தமிழ் - தமிழ் அகரமுதலி - சகச்சிரம் முதல் - சகரிகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சகமீன்றவள் | உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி . |
| சகர்ப்பபிராணாயாமம் | மந்திரத்தோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி . |
| சகரச்சாரி | சத்திசாரம் . |
| சகரநீர் | சகரர் தோண்டிய கடல் . |
| சகரர் | கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர் . |
| சகரிகம் | நாயுருவிச்செடி . |
| சகசண்டி | பெருமுருடன் , நாணமற்றோன் . |
| சகசநிட்டை | ஒருவனுக்கு இயற்கையாய் அமைந்த தியான உணர்வு . |
| சகசம் | இயற்கையானது , உண்மை ; கூடப்பிறந்தது ; வட்டில் . |
| சகசமலம் | உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம் . |
| சகசரம் | சிறுகுறிஞ்சாக்கொடி . |
| சகசரி | பொனன்னிறங் கலந்த கரும்பூவுள்ள மருதோன்றிமரம் ; வாடாக்குறிஞ்சிமரம் ; தோழி ; மனைவி . |
| சகசரிதம் | உடன்நிகழ்வது . |
| சகசன் | உடன்பிறந்தான் . |
| சகசா | காண்க : சகசரம் . |
| சகசாட்சி | உலக முழுவதையும் காண்பவனான சூரியன் . |
| சகசாலம் | மாயவித்தை . |
| சகசிரம் | ஆயிரம் . |
| சகசை | உடன்பிறந்தாள் . |
| சகசோதி | பேரொளி ; உலகிற்கு ஒளியாயிருப்பவனாகிய கடவுள் . |
| சகட்டடி | மொத்தம் ; சராசரி . |
| சகட்டுமேனி | மொத்தம் ; சராசரி . |
| சகடக்கால் | வண்டிச்சக்கரம் . |
| சகடப்பொறி | சக்கரவடிவான ஓர் எந்திரம் . |
| சகடபலம் | நீர்க்கோழி . |
| சகடம் | வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் . |
| சகடயூகம் | சகடவடிவாக அமைக்கப்பெறும் படைவகுப்புவகை . |
| சகடயோகம் | குருவுக்கு ஆறு , எட்டு , பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் . |
| சகடான்னம் | கெட்ட உணவு . |
| சகடி | வண்டி . |
| சகடிகை | கைவண்டி . |
| சகடு | வண்டி ; தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய் ; உரோகிணிநாள் . |
| சகடை | வண்டி ; துந்துபி என்னும் முரசு ; சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம் . |
| சகடைகொட்டி | முரசடிப்போன் . |
| சகடோல் | அம்பாரி , யானைமேற்பீடம் . |
| சகண்டை | துந்துபி என்னும் முரசு ; வாச்சியப்பொது . |
| சகணம் | சாணம் . |
| சகணவர்த்தமரோகம் | கண்ணோய்வகை . |
| சகத்குரு | உலககுரு ; பரமகுரு . |
| சகத்தன் | நடுநிலையாளன் . |
| சகத்திரதாரம் | ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை . |
| சகத்திரதாரை | பல கண்களுள்ள அபிடேகத் தட்டு . |
| சகத்திரநாமன் | ஆயிரம் பெயருடையவன் ; கடவுள் ; திருமால் . |
| சகத்திரபேதி | பெருங்காயம் ; உலோகமண்வகை . |
| சகத்திரவேதி | பெருங்காயம் ; உலோகமண்வகை . |
| சகத்திரம் | ஆயிரம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று . |
| சகத்திரவீரியம் | அறுகம்புல் . |
| சகத்து | உலகம் . |
| சகதண்டம் | உலகவுருண்டை . |
| சகதலப்புரட்டன் | உலகத்தையே புரட்டக் கூடியவன் ; பெருமோசக்காரன் . |
| சகதாந்திரி | உலகத்திற்குத் தாயான துர்க்கை . |
| சகதாமத்தி | தகரைச்செடி ; கையாந்தகரை . |
| சகதி | சேறு ; பொல்லாநிலம் ; பூமி . |
| சகதீசன் | உலகிற்குத் தலைவனான கடவுள் . |
| சகதேவம் | உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை . |
| சகதேவி | நிலமகள் ; நெய்ச்சிட்டிச் செடி . |
| சகந்நாதன் | உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் . |
| சகநாதன் | உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் . |
| சகநாயகன் | காந்தம் . |
| சகப்பிராந்தி | உலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம் . |
| சகபாடி | ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கன் ; கூடப் பாடுவோன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
| சகம் | உலகம் ; சகாப்தம் ; ஆண்டுகளைக் கணிக்கும் கணக்கு ; சக ஆண்டு ; வெள்ளாடு ; பாம்புச்சட்டை ; சட்டை ; மார்கழி மாதம் . |
| சகமார்க்கம் | இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி ; தோழமைநெறி . |
| சகச்சிரம் | ஆயிரம் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று . |
| சகச்சை | பொன்னாங்காணிக்கீரை . |
| சகசட்சு | உலகிற்குக் கண்ணான சூரியன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 406 | 407 | 408 | 409 | 410 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சகச்சிரம் முதல் - சகரிகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஆயிரம், கடவுள், வண்டி, திருமால், துந்துபி, உலகிற்கு, இருபத்தெட்டனுள், பெருங்காயம், உலோகமண்வகை, உலகம், பூரியில், கொண்டுள்ள, இறைவனான, கோயில், ஒன்று, உண்டாகும், சூரியன், சகசரம், வட்டில், உடன்பிறந்தாள், மொத்தம், என்னும், சகரர், சராசரி, முரசு

