தமிழ் - தமிழ் அகரமுதலி - ஔத்திரி முதல் - ககம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கக்குவான் | ஒருவகை இருமல் நோய் . |
| ககணி | வானநூலறிந்தோன் . |
| ககபதி | பறவைகளின் தலைவனான கருடன் . |
| ககம் | அம்பு ; பறவை ; வளி ; தெய்வம் ; பாணம் ; வெட்டுக்கிளி ; மணித்தக்காளி ; சரகாண்ட நஞ்சு . |
| கக்குரீதி | காண்க : கக்கசம் . |
| ஔதா | அம்பாரி , யானைமேற் பீடம் . |
| ஔதாரியம் | பெருந்தன்மை , உதாரத்துவம் , உதாரகுணம் . |
| ஔபசாரிகம் | உபசாரமான வார்த்தை ; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது . |
| ஔபாசனம் | வேள்வித் தீயோம்புகை ; இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு . |
| ஔபாசனை | வைதிகச் சடங்கு நடத்தல் . |
| ஔரசபுத்திரன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
| ஔரசன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
| ஔரதன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
| ஔலியா | இசுலாமிய அடியார்கள் . |
| ஔவித்தல் | பொறாமைப்படுதல் ; அழுக்காறு கொள்ளல் . |
| ஔவியம் | அழுக்காறு ; பொறாமை ; தேவர்களுக்குச் செய்யும் சடங்கு . |
| ஔவுதல் | வாயால் பற்றுதல் ; கடித்துப்பிடித்தல் ; அழுந்தியெடுத்தல் . |
| ஔவை | தவப்பெண் , ஆரியாங்கனை ; தாய் ; ஔவையார் . |
| ஔவைநோன்பு | செவ்வாய்க் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு . |
| ஃ | ஆய்தவெழுத்து , முப்பாற்புள்ளி எழுத்து ; குற்றெழுத்தின் முன்னர் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறனுள் ஒன்றன் மேலதாய் இடைவரும் இயல்பினது . |
| க | முதலாம் உயிர்மெய்யெழுத்து (க்+அ) ; ஒன்று என்னும் எண்ணின் குறி ; காந்தாரம் ஆகிய கைக்கிளை இசையின் எழுத்து ; வியங்கோள் விகுதியுள் ஒன்று ; ஆன்மா ; உடல் ; காற்று ; அக்கினி ; பிரமன் . |
| கஃகான் | 'க' என்னும் எழுத்து . |
| கஃசு | காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு . |
| கஃறெனல் | கறுப்பாதல் ; கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு . |
| கக்கக்கெனல் | ஒலிக்குறிப்பு ; சிரித்தற் குறிப்பு . |
| கக்கக்கொடுத்தல் | உணவை மிதமிஞ்சி ஊட்டுதல் . |
| கக்கசம் | கடினம் ; முயற்சி . |
| கக்கட்டமிடுதல் | உரத்த சத்தமாய்ச் சிரித்தல் . |
| கக்கடி | துத்திச்செடி . |
| கக்கதண்டம் | அக்குளில் இடுக்கி நடக்கும் கழி . |
| கக்கப்பாளம் | துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை . |
| கக்கப்பிக்கவெனல் | மனக்குழப்பத்தால் உளறுதற் குறிப்பு . |
| கக்கப்பை | காண்க : கக்கப்பாளம் . |
| கக்கப்பொட்டணம் | கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை . |
| கக்கம் | அக்குள் ; கைக்குழியின் கீழிடம் ; எண்ணெய்க் கடுகு ; அயனக் கணக்குவகை . |
| கக்கரி | ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் . |
| கக்கரிகம் | ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் . |
| கக்கல் | கக்குதல் ; வெளிப்படுத்துதல் ; கக்கப்பட்டது ; கதிரீனுதல் . |
| கக்கல்கரைசல் | கலங்கல் நீர் ; கரைந்த மலம் . |
| கக்கலாத்து | கரப்பான் பூச்சி . |
| கக்கலும்விக்கலுமாய் | கதிர் ஈன்றதும் ஈனாததுமாய் . |
| கக்கவைத்தல் | நெருக்கி வாங்குதல் . |
| கக்கார் | தேமா , இனிப்பு மாங்காய் . |
| கக்கிக்கொடுத்தல் | தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல் . |
| கக்கிருமல் | காண்க : கக்குவான் . |
| கக்கு | காண்க : கக்குவான் . |
| கக்கு | (வி) நஞ்சு கால் ; ஆணி முதலியன எதிரெழு ; நீர் கக்கு ; கதிர் ஈனு ; மிக இருமு . |
| கக்குசு | மலசலம் கழிக்கும் இடம் . |
| கக்குதல் | வாயாலெடுத்தல் ; வெளிப்படுத்தல் ; ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் ; கதிர் ஈனுதல் ; சாரம் இறங்குதல் ; கசிதல் ; பெருக்கெடுத்தல் . |
| ஔத்திரி | சிவதீட்சை ஏழனுள் ஒன்று . |
| ஔத்திரிதீட்சை | சிவதீட்சை ஏழனுள் ஒன்று . |
| ஔதசியம் | பால் . |
| ஔதநிகன் | சமையற்காரன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 234 | 235 | 236 | 237 | 238 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஔத்திரி முதல் - ககம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெற்ற, காண்க, ஒன்று, உரிமை, பிள்ளை, கக்கு, மகன், கக்குவான், குறிப்பு, தான், கதிர், எழுத்து, சடங்கு, குலமொத்த, கன்னியைத், புதல்வன், தீவேட்டுப், நீர், காய், கக்கசம், கக்குதல், சிவதீட்சை, ஏழனுள், வளைந்த, முதலியன, நஞ்சு, மூட்டை, என்னும், செய்யும், அழுக்காறு, ஒன்றன், கக்கப்பாளம், முள்வெள்ளரி, கொடி, கக்கத்தில், வரிகளோடுகூடிய

