முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அர்த்தாபத்தி முதல் - அரசாளுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அர்த்தாபத்தி முதல் - அரசாளுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அரசச்சின்னம் | அரசாங்க அடையாளம் . |
| அரசண்மை | பகையரசன் அணித்தாக இருக்கை . |
| அரசநீதி | அரசியல் கூறும் நூல் ; அரசியல் கோட்பாடு . |
| அரசப்பிரதட்சிணம் | அரசமரத்தை வலம்வருகை . |
| அரசம் | சுவையில்லாதது ; மூலநோய் . |
| அரசமரம் | மரவகையுள் ஒன்று . |
| அரசமுல்லை | அரசன் தன்மை கூறும் புறத்துறை . |
| அரசர் அறுகுணம் | அரசனின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆறு தன்மைகள் ; அவை : நட்பு , பகை , செலவு , இருக்கை , கூடினரைப் பிரித்தல் , கூட்டல் . |
| அரசர் அறுதொழில் | அரசர்க்குரிய ஆறு தொழில்கள் ; அவை : ஓதல் , வேட்டல் , ஈதல் , படைக்கலம் பயிறல் , பல்லுயிரோம்பல் , பகைத்திறம் தெறுதல் . |
| அரசர்பா | காண்க : ஆசிரியப்பா . |
| அரசவாகை | அரசன் இயல்பு கூறும் புறத்துறை . |
| அரசவாரியன் | குதிரை நடத்துவோரில் சிறந்தவன் . |
| அரசவிலை முருகு | காதணிவகை . |
| அரசளித்தல் | காண்க : அரசாளுதல் . |
| அரசன் | நாடாள்வோன் ; துருசு ; வன்னியன் ; வியாழன் ; பூவரசு ; கோவைக்கொடி . |
| அரசன்விருத்தம் | நூல்வகை . |
| அரசன்விரோதி | கோவைக்கொடி ; பூவரசமரம் . |
| அரசாங்கம் | அரச உறுப்பு ; அரசியல் துறைகள் ; அரசாட்சி . |
| அரசாட்சி | அரசு நிருவாகம் . |
| அரசாணி | அரசங்கொம்பு ; மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை ; அரசி ; அம்மி . |
| அரசாணிக்கால் | அரசங்கொம்பு . |
| அரசாணிமேடை | அரசங்கால் நட்ட திருமணமேடை . |
| அரசாளுதல் | அரசு செய்தல் . |
| அர்த்தாபத்தி | ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல் . |
| அருத்தாபத்தி | ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல் . |
| அர்த்தித்தல் | இரத்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் . |
| அர்ப்பணம் | உரிமைப்படுத்துதல் ; காணிக்கை செலுத்துகை ; படைத்தல் . |
| அர்ப்பித்தல் | உரியதாக்குதல் . |
| அர்ப்பிதம் | உரியதாக்கப்பட்டது . |
| அர | காண்க : அரா . |
| அரக்கம் | நன்னாரி ; அகில் ; அவலரக்கு ; குருதி ; பாதுகாப்பு . |
| அரக்கன் | இராக்கதன் ; சூடு போடுதற்குரிய மாடு . |
| அரக்காம்பல் | செவ்வாம்பல் . |
| அரக்கி | இராக்கதப் பெண் ; நஞ்சு . |
| அரக்கிலச்சினை | அரக்காலிடும் முத்திரை . |
| அரக்கு | செம்மெழுகு ; சிவப்பு ; சாதிலிங்கம் ; சாராயம் ; கஞ்சி ; எள்ளின் காயில் காணும் ஒருவகை நோய் . |
| அரக்குக்காந்தம் | ஒருவகைத் காந்தக்கல் . |
| அரக்குச்சாயம் | துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம் . |
| அரக்குத்தைலம் | கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் . |
| அரக்குதல் | தேயத்தல் ; அழுத்தல் ; வருத்துதல் ; சிதைத்தல் ; முழுதும் உண்ணுதல் ; இருப்பு விட்டுப் பெயர்த்தல் . |
| அரக்குநீர் | சாதிலிங்கம் கலந்த நீர் ; ஆலத்திநீர் ; குருதி . |
| அரக்குமஞ்சள் | கருஞ்சிவப்பு மஞ்சள் ; பூசு மஞ்சள் . |
| அரகர | 'சிவசிவ' எனப் பொருள்படும் ஓரடுக்கு மொழி . |
| அரங்க | முழுதும் . |
| அரங்கநாதன் | அவைத்தலைவன் ; திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் . |
| அரங்கபூசை | இடவழிபாடு ; போர் , பந்தயம் , நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை . |
| அரங்கபூமி | போர்க்களம் ; திரையரங்கம் , நாடக மேடை . |
| அரங்கம் | நாடகமேடை ; போர்க்களம் ; சூதாடும் இடம் ; படைக்கலக் கொட்டில் ; அவை : ஆற்றிடைக்குறை ; திருவரங்கம் ; தரா . |
| அரங்கமேடை | நாடக மேடை ; சொற்பொழிவு மேடை . |
| அரங்கன் | காண்க : அரங்கநாதன் . |
| அரங்கி | வஞ்சகம் உடையவள் ; நடிகை . |
| அரங்கு | அரங்கம் ; கருப்பம் ; உள்வீடு . |
| அரங்குதல் | தைத்தல் ; அழிதல் ; அழுந்துதல் ; வருத்துதல் ; உருகுதல் . |
| அரங்கவீடு | உள்ளறை . |
| அரங்கேசன் | காண்க : அரங்கநாதன் . |
| அரங்கேற்றம் | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை . |
| அரங்கேற்று | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை . |
| அரங்கேற்றுதல் | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல் . |
| அரசங்கம் | அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தாபத்தி முதல் - அரசாளுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மேடை, முதன்முறை, முதலியவற்றை, புதுநூல், அரங்கநாதன், நடனம், அரசியல், கூறும், அரசன், மஞ்சள், முழுதும், ஒருவகைத், வருத்துதல், போர்க்களம், நாடக, காட்டும், செய்கை, சாதிலிங்கம், அரங்கம், சபைக்குக், கொண்டு, கோவைக்கொடி, அரசாட்சி, அரசு, அரசாளுதல், பிரித்தல், புறத்துறை, அரசர், அரசங்கொம்பு, அரசங்கால், சொல்லப்படாத, பொருளைப், இருக்கை, சொல்லியது, செய்தல், அளவை, குருதி

