முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » காசையாடை முதல் - காட்டிலுமிழி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - காசையாடை முதல் - காட்டிலுமிழி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
காட்டான் | நாகரிகமில்லாதவன் , அயலான் ; காட்டுப் பசு . |
காட்டி | பன்றி . |
காட்டிக்கொடுத்தல் | கற்றுக்கொடுத்தல் ; குற்றத்தை வெளிப்படுத்தல் ; தன் பக்கத்தானை எதிரிக்குக் காட்டிக்கொடுத்தல் . |
காட்டிமறைத்தல் | எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல் ; தடுத்து ஆட்கொள்ளுதல் . |
காட்டில் | காண்க : காட்டிலும் . |
காட்டிலம் | வாழை . |
காட்டிலமிர்து | காண்க : காட்டகத்தமிர்து . |
காட்டிலவு | கோங்கிலவுமரம் ; பேயிலவுமரம் . |
காட்டிலும் | உடன் ; உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் . |
காட்டிலுமிழி | நாகரவண்டு . |
காசையாடை | காவித்துணி . |
காஞ்சனம் | பொன் ; புன்கமரம் . |
காஞ்சனி | மஞ்சள் ; பொன்னிறம் ; கோரோசனை ; காட்டாத்தி . |
காஞ்சா | கஞ்சாச்செடி . |
காஞ்சி | காஞ்சிபுரம் ; ஆற்றுப் பூவரசு ; காஞ்சிப்பூமாலை ; காஞ்சித்திணை ; நிலையின்மை ; செவ்வழிப்பண்வகை ; நொய்யலாறு ; நாதாங்கி ; மகளிர் இடையணி ; மயிர் ; பெருமை ; அறிவு . |
காஞ்சிகா | காண்க : காஞ்சிரம் . |
காஞ்சிகை | காண்க : காஞ்சிரம் . |
காஞ்சித்திணை | வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை ; வீரன் காஞ்சி மலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றி நிற்றலைக் குறிக்கும் புறத்திணை . |
காஞ்சியம் | வெண்கலம் , உபதாதுக்களுள் ஒன்று . |
காஞ்சியெதிர்வு | எதிரூன்றும் படையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக் கூறும் புறத்துறை . |
காஞ்சிரங்காய் | எட்டிக்கொட்டை . |
காஞ்சிரம் | எட்டிமரம் . |
காஞ்சிரை | எட்டிமரம் . |
காஞ்சுகம் | சட்டை . |
காஞ்சுகன் | சட்டை போட்ட மெய்காப்பாளன் . |
காஞ்சுகி | காஞ்சுகன் ; சட்டை . |
காஞ்சொறி | பூண்டுவகை . |
காஞ்சோன்றி | பூண்டுவகை . |
காட்சி | பார்வை ; காணல் ; தோற்றம் ; தரிசனம் ; கண்காட்சி ; வியத்தகு காட்சி ; காட்சியளவை ; அறிவு ; தலைமகளைத் தலைமகன் முதலில் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறை ; வீரர் வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை ; நடுகல்லை வீரர் தரிசித்தலைக் கூறும் புறத்துறை ; அழகு ; தன்மை ; நூல் . |
காட்சிப்பிரமாணம் | நேராகக் காண்டல் . |
காட்சிப்பொருள் | காணப்படும் பொருள் ; கையுறை . |
காட்சிமறைத்தல் | எண் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் செயல் . |
காட்சியணி | ஓரணி ; உவமான உவமேயங்களின் தன்மையை ஒன்றற்கொன்று ஏற்றிக் கூறுதல் . |
காட்சியர் | அறிஞர் . |
காட்சியவர் | அறிஞர் . |
காட்சியளவை | காண்டல் அளவை . |
காட்சியறிவு | பொருளை நேரிற்கண்டு அறியும் அறிவு . |
காட்சியோகு | ஞானயோகம் . |
காட்சிவரி | தன் வருத்தத்தைப் பலரும் காணும் படி நடிக்கும் கூத்து ; காட்சிகளின்பொருட்டு ஏற்பட்ட வரி . |
காட்டகத்தமிர்து | காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு , உலண்டு , தேன் , மயிற்பீலி , நாவி என்பன . |
காட்டகத்தி | வீழிச்செடி . |
காட்டணம் | பெருங்குமிழ் . |
காட்டத்தி | பேயத்திமரம் , மரவகை . |
காட்டப்பெறுதல் | உரிமைகொண்டாடுதல் . |
காட்டம் | விறகு ; சிறுகோல் ; வெண்கலம் ; சினம் ; உறைப்பு ; மிகுதி . |
காட்டரண் | நால்வகை அரண்களுள் காடாகிய அரண் . |
காட்டலரி | அலரிவகை ; நச்சுப்பாலுள்ள மரம் ; பாலைவகை . |
காட்டவீணை | வீணை . |
காட்டவுரி | அவுரிவகை ; புனல்முருங்கை . |
காட்டழல் | காட்டுத் தீ . |
காட்டா | காட்டுப் பசு . |
காட்டாக்கி | கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு . |
காட்டாடு | விலங்குவகை . |
காட்டாத்தி | திருவாத்தி . |
காட்டாமணக்கு | ஆமணக்குவகை , பேயாமணக்கு . |
காட்டாள் | நாகரிகமில்லாதவன் , முரடன் . |
காட்டாளத்தி | இசையின் ஆலாபனவகை . |
காட்டாறு | வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு ; காட்டிலோடுஞ் சிற்றாறு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 302 | 303 | 304 | 305 | 306 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காசையாடை முதல் - காட்டிலுமிழி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காஞ்சிரம், அறிவு, புறத்துறை, சட்டை, கூறும், காஞ்சுகன், பூண்டுவகை, எட்டிமரம், காட்சியளவை, அறிஞர், சிற்றாறு, காண்டல், காணும், வீரர், நடுகல்லை, காட்சி, வெண்கலம், காட்டிலும், காட்டகத்தமிர்து, காட்டில், காட்டிக்கொடுத்தல், காட்டுப், பொருள், குறிக்கும், புறத்திணை, நாகரிகமில்லாதவன், காஞ்சித்திணை, காஞ்சி, காட்டாத்தி, தடுக்கும்