தமிழ் - தமிழ் அகரமுதலி - சகரையாண்டு முதல் - சகோதரி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சகுணத்தியானம் | கடவுளைக் குண உருவங்களுடையவராக மனத்தால் வழிபடுதல் . |
சகுணம் | குணத்தோடு கூடியது . |
சகுந்தம் | பறவை ; கழுகு ; கமுகு ; பூதம் . |
சகுல்லியன் | உறவன் ; பேரனுக்குப் பேரன் முதலிய தூர தாயாதி . |
சகுலி | அப்பவருக்கம் ; ஒரு மீன்வகை . |
சகுன்மம் | கருணைக்கிழங்கு ; காட்டுக்கருணை . |
சகுனத்தடை | கெட்டகுறி , தீநிமித்தம் . |
சகுனம் | பறவை ; பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி ; நிலாமுகிப்புள் ; ஒரு கால அளவு ; கிழங்கு ; பேரரத்தை . |
சகுனி | பறவை ; கூகை ; துரியோதனன் மாமன் ; சகுனி போன்றவன் ; நிமித்தம் பார்ப்போன் . |
சகுனிமாமன் | சகுனியைப்போல் கெட்ட புத்தி கற்பிப்போன் . |
சகேரா | பண்டசாலை . |
சகோடம் | பதினாறு நரம்புகொண்டயாழ் . |
சகோடயாழ் | பதினாறு நரம்புகொண்டயாழ் . |
சகோத்திரம் | குலம் . |
சகோதரன் | உடன் பிறந்தான் . |
சகோதரி | உடன் பிறந்தாள் . |
சகரையாண்டு | சகாப்த வருடம் . |
சகல் | கொசு . |
சகலகம் | வெள்ளாட்டுக்கடா . |
சகலகலாவல்லவன் | கலையறிவு அனைத்தையும் அறிந்தவன் . |
சகலகலாவல்லி | கலைகள் அனைத்திற்கும் உரியவளான கலைமகள் . |
சகலகுண சம்பன்னன் | நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன் . |
சகலத்திராள் | எல்லாரும் . |
சகலபாசனம் | அருகன் முக்குடையுள் ஒன்று . |
சகலபாடி | காண்க : சகலன் . |
சகலம் | எல்லாம் ; சகலாவத்தை ; துண்டு . |
சகலமங்கலை | பார்வதி . |
சகலமோகினி | உலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயா சக்தி . |
சகலர் | ஆணவமலம் , கன்மமலம் , மாயாமலம் , என்னும் மும்மலத்தையும் உடைய உயிர்கள் . |
சகலன் | மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
சகலாத்தன் | அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர் . |
சகலாத்து | ஒரு கம்பளித் துணிவகை . |
சகலாவத்தை | ஓரவத்தை , மேலாமவத்தை ; ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை . |
சகலி | ஒரு மீன்வகை . |
சகலிகரணம் | துண்டுதுண்டாக்கல் . |
சகலை | காண்க : சகலன் . |
சகவாசம் | நட்பு . |
சகளத்திருமேனி | சிவனது உருவவடிவம் . |
சகளநிட்களம் | இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி . |
சகளம் | உருவத்திருமேனி . |
சகளன் | உருவத் திருமேனிக்கொண்ட சிவன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
சகளீகரித்தல் | உருவங்கொள்ளுதல் . |
சகன் | சாலிவாகனன் ; உலகநாயகன் ; தோழன் . |
சகன்மகதாது | செயப்படுபொருள் குன்றாத வினை . |
சகனம் | தொடையினுட்பக்கமாகிய பிருட்டம் ; பொறுமை ; காண்க : சகாப்தம் . |
சகா | தோழன் ; பாம்புகொல்லிப்பூண்டு ; உதவி ; துணை . |
சகாடி | பீர்க்கங்கொடி . |
சகாத்தம் | காண்க : சகாப்தம் . |
சகாத்தன் | தோழன் . |
சகாதி | பாம்புகொல்லிப்பூண்டு . |
சகாதேவி | நிலமகள் ; நெய்ச்சிட்டிச்செடி . |
சகாப்தம் | கி .பி . 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு . |
சகாமியம் | பயனை விரும்பிச் செய்யும் செயல் . |
சகாயதனம் | உதவியாகக் கொடுக்கும் பணம் . |
சகாயம் | துணை , உதவி , விலைநயம் , மலிவு ; நலம் . |
சகாயன் | உதவிசெய்வோன் ; தோழன் . |
சகாயி | உதவிசெய்வோன் ; தோழன் . |
சகாயித்தல் | உதவிசெய்தல் ; மலிவாய்க் கொடுத்தல் . |
சகார்த்தம் | உடனிகழ்ச்சிப் பொருள் . |
சகாரம் | ஏச்சு ; இகழ்ச்சி . |
சகாரி | சகர்களின் பகைவனான விக்கிரமாதித்தன் . |
சகாரித்தல் | ஏசுதல் . |
சகானா | ஒரு பண்வகை . |
சகி | தோழன் ; தோழி . |
சகித்தல் | பொறுத்தல் ; மன்னித்தல் . |
சகித்துவம் | தோழமை . |
சகிதம் | கூட . |
சகிதன் | சேர்ந்திருப்போன் ; அஞ்சி நடுங்குபவன் . |
சகிப்பாளி | பொறுமையுள்ளவன் . |
சகிப்பு | பொறுத்தல் . |
சகியம் | நிலப்பனை ; மஞ்சள் ; மாமரம் ; காவிரியாறு தோன்றும் மலை . |
சகுட்டகம் | ஆடுதின்னாப்பாளை . |
சகுட்டம் | ஆடுதின்னாப்பாளை . |
சகுடம் | நாய் ; சேம்பு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 407 | 408 | 409 | 410 | 411 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சகரையாண்டு முதல் - சகோதரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தோழன், காண்க, சகலன், பறவை, சகாப்தம், சிவனது, பாம்புகொல்லிப்பூண்டு, பொறுத்தல், ஆடுதின்னாப்பாளை, உதவிசெய்வோன், துணை, உதவி, கணவன், மனைவியின், சகுனி, மீன்வகை, முதலிய, பதினாறு, நரம்புகொண்டயாழ், சகலாவத்தை, எல்லாம், உடன், உடன்பிறந்தாள்