தமிழ் - தமிழ் அகரமுதலி - அமைச்சன் முதல் - அயாசகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அய்யவி | காண்க : ஐயவி . |
| அய்யன் | காண்க : ஐயன் . |
| அய்யா | காண்க : ஐயா . |
| அயக்களங்கு | இரும்புத்துரு . |
| அயக்கம் | நோயின்மை . |
| அயக்கல் | அசக்கல் . |
| அயக்காந்தச் சிந்தூரம் | இறும்பும் கந்தகமும் சேர்ந்த சிந்தூரம் . |
| அயக்காந்தம் | ஒரு மருந்து ; ஊசிக்காந்தம் . |
| அயகம் | சிறுகுறிஞ்சாக்கொடி ; வசம்பு . |
| அயச்சிந்தூரம் | இரும்புச் சிந்தூரம் . |
| அயசு | இரும்பு ; எஃகு ; வழுக்குநிலம் . |
| அயசுபடில் | வெள்ளீயமணல் . |
| அயணம் | செலவு ; பயணம் . |
| அயபற்பம் | இரும்புத்தூள் . |
| அயம் | ஐயம் ; நீர் ; சுனை ; குளம் ; சேறு ; நிலம் ; அயசு ; சிறுபூலா ; அலரிச்செடி ; ஆடு ; குதிரை ; முயல் ; விழா ; பாகம் ; நல்வினை ; இறும்பு ; அரப்பொடி . |
| அயமகம் | காண்க : அசுவமேதம் . |
| அயமரம் | அலரிமரம் . |
| அயமி | வெண்கடுகு . |
| அயமுகம் | ஓர் இருக்கைவகை . |
| அயமேதம் | காண்க : அசுவமேதம் . |
| அயர் | வாட்டம் . |
| அயர்ச்சி | மறதி ; சோர்வு , வருத்தம் ; வெறுப்பு . |
| அயர்த்தல் | மறத்தல் . |
| அயர்தல் | அயர்ச்சி ; செலுத்துதல் ; விரும்புதல் ; வழிபடுதல் ; விளையாடுதல் . |
| அயர்தி | சோர்வு ; மறதி . |
| அயர்ப்பு | சோர்வு ; மறதி . |
| அயர்வு | சோர்வு ; மறதி . |
| அயல் | இடம் ; அருகு ; வெளியிடம் ; காரம் . |
| அயலகம் | அடுத்த வீடு . |
| அயலவன் | பக்கத்தான் ; அன்னியன் . |
| அயலார்காட்சி | நேர்நின்று பார்த்தவர்களின் காட்சி . |
| அயலான் | காண்க : அயலவன் ; பகைவன் . |
| அயலி | வெண்கடுகு . |
| அயலுரை | இயைபில்லாத பேச்சு ; அயலார் ஒருப் பட்டவுரை . |
| அயவணம் | ஒட்டகம் . |
| அயவாகனன் | ஆட்டை ஊர்தியாகவுடையவன் , அக்கினிதேவன் . |
| அயவாரி | வசம்பு . |
| அயவி | காண்க : சிற்றரத்தை . |
| அயவெள்ளை | இரும்புத்தூள் . |
| அயற்படுதல் | நீங்கிப்போதல் . |
| அயறு | புண்வழலை ; புண்ணீர் கசிந்து பரவுதல் . |
| அயன் | பிரமன் ; மகேச்சுரன் ; அருகன் ; தசரதன் ; தந்தை ; அரசுநிலம் . |
| அயன்சமா | அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி ; பிற வரிகள் நீங்கிய தனி நிலவரி . |
| அயன்சமாபந்தி | ஆண்டு நிலவரித் தணிக்கை . |
| அயன்தரம் | நிலத்தின் முதல் மதிப்பு . |
| அயன்தீர்வை | நிலவரி . |
| அயன்நிலம் | அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்துதற்குரிய நிலம் . |
| அயன்மணம் | எண்வகை மணங்களுள் ஒன்று ; காண்க : பிரசாபத்தியம் . |
| அயன்மை | அன்னியம் . |
| அயனகாலம் | கோள்களிடையே நிகழும் காலம் . |
| அயனப்பிறப்பு | உத்தராயண தட்சணாயணங்களின் தொடக்கம் . |
| அயனம் | வரலாறு ; ஆண்டில் பாதி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது போகும் காலம் ; ஆண்டுப்பிறப்பு ; வழி ; வீடு . |
| அயனாள் | உரோகிணிநாள் ; பிரமன் பிறந்தநாள் ; பிரமன் வாழ்நாள் . |
| அயா | தளர்ச்சி . |
| அயாசகம் | கேளாது கிடைக்கும் பிச்சை . |
| அமைச்சன் | மந்திரி ; வியாழன் . |
| அமைச்சு | அமைச்சன் ; அமைச்சு இயல் . |
| அமைத்தல் | படைத்தல் ; பதித்தல் ; சேர்த்தல் ; சமைத்தல் . |
| அமைதல் | உண்டாதல் ; தகுதியாதல் ; பொருந்தல் ; அடங்குதல் ; நிறைதல் ; உடன்படுதல் ; முடிதல் . |
| அமைதி | பொருத்தம் ; தன்மை ; நிறைவு ; காலம் ; செய்கை ; அடக்கம் ; சாந்தம் ; மாட்சிமை ; உறைவிடம் . |
| அமைப்பு | நியமிப்பு ; விதி ; ஊழ்வினை ; நிறுவனம் . |
| அமையம் | காண்க : அம(மை)யம் ; இலாமிச்சை . |
| அமைவடக்கம் | பண்பட்ட ஒழுக்கம் . |
| அமைவரல் | மனங்கொளல் . |
| அமைவன் | முனிவன் ; அருகன் ; கடவுள் . |
| அமைவு | அமைதி ; ஒப்பு . |
| அமோகப்படை | மருள் அகற்றும் படை . |
| அமோகபாணம் | குறிதவறாத அம்பு . |
| அமோகம் | மோகமின்மை ; மிகுதி ; குறிதவறாமை ; ஒரு வாயு . |
| அமோகன் | மயக்கம் அற்றவன் . |
| அமோகி | மயக்கம் அற்றவன் . |
| அய்யங்கார் | காண்க : ஐயங்கார் . |
| அய்யர் | காண்க : ஐயர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமைச்சன் முதல் - அயாசகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மறதி, சோர்வு, காலம், பிரமன், சிந்தூரம், நிலவரி, அருகன், அமைச்சு, அற்றவன், மயக்கம், அமைதி, அமைச்சன், அயலவன், அசுவமேதம், நிலம், இரும்புத்தூள், வெண்கடுகு, அயர்ச்சி, வீடு, வசம்பு, அயசு

