முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொல்லிவெற்பன் முதல் - கொழுந்தாடை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொல்லிவெற்பன் முதல் - கொழுந்தாடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொழு | கொழுப்பு ; உலோகக்கோல் ; ஏர்க்காறு , கலப்பையிற் பதிக்கும் இரும்பு ; துளையிடும் பெரிய ஊசி . |
| கொழுக்கட்டை | வெல்லம் முதலியன சேர்த்து அரிசி மாவால் செய்யும் சிற்றுண்டிவகை . |
| கொழுக்கொடுத்தல் | இளக்காரங் கொடுத்தல் ; பெருமையுண்டாக்குதல் . |
| கொழுகொம்பு | கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு ; பற்றுக்கோடு ; மரத்தின் நடு கொம்பு . |
| கொழுங்கிரி | மல்லிகைச்செடி . |
| கொழுச்சிராய் | கலப்பையிற் கொழுவை இணைக்கும் மரத்துண்டு . |
| கொழுத்தட்டுதல் | கலப்பைக்காற்றைக் கூர்மையாக்குதல் . |
| கொழுத்தல் | செழித்தல் ; உடற்கொழுப்பு மிகுதல் ; வளம்மிகுத்தல் ; குழம்பாயிருத்தல் ; திமிர்கொள்ளுதல் ; பூமி மதர்த்தல் . |
| கொழுத்தாடை | கரும்பின் நுனிப் பகுதி . |
| கொழுந்தாடை | கரும்பின் நுனிப் பகுதி . |
| கொல்லுதல் | வதைத்தல் ; அழித்தல் ; வெட்டுதல் ; கதிரறுத்தல் ; துன்பப்படுத்துதல் ; கெடுத்தல் . |
| கொல்லுலை | கொல்லனின் உலைக்கூடம் ; கம்மாளர் உலைமுகம் . |
| கொல்லெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; ஒலியடங்குதற் குறிப்பு . |
| கொல்லை | முல்லைநிலம் ; புன்செய்நிலம் ; தரிசு ; தினைப்புனம் ; தோட்டம் ; புழைக்கடை ; மலங்கழிக்குமிடம் ; மலம் ; வரம்புகடந்து ஒழுகுவோர் . |
| கொல்லைக்காரன் | தோட்டம் , வயல் முதலியவற்றில் வேலைசெய்பவன் ; குப்பையெடுப்பவன் . |
| கொல்லைக்குப்போதல் | மலங்கழித்தல் . |
| கொல்லைப்பயிர் | மேட்டுநிலப் பயிர் . |
| கொல்லைமை | வரம்புகடந்து நடத்தல் . |
| கொல்லைவிளைவித்தல் | தோட்டம் பயிரிடுதல் . |
| கொல்லைவெளி | வயல்வெளி . |
| கொலு | அரசசபை ; அரச முன்னிலை ; திருவோலக்கம் , உல்லாச வீற்றிருப்பு ; நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைக்கை . |
| கொலுக்கூடம் | கொலுமண்டபம் ; அரசவை . |
| கொலுகொலுத்தல் | கலகலத்தல் ; மட்கிப் போதல் ; வாதத்தில் தோற்றல் ; ஓயாமல் பேசுதல் . |
| கொலுகொலுப்பு | பகட்டு , ஆடம்பரம் ; கொலு கொலுத்தல் ; ஓயாமல் பேசுதல் . |
| கொலுசு | காலணியுள் ஒன்று , சங்கிலி . |
| கொலுமண்டபம் | திருவோலக்க மண்டபம் . |
| கொலுவிடுத்தல் | வீற்றிருத்தல் . |
| கொலை | உயிர்வதை , உயிரை உடம்பினின்று நீக்கல் . |
| கொலைக்கடம்பூட்டுதல் | கொலைத்தண்டனை நிறைவேற்றுதல் . |
| கொலைக்களம் | கொல்லப்படும் இடம் . |
| கொலைக்குற்றம் | உயிர்வதை செய்தலாகிய குற்றம் . |
| கொலைகாரன் | கொலை செய்வோன் ; பழிபாவங்களுக்கு அஞ்சாதவன் . |
| கொலைச்சிறை | சிறைச்சாலையில் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளை வைக்கும் அறை . |
| கொலைசெய்தல் | கொல்லுதல் . |
| கொலைஞன் | கொலைகாரன் ; வேடன் ; சண்டாளன் . |
| கொலைநவிலுதல் | கொலைசெய்தல் . |
| கொலைநன் | கொலைகாரன் . |
| கொலைப்பழி | கொல்லுதலாகிய பெரும் பாவம் ; பெருந் தீச்செயல் , |
| கொலைப்பாதகம் | கொல்லுதலாகிய பெரும் பாவம் ; பெருந் தீச்செயல் , |
| கொலைப்பாதகன் | கொலைசெய்பவன் . |
| கொலைமகள் | கொற்றவை ; துர்க்கை . |
| கொலைமலை | கொலைசெய்யும் மலையாகிய யானை . |
| கொலையாளன் | காண்க : கொலைகாரன் . |
| கொலையாளி | காண்க : கொலைகாரன் . |
| கொலையுண்ணுதல் | கொலைசெய்யப்படுதல் . |
| கொலைவன் | கொலைகாரன் ; வேடன் ; சிவன் . |
| கொவ்வை | கொவ்வைக்கொடி . |
| கொவ்வைக்காய்ப்பதம் | கொவ்வைக்காய் போன்ற பசுமையாய் நெற்பயிரில் தோன்றும் இளம்பதம் . |
| கொவிந்தம் | செம்முள்ளிச்செடி . |
| கொவிள் | ஒருமரவகை . |
| கொழிஞ்சி | கிச்சிலி ; ஒருவகை நாரத்தை மரம் ; கொள்ளுக்காய்வேளை ; பூவாது காய்க்கும் மரம் . |
| கொழுஞ்சி | கிச்சிலி ; ஒருவகை நாரத்தை மரம் ; கொள்ளுக்காய்வேளை ; பூவாது காய்க்கும் மரம் . |
| கொழித்தல் | தெள்ளுதல் ; ஒதுக்குதல் ; வாருதல் ; பொழிதல் ; கொப்புளித்தல் ; குற்றங்கூறுதல் ; ஆராய்தல் ; பாராட்டிச் சொல்லுதல் ; தொனித்தல் ; செழிப்புறுதல் ; மேலே கிளம்புதல் . |
| கொழிப்பு | கொழிக்கை ; செழிப்பு ; குற்றம் . |
| கொழிப்பூண்டு | குப்பைமேனிப்பூடு . |
| கொழியல் | கொழிப்பு ; தவிடெடுபடாத அரிசி . |
| கொழியலரிசி | நன்றாகக் குற்றித் தீட்டப்படாத அரிசி . |
| கொல்லிவெற்பன் | காண்க : கொல்லிச்சிலம்பன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 390 | 391 | 392 | 393 | 394 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொல்லிவெற்பன் முதல் - கொழுந்தாடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொலைகாரன், மரம், காண்க, அரிசி, தோட்டம், தீச்செயல், பெருந், பாவம், கொல்லுதலாகிய, பெரும், ஒருவகை, காய்க்கும், கொழிப்பு, பூவாது, கொள்ளுக்காய்வேளை, வேடன், நாரத்தை, கிச்சிலி, கலப்பையிற், கொல்லுதல், வரம்புகடந்து, பகுதி, நுனிப், கொம்பு, கரும்பின், கொலு, கொலுமண்டபம், உயிர்வதை, குற்றம், கொலை, பேசுதல், ஓயாமல், கொலைசெய்தல்

