தமிழ் - தமிழ் அகரமுதலி - கூடுகொம்பன் முதல் - கூந்தாலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கூத்தரிசிக்காரி | அரிசி குற்றி விற்பவள் . |
| கூத்தன் | உயிர் ; நாடகன் ; சிவன் ; ஒட்டக்கூத்தன் ; துரிசு . |
| கூத்தன்குதம்பை | மூக்கொற்றிப்பூண்டு . |
| கூத்தாட்டு | நடிப்பு , நடனம் . |
| கூத்தாடி | நடன் ; கழைக்கூத்தன் ; கூத்தாடுவோன் . |
| கூத்தாடிச்சி | கூத்து நடிப்பவள் ; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள் . |
| கூத்தாடுதல் | நடித்தல் ; நடனம் ; மகிழ்ச்சி மிகுதல் ; செழித்திருத்தல் ; பிடிவாதமாய் வேண்டுதல் . |
| கூத்தி | நாடகக் கணிகை ; வேசி . |
| கூத்து | நடனம் ; பதினொருவகைக் கூத்து ; நாடகம் ; தெருக்கூத்து ; வியத்தகு செயல் ; கேலிக்கூத்து ; குழப்பம்: நாடகம்பற்றி அமைந்த ஒரு கடைச்சங்க நூல் . |
| கூத்துக்களரி | நடனசாலை . |
| கூத்துக்காரன் | கூத்தாடுவோன் ; கூத்தாட்டுவோன் ; விகடக்காரன் . |
| கூத்துப்பண்ணுதல் | வேடிக்கை பண்ணுதல் ; குழப்பஞ்செய்தல் . |
| கூத்துப்பாட்டு | நாடகப் பாடல் . |
| கூத்துள்படுவோன் | ஆடல் ஆசிரியன் . |
| கூதல் | குளிர் ; காய்ச்சற் குளிர் . |
| கூதளம் | கூதாளிச்செடி ; வெள்ளரிக்கொடி ; தூதுளைக்கொடி . |
| கூதறை | இழிந்தது ; இழிந்த குணமுடையவன் ; கிழியல் . |
| கூதனம் | இடக்கர்ச்சொல் ; மறைத்த சொல் . |
| கூதாரி | வெள்ளரிக்கொடி . |
| கூதாளம் | தூதுளைக்கொடி ; செடிவகை . |
| கூதாளி | தூதுளைக்கொடி ; செடிவகை . |
| கூதிர் | பனிக்காற்று ; ஒரு பெரும்பொழுது , ஐப்பசி கார்த்திகை சேர்ந்த பருவம் ; காற்று ; குளிர் . |
| கூதிர்ப்பாசறை | போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு . |
| கூதுளம் | காண்க : கூதாளம் . |
| கூதை | காற்று ; பனிக்காற்று . |
| கூதைசெய்தல் | காதை மூளியாக்குதல் . |
| கூந்தல் | மயிற்றோகை ; பெண்மயிர் ; மயிற்பீலி ; யானைக் கழுத்தின் அடிமயிர் ; குதிரைப் பிடரிமயிர் ; கமுகு , பனை இவற்றின் ஒலை ; கூந்தற் பனைமரம் ; பூ முதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு . |
| கூந்தல்கொள்ளுதல் | மகளிரைத் தழுவுதல் . |
| கூந்தல்தொடுதல் | மகளிரைத் தழுவுதல் . |
| கூந்தலாற்றுதல் | ஈரமயிரைக் கோதி உலர்த்துதல் . |
| கூந்தளம்பாவை | பூவகை . |
| கூந்தற்கமுகு | ஒருவகைக் கமுகு ; தாளிப்பனை . |
| கூந்தற்பனை | தாளிப்பனைமரம் ; திப்பிலிப் பனைமரம் . |
| கூந்தன்மா | குதிரை . |
| கூந்தாலம் | கடப்பாரை . |
| கூந்தாலி | கடப்பாரை . |
| கூத்தரிசி | குற்றிவிற்கும் அரிசி . |
| கூடுகொம்பன் | கொம்பின் முனைப்பாகம் தம்முட் கூடிய மாடு . |
| கூடுதல் | ஒன்றுசேர்தல் ; திரளுதல் ; பொருந்துதல் ; இயலுதல் ; கிடைத்தல் ; நேரிடுதல் ; இணங்குதல் ; தகுதியாதல் ; அதிகமாதல் ; தொடங்குதல் ; அனுகூலமாதல் ; உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் ; புணர்தல் ; அடைதல் ; மொத்தம் ; மேலெல்லை . |
| கூடுபூரித்தல் | நிரப்புதல் . |
| கூடுவாய்மூலை | மேற்கூரை இணையும் மூலை . |
| கூடுவிட்டுக் கூடுபாய்தல் | உயிர் ஒருடம்பைவிட்டு மற்றோர் உடம்பிற் புகுதல் . |
| கூடுவிடுதல் | இறத்தல் ; எலும்பு தோன்ற இளைத்தல் . |
| கூடுவிழுதல் | சாதல் ; கட்டியின் ஆணிவேர் கழலுதல் . |
| கூடை | பிரம்பு முதலியவற்றால் பின்னப்படும் கலம் ; பூக்கூடை ; ஈச்சங்கசங்கு , மூங்கில் முதலியவற்றால் செய்த கூடை ; மழைநீர் படாதபடி உடல்மேல் போட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி ; அபிநயக் கைவகை . |
| கூடைக்காரன் | கூடை விற்போன் ; கூடையில் காய்கறி விற்போன் . |
| கூடைப்பாடல் | சொற்செறிவும் இசைச்செறிவும் உடைய பாடல் . |
| கூடையன் | உடல் பருத்தவன் . |
| கூண்டடுப்பு | வளைவினுள் அமைந்த அனலடுப்பு . |
| கூண்டாதல் | மயிர் சிக்குப்படுதல் . |
| கூண்டு | கூடு ; பறவைக்கூடு . |
| கூண்டுதல் | கூடுதல் . |
| கூணிகை | வீணையின் ஓர் உறுப்பு . |
| கூத்தச் சாக்கையன் | கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான் . |
| கூத்தப்பள்ளி | அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு . |
| கூத்தம்பலம் | கூத்தாடுதற்குரிய கோயிலரங்கு . |
| கூத்தர் | நாடகம் நடிப்போர் . |
| கூத்தராற்றுப்படை | தலைவனைக் கண்டு மீண்ட இரவலன் கூத்தாடுபவரைத் தலைவனிடம் செலுத்தும் புறத்துறை ; மலைபடுகடாம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 365 | 366 | 367 | 368 | 369 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூடுகொம்பன் முதல் - கூந்தாலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூத்து, தூதுளைக்கொடி, குளிர், கூடை, நடனம், மகளிரைத், கமுகு, உறுப்பு, பனைமரம், கடப்பாரை, விற்போன், முதலியவற்றால், கூடுதல், காற்று, தழுவுதல், கூதாளம், நாடகம், கூத்தாடுவோன், உயிர், அரிசி, அமைந்த, பாடல், செடிவகை, சொல், வெள்ளரிக்கொடி, பனிக்காற்று

