முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொள்ளிவைத்தல் முதல் - கொற்றவைநிலை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொள்ளிவைத்தல் முதல் - கொற்றவைநிலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொளுக்கி | கொக்கி . |
| கொளுகொம்பு | காண்க : கொழுகொம்பு . |
| கொளுகொளுத்தல் | காண்க : கொளகொளத்தல் . |
| கொளுச்சொல் | கருத்து . |
| கொளுத்து | உடற்சந்து ; ஆபரணங்களின் பூட்டு . |
| கொளுத்துதல் | கொள்ளச்செய்தல் ; விளக்குதல் ; அறிவுறத்தல் ; தீப்பற்றவைத்தல் ; வீணை முதலியன வாசித்தல் ; நாடகம் முதலியவற்றை நடத்தல் ; தண்டித்தல் ; சண்டை மூட்டுதல் ; கடுமையாய் வெயில் காய்தல் ; தூற்றுதல் ; வியக்கும்படி செயல்புரிதல் . |
| கொளுந்துதல் | தீப்பற்றுதல் . |
| கொளுவி | கொக்கி . |
| கொளவிக்கொள்ளுதல் | பின்னிக்கொள்ளுதல் ; பற்றுதல் . |
| கொளுவிப்பிடித்தல் | மாட்டிவிடுதல் ; வசப்படுத்துதல் ; வழக்கு தொடுத்தல் . |
| கொளுவியிழுத்தல் | சண்டைக்கு இழுத்தல் ; துன்பத்துக்கு உள்ளாக்குதல் . |
| கொளுவுகயிறு | ஏடு கட்டும் கயிற்றின் முடிப்பு . |
| கொளுவுதல் | கொள்ளச்செய்தல் ; தீ மூட்டுதல் ; பூட்டுதல் ; தூண்டிலிடுதல் ; அகப்படுதல் ; மிதியடி முதலியன அணிதல் ; வேலையில் அமர்தல் ; சிக்குதல் ; தந்திரஞ்செய்தல் ; குடல் தூக்கிகொள்ளதல் . |
| கொளை | பிடிப்பு ; கோட்பாடு ; பயன் ; இசை ; தாளம்போடுதல் ; பாட்டு . |
| கொளையமைத்தல் | வில்லை நாணேற்றுதல் . |
| கொற்கைவேந்தன் | கொற்கைநகர்த் தலைவனான பாண்டியன் . |
| கொற்சேரி | கொல்லன் இருப்பிடம் . |
| கொற்றக்குடை | அரசாங்கக் குடை . |
| கொற்றத்தேவி | பட்டத்தரசி . |
| கொற்றப்பெருங்கணி | அரசாங்கச் சோதிடன் . |
| கொற்றம் | வெற்றி ; வீரம் ; வலிமை ; வன்மை ; அரசியல் . |
| கொற்றம்வைத்தல் | அரசாட்சியை ஒருவரிடம் ஒப்புவித்தல் . |
| கொற்றமுரசு | அரசாங்கத்திற்குரிய வெற்றி முரசு . |
| கொற்றவஞ்சி | பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருக உரைக்கும் புறத்துறை . |
| கொற்றவள்ளை | பகைவர் நாடு அழிவதற்கு வருந்துவதைக் கூறும்முகத்தான் அரசன் புகழைச் சொல்லும் புறத்துறை ; நாடழிகை ; தோற்ற வேந்தன் கொடுக்கும் திறை . |
| கொற்றவன் | அரசன் ; வெற்றியுடையோன் ; முடக்கொற்றான் . |
| கொற்றவாயில் | அரசவாயில் ; ஆசாரவாயில் . |
| கொற்றவி | அரசி . |
| கொற்றவுழிஞை | பகைவர் நகரைக் கைக்கொள்ளுதற் பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுவதைக் கூறும் புறத்துறை . |
| கொற்றவை | வெற்றிக்குரியவள் , துர்க்கை . |
| கொற்றவைநிலை | துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை . |
| கொள்ளிவைத்தல் | நெருப்புவைத்தல் ; எரிவினை செய்தல் ; தீங்கு செய்தல் ; கலகம் மூட்டுதல் . |
| கொள்ளு | காணம் , ஒரு தானியவகை . |
| கொள்ளுதல் | எடுத்துக்கொள்ளுதல் ; பெறுதல் ; விலைக்குவாங்குதல் ; உரிமையாகக்கொள்ளுதல் ; மணம் செய்துகொள்ளுதல் ; கவர்தல் ; உள்ளே கொள்ளுதல் ; முகத்தல் ; கற்றுக்கொள்ளுதல் ; கருதுதல் ; நன்குமதித்தல் ; கொண்டாடுதல் ; அங்கீகரித்தல் ; மேற்கொள்ளதல் ; மனம் பொறுத்தல் ; ஒத்தல் ; பொருந்துதல் ; உடலிற் காயம்படுதல் ; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை . |
| கொள்ளுநர் | கொள்வோர் ; கற்போர் . |
| கொள்ளுப்பாட்டன் | பாட்டனுக்குத் தந்தை , இரண்டாம் பாட்டன் . |
| கொள்ளுப்பேரன் | பேரனின் மகன் . |
| கொள்ளெனல் | பறை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; மிகுதிக் குறிப்பு . |
| கொள்ளை | சூறையாடுதல் ; மிகுதி ; கூட்டம் ; பெருவாரிநோய் ; தடை ; விலை ; பயன் . |
| கொள்ளைக்காய்ச்சல் | நச்சுச்சுரம் . |
| கொள்ளைக்காரன் | கொள்ளையடிப்பவன் . |
| கொள்ளைகொடுத்தல் | பறிகொடுத்தல் . |
| கொள்ளைகொள்ளுதல் | கவர்தல் ; கொள்ளையடித்தல் . |
| கொள்ளைநோய் | பெருவாரிநோய் . |
| கொள்ளைபோதல் | பொருள் முதலியன பலவாறாக அழிபடுதல் ; களவுபோதல் . |
| கொள்ளையடித்தல் | சூறையாடுதல் . |
| கொள்ளையாடுதல் | சூறையாடுதல் . |
| கொள்ளையூட்டுதல் | கொள்ளைகொள்ளும்படி விடுதல் . |
| கொளகொளத்தல் | தளர்தல் ; இளகியிருத்தல் . |
| கொளகொளெனல் | ஈரடுக்கொலிக்குறிப்பு ; குழறுதற்குறிப்பு ; இளகியிருத்தற்குறிப்பு . |
| கொளல்வினா | ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி . |
| கொளாஅல் | கொள்ளச்செய்கை . |
| கொளு | செய்யுள் முதலியவற்றின் கருத்தை விளக்கும் செற்றொடர் ; பழுவெலும்பு ; உருவுதிரையை மாட்டுங் கருவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 392 | 393 | 394 | 395 | 396 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொள்ளிவைத்தல் முதல் - கொற்றவைநிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், புறத்துறை, சூறையாடுதல், அரசன், முதலியன, மூட்டுதல், கொள்ளுதல், கொள்ளையடித்தல், கவர்தல், முதலியவற்றின், பெருவாரிநோய், செய்தல், பகைவர், கொள்ளச்செய்தல், கொளகொளத்தல், பயன், வெற்றி, கொக்கி, காண்க

