தமிழ் - தமிழ் அகரமுதலி - கோகனதம் முதல் - கோட்டம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோட்டம் | வளைவு ; வணக்கம் ; நடுநிலை திறம் புகை ; மனக்கோணல் ; பகைமை ; பொறாமை ; நாடு ; நகரம் ; தோட்டம் ; கரை ; யாழ் ; மாக்கோலம் ; உண்பன ; பசுக்கொட்டில் ; பசுக்கூட்டம் ; குளம் ; வயல் ; நீர்நிலை ; குரங்கு ; வெண்குட்டம் ; அறை ; கோயில் ; ஒரு மணப்பண்டவகை ; மாறுபாடு ; சிறைச்சாலை ; இடம் ; வாசனைச் செடிவகை ; குராமரம் ; பாசறை ; பச்சிலை . |
| கோகுகட்டுதல் | காண்க : கோகுதட்டுதல் . |
| கோகுத்தம் | மல்லிகை . |
| கோகுதட்டுதுல் | தோள்தட்டி ஆரவாரஞ் செய்தல் . |
| கோகுலம் | கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி ; குயில் ; குரங்கு ; துளை ; கோயில் ; கொட்டில் ; பசுக்கூட்டம் . |
| கோகோவேனல் | பேரொலிசெய்தற் குறிப்பு . |
| கோங்கந்தட்டம் | கோங்கம்பூ . |
| கோங்கம் | நெல்லிமரம் ; ஒரு மரவகை . |
| கோங்கலர் | முற்காலத்தில் வழங்கிய ஒரு துகில் வகை . |
| கோங்கிலவு | ஒரு மரவகை . |
| கோங்கு | கோங்குவகை ; நீர்க்கோங்கு ; முள்ளிலவு ; மரவகை . |
| கோசக்கம் | குழப்பம் . |
| கோசகாரம் | பட்டுப்பூச்சி . |
| கோசங்கம் | வைகறை . |
| கோசணை | பேரொலி . |
| கோசம் | முட்டை ; உறை ; கவசம் ; ஐந்து கோசம் ; மதிலுறுப்பு ; ஆண்குறி ; கருப்பை ; கருவூலம் ; கருவூல அறை ; அகரமுதலி முதலிய புத்தகம் ; பட்டா ; அபிநயத்துக்குரிய அலிக்கை வகை ; தொகுதி ; சாதிக்காய் ; வீதி ; அடங்கல் கணக்கு . |
| கோசம்பி | கௌசாம்பி என்னும் நகரம் . |
| கோசமதம் | ஆண்யானையின் குறியிலிருந்து வரும் மதநீர் . |
| கோசமம் | பீர்க்கங்கொடி . |
| கோசமாற்றுதல் | பட்டா முதலியவற்றிற் பேர் மாற்றுதல் . |
| கோசர் | பழைய மறக்கடியினருள் ஒருசாரார் . |
| கோசரபலம் | சன்ம ராசியிலிருந்து தற்காலத்தில் கோள்கள் இருக்கும் நிலையின் பலன் . |
| கோசரம் | ஐம்பொறி , மனம் இவற்றுக்கு ஆதாரமானது ; பொறியுணர்வு ; ஊர் ; குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை ; கோசார பலன் ; கோத்திரம் ; பூந்தாது ; மகிழமரம் . |
| கோசரித்தல் | அறிவுக்குப் புலனாதல் . |
| கோசலம் | பசுமூத்திரம் ; கோசலநாடு ; பதினெண் மொழியுள் ஒன்று . |
| கோசலை | கோசலைநாடு ; இராமனின் தாய் . |
| கோசவதி | காண்க : கோசமம் . |
| கோசன் | சீர்பந்த பாடாணம் . |
| கோசனை | கோரோசனை ; பேரொலி . |
| கோசா | அலி ; அன்னிய ஆடவர் காணாதபடி திரையிட்டு வாழும் பெண்கள் . |
| கோசாங்கம் | நாணற்புல் . |
| கோசாரம் | குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை . |
| கோசாரி | காண்க : கோசமம் . |
| கோசாலை | ஓரங்கொய்து சுருக்கப்பட்ட ஆடை ; பசுக்கொட்டில் . |
| கோசாவித்திரி | பசுவைத் துதிக்கும் மந்திரம் . |
| கோசிகம் | பட்டாடை ; ஒரு பண்வகை ; சாமவேதம் ; கூகை . |
| கோசிகன் | குசிகர் மரபில் வந்தவனான விசுவாமித்திரன் . |
| கோசிகை | பட்டுச்சீலை . |
| கோசிலேபிடித்துவருதல் | காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் . |
| கோசிலேவருதல் | காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் . |
| கோசு | கூப்பிடு ; தொலைவு ; வீதி ; தோணிப் பாயின் முன்புறக் கயிறு ; தடவை ; தோல்வி ; செயல் ; முட்டைக்கோசு . |
| கோசப்பாய் | கப்பலின் பின்புறப் பாய் . |
| கோசுபோதல் | தாழ்ச்சியாதல் ; தோல்வியுறுதல் . |
| கோசுமந்தில் | படகின் பின்பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை . |
| கோட்காரன் | கோட்சொல்லுவோன் . |
| கோட்கூறு | இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை ; கிரகக்கோளாறு . |
| கோட்சொல்லி | குறளை சொல்லுவோன் . |
| கோட்டகம் | கரை ; பள்ளம் ; ஆழமான நீர்நிலை . |
| கோட்டங்காவலர் | சிறைக்கூடங் காப்போர் . |
| கோகு | புயம் ; கபடம் ; அடைவுகேடு ; கழுதை . |
| கோகனதம் | காண்க : கோகனகம் . |
| கோகனதன் | நான்முகன் , பிரமன் . |
| கோகனதை | தாமரையில் இருப்பவளாகிய திருமகள் . |
| கோகனம் | கரிசலாங்கண்ணி ; நிலக்கடம்புப்பூடு ; நிலவேம்பு . |
| கோகிலம் | குயில் ; பல்லி ; குரங்கு ; துளை ; சிறு குறிஞ்சாக்கொடி ; கலப்பை ; உலக்கை . |
| கோகிலவாசம் | குயிலுக்கு இருப்பிடமாகிய மாமரம் . |
| கோகிலாட்சம் | நீர்முள்ளிச்செடி ; கொம்மட்டி மாதுளை மரம் . |
| கோகிலோற்சவம் | குயிலுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் மாமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோகனதம் முதல் - கோட்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மரவகை, இருக்கும், கோள்கள், கோசமம், குரங்கு, திசையிலே, செல்லும்படி, காற்றின், நிலை, காலத்தில், கப்பற், சுக்கானைத், மாமரம், குயிலுக்கு, பாய், திருப்புதல், குறித்த, பலன், பேரொலி, நீர்நிலை, துளை, குயில், கோசம், பட்டா, பசுக்கொட்டில், பசுக்கூட்டம், நகரம், வீதி, கோயில்

