முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » காட்டிலேபோதல் முதல் - காடிச்சால்மூலை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - காட்டிலேபோதல் முதல் - காடிச்சால்மூலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காட்டுள்ளி | நரிவெங்காயம் . |
| காட்டெருமை | எருமையினம் ; எருக்கு ; திருகுகள்ளி ; சதுரக்கள்ளி ; கூவை . |
| காட்டெலுமிச்சை | காட்டுநாரத்தை ; காட்டுக்கொழுஞ்சி ; நாய்விளா ; மலைநாரத்தை . |
| காட்டேறி | கேடு விளைக்கும் ஒரு தேவதை . |
| காட்டை | திசை ; எல்லை ; 64 கணங்கொண்ட காலநுட்பம் ; நுனி . |
| காட்பு | வைரம் . |
| காடகம் | ஆடை . |
| காடபந்தம் | தீவட்டி . |
| காடமர்செல்வி | கொற்றவை , துர்க்கை . |
| காடர் | காடுவாழ் சாதியார் , ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார் . |
| காடவன் | பல்லவர்களின் சிறப்புப் பெயர் . |
| காடவிளக்கு | பெருவிளக்கு . |
| காடன் | மீன்வகை . |
| காடாக்கினி | பெருநெருப்பு , பெருந் தீ . |
| காடாந்தகாரம் | பேரிருள் . |
| காடாரம்பம் | நீர்ப்பாசனமில்லாத பகுதி . |
| காடாரம்பற்று | காட்டுப்புறம் . |
| காடாவிளக்கு | காண்க : காடவிளக்கு . |
| காடாற்று | பால்தெளிப்பு , சஞ்சயனம் . |
| காடாற்றுதல் | பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல் . |
| காடி | புளித்த கஞ்சி ; புளித்த கள் ; சோறு ; கஞ்சி ; புளித்த பழரசம் ; ஊறுகாய் ; ஒருவகை வண்டி ; ஒரு மருந்து ; கழுத்து ; நெய் ; அகழி ; கோட்டையடுப்பு ; மாட்டுக்கொட்டில் ; மரவேலையின் பொளிவாய் . |
| காடிக்காரம் | நெருப்புக்கல் . |
| காடிகம் | சீலை . |
| காடிச்சால் | காடி வைக்குஞ் சால் ; மரவேலையின் பொளிவாய் . |
| காடிச்சால்மூலை | வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வடகிழக்குத் திசை . |
| காட்டிலேபோதல் | வீணாய்க் கழிதல் . |
| காட்டீஞ்சு | ஈச்சமரம் . |
| காட்டீந்து | ஈச்சமரம் . |
| காட்டீருள்ளி | நரிவெங்காயம் . |
| காட்டு | காண்பித்தல் ; எடுத்துக்காட்டு ; ஒளி ; துணைக்கருவி ; உறைப்பு ; குப்பை . |
| காட்டுக்கட்டை | பலவித மரங்களின் விறகு . |
| காட்டுக்கருணை | ஒருவகைப் பூடு ; சேனைக் கிழங்குவகை . |
| காட்டுக்கல் | ஒருவகை முருட்டுக்கல் . |
| காட்டுக்காய்ச்சுரை | சுரைவகை ; புளிச்சை வகை , முட்புளிச்சை . |
| காட்டுக்கிராம்பு | நீர்க்கிராம்பு . |
| காட்டுக்கிரியை | ஈமச்சடங்கு . |
| காட்டுக்கீரை | காட்டில் கிடைக்கும் பலவகைக் கீரை . |
| காட்டுக்கொடி | கசப்புள்ள ஒருவகைக் கொடி ; நன்னாரிவகை . |
| காட்டுக்கொள் | கருங்காணம் ; காலியாந்துவரை . |
| காட்டுக்கோழி | சம்பங்கோழி ; கற்கவுதாரி . |
| காட்டுத்தம்பட்டன் | வாளவரைக் கொடிவகை . |
| காட்டுத்தனம் | முருட்டுத்தனம் . |
| காட்டுத் தீ | காட்டில் பற்றிய பெருந்தீ . |
| காட்டுதல் | காண்பித்தல் ; அறிவித்தல் ; மெய்ப்பித்தல் ; நினைப்பூட்டுதல் ; படையல் ; உண்டாக்குதல் ; அறிமுகஞ் செய்தல் ; வெளிப்படுத்துதல் . |
| காட்டுப்பச்சிலை | பலவகைச் செடிகொடிகளின் இலைகள் ; மரவகை . |
| காட்டுப்படை | காடுவாழ் இனத்தினின்று திரட்டப்பட்ட சேனை . |
| காட்டுப்பயிர் | தானே விளையும் பயிர் , புன்செய்ப் பயிர் . |
| காட்டுப்பன்றி | பன்றி இனம் . |
| காட்டுப்பாதை | காட்டிற் செல்லும் வழி ; நாட்டுப்புறத்து வழி . |
| காட்டுப்பிள்ளை | திக்கற்ற குழந்தை . |
| காட்டுப் பீ | குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம் . |
| காட்டுப்புத்தி | மூடவறிவு . |
| காட்டுப்பூவரசு | ஒருவகைப் பூவரசமரம் . |
| காட்டுப்பூனை | பூனையில் ஓர் இனம் . |
| காட்டுப்பெண்சாதி | வைப்பாட்டி . |
| காட்டுமயிலம் | காட்டுநொச்சி . |
| காட்டுமரம் | தாழ்ந்தவின மரக்கட்டை ; காட்டில் உள்ள மரம் . |
| காட்டுமல்லி | நீண்ட மரமல்லி . |
| காட்டுமழை | நாட்டில் வெள்ளம் பெருகும்படி மலைக்காட்டிற் பெய்யும் மழை . |
| காட்டுமனிதன் | நாகரிகமற்றவன் ; வாலில்லாக்குரங்கு . |
| காட்டுமா | சாரம் ; மரவகை ; புளிமா ; உதளை ; காட்டுவிலங்கு . |
| காட்டுமிராண்டி | விலங்காண்டி , நாகரிகமற்றவன் , முரடன் ; காட்டில் வாழ்வோன் . |
| காட்டுமிருகம் | வனவிலங்கு ; கானக்குதிரை . |
| காட்டுமிருகாண்டி | காண்க : காட்டுமிராண்டி . |
| காட்டுமுருங்கை | மாவிலங்கைமரம் ; ஆடாதோடை ; காட்டுமுருக்கு ; மரவகை . |
| காட்டுரோகம் | மாட்டுநோய்வகை . |
| காட்டுவாரி | காட்டாறு . |
| காட்டுவெள்வெங்காயம் | காண்க : காட்டுள்ளி . |
| காட்டுவெள்ளரி | பேய்க்கொம்மட்டி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 303 | 304 | 305 | 306 | 307 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காட்டிலேபோதல் முதல் - காடிச்சால்மூலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காட்டில், புளித்த, மரவகை, காடி, காண்க, காட்டுமிராண்டி, ஒருவகைப், காண்பித்தல், நாகரிகமற்றவன், குழந்தை, ஈச்சமரம், இனம், பயிர், மரவேலையின், காடுவாழ், திசை, நரிவெங்காயம், சாதியார், காடவிளக்கு, காட்டுள்ளி, ஒருவகை, கஞ்சி, பொளிவாய்

