தமிழ் - தமிழ் அகரமுதலி - கூந்து முதல் - கூரைதட்டுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கூர் | மிகுதி ; கூர்மை ; கூர்நுனி ; குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு ; இலையின் நடுநரம்பு ; கதிர்க்கூர் ; காரம் ; குத்துப் பாடான பேச்சு ; மிக்க ; சிறந்த . |
கூர்க்கறுப்பன் | ஒருவகை உயர்ந்த நெல் . |
கூர்கெடுதல் | நுனி மழுங்குதல் ; அறிவு மழுங்குதல் . |
கூர்கேவு | வெண்கடுகு . |
கூர்ங்கண் | ஊடுருவிப் பார்க்குங் கண் . |
கூர்ச்சகன் | நெய்வோன் . |
கூர்ச்சம் | கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால் ; தருப்பை ; தருப்பைக்கொத்து . |
கூர்ச்சரி | ஒரு பண்வகை . |
கூர்ச்சி | கூர்மை . |
கூர்ச்சிகை | எழுதுகோல் . |
கூர்ச்சு | கூர்மை ; கூருள்ள தடி . |
கூர்ச்சேகரம் | தென்னைமரம் . |
கூர்ச்சீட்டு | கூறுசீட்டு ; பாகபத்திரம் . |
கூர்சீவுதல் | கூராக்குதல் ; சீவுதல் ; பகை மூட்டுதல் . |
கூர்த்தல் | மிகுதல் ; கூர்மையாதல் ; அறிவு நுட்பமாதல் ; உவர்த்தல் : சினத்தல் . |
கூர்த்திகை | மட்டிப் படைக்கலம் ; ஆயுதப்பொது . |
கூர்தல் | மிகுதல் ; விரும்புதல் ; வனைதல் ; குளிரால் உடம்பு கூனிப்போதல் . |
கூர்ந்தபஞ்சமம் | மருத யாழ்த்திறவகை . |
கூர்ப்பது | உள்ளது சிறத்தல் ; உறைப்பு ; கூர்மை ; மிகுதி . |
கூர்ப்பம் | புருவமத்தி . |
கூர்ப்பரம் | முழங்கை . |
கூர்ப்பிடுதல் | தீட்டிக் கூர்மையாக்குதல் . |
கூர்ப்பு | உள்ளது சிறத்தல் ; கூர்மை ; அறிவு நுட்பம் ; உவர்ப்பு . |
கூர்மக்கை | பெருவிரலை நீட்டி மற்றை விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் அபிநயக் கைவகை . |
கூர்மம் | ஆமை ; திருமால் பிறப்புள் ஒன்று : கூர்மபுராணம் . |
கூர்மயோகம் | ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்த ஒரு யோகம் . |
கூர்மன் | தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு . |
கூர்மாதனம் | கால் மடித்து உட்காருகை , ஒரு வகை இருக்கை . |
கூர்மிகை | வீணைவகை . |
கூர்முள் | குதிரை செலுத்துங் கருவி . |
கூர்மை | ஆயுதங்களின் கூர் ; நுட்பம் ; சிறப்பு ; கல்லுப்பு ; வெடியுப்பு . |
கூர்மைக்கரிவாள் | சவர்க்காரம் . |
கூர்மைப்பார்த்தல் | ஆயுதக் கூர்மை சோதித்தல் ; ஒருவன் திறமையைக் சோதித்தல் . |
கூர்மையில்லோன் | மந்தன் . |
கூர்வாங்குதல் | கருவியைக் கூர்மையாக்குதல் . |
கூர்வாயிரும்பு | அரிவாள்மணை . |
கூர்வை | கப்பலின் குறுக்குக்கட்டை . |
கூரணம் | கோடகசாலைப்பூண்டு ; பாகல் . |
கூரம் | பாகற்கொடி ; கோடகசாலைப்பூண்டு ; கொடுமை: பொறாமை ; யாழ் . |
கூரல் | கூந்தல் ; இறகு ; ஒரு பெருமீன்வகை . |
கூரறுக்கும்வாள் | இரம்பவகை . |
கூரன் | கூர்நெல் ; நாய் ; ஆண்பாற் பெயர்வகை . |
கூராம்பிளாச்சு | மண்கொத்தும் மரக்கருவி . |
கூரியம் | கூர்மை . |
கூரியன் | புத்திக்கூர்மையுள்ளவன் ; புதன் . |
கூரிலவணம் | அமரியுப்பு . |
கூருமி | உமிமூக்கு . |
கூரை | வீட்டிறப்பு ; வீட்டுக்கூரை: சிறுகுடில் . |
கூரைக்கட்டு | கூரைவீடு . |
கூரைதட்டுதல் | ஆண்பிள்ளைப் பிறப்புக்கு மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத் தட்டுதல் . |
கூந்து | கூந்தல் ; குதிரைப் பிடரிமயிர் ; யானைக் கழுத்து மயிர் . |
கூப்பாடு | கூப்பிடுதல் ; முறையிடுதல் ; பேரொலி . |
கூப்பிடு | முறையீடு ; கூப்பிடு தொலைவு . |
கூப்பிடுதல் | அழைத்தல் ; வரவழைத்தல் ; அச்சம்: துயரம் முதலியவற்றால் கத்துதல் ; பேரொலி செய்தல் ; தொழுதற்குக் குவித்தல் . |
கூப்பிடுதூரம் | கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை , குரோசம் . |
கூப்பீடு | கூப்பிடுதல் ; முறையீடு ; கூப்பிடு தொலைவு . |
கூப்பு | குவியச்செய்கை . |
கூப்புதல் | கைகுவித்தல் ; குவித்தல் ; சுருக்குதல் . |
கூபகம் | இடுப்பிலுள்ள குழிவிடம் ; ஒரு நாடு . |
கூபம் | கிணறு . |
கூபரம் | முழங்கை . |
கூபரி | தேர் . |
கூபாரம் | கடல் . |
கூம்பல் | குமிழமரம் . |
கூம்பு | பாய்மரம் ; தேர்மொட்டு ; பூவரும்பு ; சேறு . |
கூம்புதல் | குவிதல் ; ஒடுங்குதல் ; ஊக்கம் குறைதல் . |
கூம்புவிடல் | தளையவிழ்தல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 366 | 367 | 368 | 369 | 370 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூந்து முதல் - கூரைதட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூர்மை, கூப்பிடுதல், கூப்பிடு, அறிவு, கூந்தல், கோடகசாலைப்பூண்டு, சோதித்தல், குவித்தல், பேரொலி, ஒருவன், தொலைவு, முறையீடு, கூர்மையாக்குதல், மழுங்குதல், உயர்ந்த, மிகுதி, மிகுதல், உள்ளது, கூர், முழங்கை, சிறத்தல், நுட்பம்