தமிழ் - தமிழ் அகரமுதலி - சக்கரவாகம் முதல் - சககாரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சக்கரைக்குத்தி | குத்தூசி , கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி . |
| சக்கல் | மக்கல் ; சக்கை ; சாரமற்றது . |
| சக்கவாலர் | சக்கரவாள மலையிலிருப்பவரான வியந்திர தேவர்கள் . |
| சக்களத்தி | மாற்றாளான மனைவி ; போலிப்பொருள் . |
| சக்களத்திச்சண்டை | ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை . |
| சக்களத்திப் போராட்டம் | ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை . |
| சக்களமை | சக்களத்திகளுக்குள் பகைமை ; கடும்பகை . |
| சக்களவன் | ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன் . |
| சக்களிதல் | தட்டையாதல் . |
| சக்களையன் | சோம்பேறித் தடியன் . |
| சக்காத்து | இலவசம் , விலையின்றிப் பெறுகை . |
| சக்காந்தம் | ஏளனம் , பரிகாசம் . |
| சக்காரம் | தேமாமரம் . |
| சக்கி | துண்டுச்சட்டம் . |
| சக்கிமுக்கி | நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் . |
| சக்கிமுக்கிக்கல் | நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் . |
| சக்கியம் | நட்பு ; சிநேகம் ; இயன்றது . |
| சக்கியன் | திறனுடையன் ; தோழன் . |
| சக்கியார்த்தம் | சொல்லாற்றலால் உணரும் பொருள் . |
| சக்கிரநாயகம் | ஓமாலிகைகளுள் ஒன்றாகிய புலி நகம் . |
| சக்கிரபாதம் | உருளைகளைக் காலாக உடைய வண்டி ; வட்டவடிவுள்ள கால்களை உடைய யானை . |
| சக்கிரம் | வட்டம் . |
| சக்கிரமுகம் | பன்றி . |
| சக்கிரயானம் | வண்டி . |
| சக்கிரலேகை | ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு . |
| சக்கிரவாதம் | சுழல்காற்று . |
| சக்கிரன் | இந்திரன் . |
| சக்கிராதம் | பன்றி . |
| சக்கிரி | சக்கரத்தை உடையவன் ; அரசன் ; திருமால் ; இந்திரன் ; குயவன் ; செக்கான் ; பாம்பு ; |
| சக்கிரிகை | முழந்தாள் . |
| சக்கிரிவதம் | கழுதை . |
| சக்கிலி | தோல்வினைஞன் ; சக்கிலியச்சாதி . |
| சக்கிலிக்குருவி | மீன்கொத்திப்பறவை . |
| சக்கிலிச்சி | சக்கிலிச்சாதிப் பெண் ; சத்திசாரம் என்னும் மருந்து . |
| சக்கிலியன் | தோல்வேலை செய்பவன் , செம்மான் . |
| சக்கு | கண் ; பூஞ்சணம் . |
| சக்குக்கட்டுதல் | பூஞ்சணம் கட்டுதல் . |
| சக்குச்சக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சக்குபு | கரிசாலைப்பூடு . |
| சக்குவரி | ஒற்றொழித்து அடியொன்றுக்குப் பதினான்கு எழுத்துகள்கொண்ட நாலடிச் சந்தவிருத்தம் . |
| சக்கை | கோது ; பட்டை ; சிராய் ; சிறு மரத்தக்கை ; துப்பாக்கித் தக்கை ; பலா ; காட்டுப் பலா . |
| சக்கைப்போடுபோடுதல் | திறமையாகச் செய்தல் . |
| சக்கையன் | உடல்வலிமை இல்லாது படுத்திருப்பவன் . |
| சக்கையாய்ப் பிழிதல் | கடுமையாக வேலை வாங்குதல் . |
| சக்கைவாங்குவாங்குதல் | சக்கையாய்ப் பிழிதல் ; மிகக் கடிந்து பேசுதல் . |
| சக்கோலி | ஒரு பூடுவகை . |
| சக்தி | சத்தி , சிவனது அருள் ; வல்லமை ; பார்வதி ; ஆற்றல் . |
| சக்திபூசை | சத்தியை வழிபடுதல் . |
| சக்திமான் | ஆற்றலுள்ளவன் . |
| சக்திமுகம் | அரசனது ஆணைப்பத்திரம் . |
| சக்தியானுசாரம் | ஆற்றலுக்கு ஏற்ப . |
| சக | கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு |
| சககமனம் | இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை யேறுதல் . |
| சககாரம் | காண்க : சக்காரம் . |
| சககாரி | துணைக்காரணம் . |
| சக்கரவாகம் | சக்கரவாளம் , இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறப்படும் ஒரு பறவைவகை ; ஒரு பண்வகை . |
| சக்கரவாணம் | சக்கரம்போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம் . |
| சக்கரவாளக்கோட்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில் . |
| சக்கரவாளம் | உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை ; மேருமலையின் மூன்றாந் தாழ்வரை ; சக்கரவாளக்கோட்டம் ; சக்கரவாகம் ; வட்டவடிவு . |
| சக்கரவிருத்தி | வட்டிக்கு வட்டி . |
| சக்கரன் | திருமால் ; இந்திரன் ; பன்னிரு கதிரவருள் ஒருவன் . |
| சக்கராகாரம் | வட்டவடிவு . |
| சக்கராயுதன் | சக்கரப்படையை உடைய திருமால் . |
| சக்கராயுதி | கொற்றவை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 405 | 406 | 407 | 408 | 409 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சக்கரவாகம் முதல் - சககாரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருமால், இந்திரன், உடைய, பூஞ்சணம், என்னும், மனைவி, ஒருவனுடைய, சக்கையாய்ப், பிழிதல், வட்டவடிவு, சக்கரவாளக்கோட்டம், சக்கரவாளம், சக்கரவாகம், பன்றி, வண்டி, சக்காரம், ஒருவன், சண்டை, நிகழும், நெருப்புண்டாக்கப், பயன்படும், சக்கை, பொருள், தீத்தட்டிக், மனைவியருக்குள்

