கட்டை . |
சாதவண்டு | ஒரு வண்டுவகை |
சாதவாகனன் | ஐயனார் ; சாதவாகன மரபிலுள்ள ஓர் அரசன் . |
சாதவேதா | நெருப்பு ; கொடிவேலி . |
சாதன்மியம் | ஒப்புமை . |
சாதனக்காணி | அரசனால் விடப்பட்ட உரிமை நிலம் . |
சாதனசாத்தியம் | காரணகாரியம் |
சாதனப்படிசெலுத்துதல் | உயில் எழுதுதல் . |
சாதனப்பத்திரிகை | விருப்ப ஆவணம் , உயில் ; பத்திரம் . |
சாதனப்பத்திரம் | உரிமைப்பத்திரம் ; விலை ஆவணம் |
சாதனம் | கருவி ; துணைக்காரணம் ; பயிற்சி ; அனுமான உறுப்புகளுள் ஒன்றாகிய ஏது ; உருத்திராக்கம் முதலிய சின்னம் ; இலாஞ்சனை ; இடம் ; நகரம் ; ஆதாரபத்திரம் . |
சாதனம்பண்ணல் | பழகல் ; உறுதிசெய்தல் . |
சாதனன் | பிறந்தவன் . |
சாதனை | செயல்முடிக்கை ; விடாத முயற்சி ; பிடிவாதம் ; சலஞ்சாதிக்கை ; நடித்துக்காட்டுகை ; பொய் . |
சாதா | சாதாரணமான ; பகட்டில்லாத . |
சாதாக்கொப்பு | மாதர் காதணிவகை . |
சாதாரண | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு . |
சாதாரணதருமம் | எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் ; உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை . |
சாதாரணப்படுதல் | எலலோராலும் அறியப்படுதல் . |
சாதாரணம் | பொதுவானது ; எளிது ; தாழ்வானது ; ஏதுப்போலி . |
சாதாரம் | ஆதாரத்தோடு கூடியது . |
சாதாரி | செவ்வழி யாழ்த்திறவகை என்னும் முல்லைநிலத்துப் பண் . |
சாதாவேலி | காண்க : சாத்திரவேரி . |
சாதாழை | கடற்பூண்டுவகை ; வலியற்றவன் . |
சாதாளநிம்பம் | எருக்கிலை . |
சாதாளி | மருத யாழ்த்திறவகை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 443 | 444 | 445 | 446 | 447 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாதரூபம் முதல் - சாதுகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சாதி, காண்க, ஒன்று, என்னும், சாதிலிங்கம், உயர்ந்தது, பழக்கவழக்கம், சாதியின், அருகன், உயில், யாழ்த்திறவகை, ஆவணம், குங்குமப், ஒப்புமை, ஒழுக்கம், சீமைக், மணச்சரக்குள், சாதிமுறை, சாதிக்காய், சாதிமல்லிகை, குறிக்கும், ஐந்து