முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சப்பை முதல் - சம்பளப்பிடித்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சப்பை முதல் - சம்பளப்பிடித்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சபிண்டர் | பிதிர்ப்பிண்டம் இடுதற்குரியோர் |
| சபிண்டி | பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம் |
| சபிண்டீகரணம் | பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம் |
| சபித்தல் | சாபமிடல் ; மந்திரத்தை உச்சரித்தல் |
| சபினம் | காண்க : வசம்பு |
| சபீனம் | காண்க : வசம்பு |
| சபை | சபைகூடும் மண்டபம் ; அவை : கூட்டம் ; சிதம்பரத்தில் சிவ பெருமான் நடனமாடும் சபை ; அம்பலம் ; திருச்சபை . |
| சபைகூட்டுதல் | கூட்டங்கூட்டுதல் |
| சபையார் | சங்கத்தினர் ; திருச்சபையார் ; வடமப் பிராமணருள் ஒரு சாரார் |
| சபையேறுதல் | சபைக்குமுன் வருதல் ; அரங்கேறுதல் ; திருட்டு முதலிய தீய வழியிற் பேரெடுத்தல் . |
| சம்சாரம் | உலக வாழ்க்கை ; குடும்பம் ; மனைவி . |
| சம்சாரி | மணமானவன் ; பெரிய குடும்பம் நடத்துபவன் ; குடியானவன் ; வினைத்தொடர்புடையவன் . |
| சம்பகம் | காண்க : சண்பகம் ; தற்பெருமை |
| சம்பங்கி | சண்பகமரம் ; கொடிச்சம்பங்கி |
| சம்பங்கூடு | சம்பங்கோரையாலோ தென்னையோலையாலோ செய்த கூடு . |
| சம்பங்கூடை | சம்பம்புல்லாற் செய்த கூடை ; சம்பங்கோரையாற் செய்த கொங்கணி . |
| சம்பங்கோரை | ஒரு கோரை வகை |
| சம்பங்கோழி | காண்க : காட்டுக்கோழி |
| சம்படம் | கூறை ; ஒரு பழைய வரி ; சோம்பல் ; சிறு செப்பு |
| சம்பத்தி | செல்வம் ; பொன் ; பேறு . |
| சம்பத்து | செல்வம் ; பொன் ; பேறு . |
| சம்பத்துவேட்டம் | தாளம் ஐந்தனுள் ஒன்று . |
| சம்பந்தக்காரர் | சம்பந்திகள் . |
| சம்பந்தக்குடியார் | சம்பந்திகள் . |
| சம்பந்தங்கலத்தல் | பிள்ளைகள் திருமணத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல் |
| சம்பந்தம் | தொடர்பு ; கலப்பு ; இணக்கம் ; திருமண உறவு . |
| சம்பந்தம்பேசுதல் | மணம்பேசுதல் . |
| சம்பந்தி | மணமக்களின் பெற்றோர்கள் ; சம்பந்தமுடையோன் ; ஒற்றுமையானவன் ; துவையல்வகை . |
| சம்பந்தித்தல் | சேர்த்தல் ; உறவாதல் . |
| சம்பம் | வச்சிரப்படை ; இடி ; மரவயிரம் ; எலுமிச்சை ; வீண்பெருமை ; அங்கநாடு |
| சம்பர்க்கம் | சேர்க்கை . |
| சம்பரசூதனன் | சம்பரனைக் கொன்ற காமன் ; தசரதன் |
| சம்பரம் | நீர் ; சரபம் என்னும் எண்காற்பறவை ; ஆடை ; பரபரப்பு ; களிப்பு ; சிறப்பு . |
| சம்பரன் | காமனாற் கொலையுண்ட அசுரன் . |
| சம்பராரி | சம்பரனது பகைவனாகிய மன்மதன் ; தசரதன் . |
| சம்பரி | நேர்வாளமரம் . |
| சம்பவம் | பிறப்பு ; நிகழ்ச்சி ; ஓரளவை . |
| சம்பவித்தல் | நிகழ்தல் . |
| சம்பவை | பார்வதிதேவி . |
| சம்பளக்காரன் | சம்பளம் பெறுபவன் . |
| சம்பளத்துக்கிருத்தல் | மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தல் |
| சம்பளப்பிடித்தம் | உரியசம்பளத்தைக் கொடாது நிறுத்திக்கொள்ளுகை ; சம்பளக்குறைவு . |
| சப்பை | தட்டையானது ; சுவையற்றது ; வலியின்மை ; பயனற்றது ; தாழ்ந்தது ; இடுப்பு , தோள் இவற்றின் சந்து ; தேரின் சக்கரத்திற்கு அடியில் கொடுக்கப்படும் கட்டை ; வீட்டின் கூரைக் கைம்மரம் ; மரத்திற் பிளந்த துண்டு ; முத்திரை . |
| சப்பையெலும்பு | இடுப்புப்புறமுள்ள எலும்பு . |
| சபக்கரம் | துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம் . |
| சபட்சம் | துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம் . |
| சபதக்காரன் | சூளுறவு செய்வோன் . |
| சபதம் | சூளுறவு ; பந்தயம் . |
| சபதமாயிருத்தல் | இறுமாந்திருத்தல் . |
| சபதரித்தல் | சம்பாதித்தல் ; ஆதரித்தல் . |
| சபம் | கடவுளைத் துதித்தல் ; குதிரைக்குளம்பு ; ஆலமரம் முதலியவற்றின் விழுது ; மூங்கில் மரம் ; பிணம் . |
| சபர் | கடற்பயணம் ; பொறுத்தற்குறிப்பு ; அரபி ஆண்டில் இரண்டாம் மாதம் . |
| சபரணை | முழுமை ; ஆதரவு ; ஆயத்தம் ; ஒழுங்கு . |
| சபரம் | கெண்டைமீன் . |
| சபரன் | வேடன் . |
| சபரியை | பூசை . |
| சபலங்கெட்டவன் | பயனற்றவன் . |
| சபலம் | நிலையற்ற உள்ளம் ; ஆசை ; சாறு ; மின்னல் ; மெலிவு ; பயனுள்ளது சித்தி . |
| சபலா | திப்பிலி . |
| சபலை | மின்னல் ; மனத்திட்பமற்றவள் ; நிலையற்றவளாகிய திருமகள் ; திப்பிலி ; விலைமகள் |
| சபாகம்பம் | அவைக்கு அஞ்சுகை |
| சபாகுசுமம் | செம்பரத்தம்பூ |
| சபாநாதன் | அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி |
| சபாநாயகன் | அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி |
| சபாபதி | அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி |
| சபாமண்டபம் | அவை கூடுமிடம் |
| சபாரஞ்சகம் | அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது . |
| சபாரஞ்சிதம் | அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 424 | 425 | 426 | 427 | 428 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சப்பை முதல் - சம்பளப்பிடித்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செய்த, சபையின், சிதம்பர, அவைத்தலைவன், நடராச, தலைவனாகிய, மூர்த்தி, மின்னல், சூளுறவு, இடம், திப்பிலி, கவர்வது, அவையிலுள்ளோர், மனத்தைக், இருக்கும், துணியப்பட்ட, வசம்பு, குடும்பம், சிராத்தம், செய்யப்படும், இறந்த, பன்னிரண்டாம்நாள், செல்வம், பொன், தசரதன், பிதிர்பூசை, உறவு, சம்பந்திகள், பேறு, பொருள்

