முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஒற்றுமைகோடல் முதல் - ஒன்றியார் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒற்றுமைகோடல் முதல் - ஒன்றியார் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒற்றையாள் | தனியாள் , சுற்றத்தார் எவருமில்லாதவன் . |
| ஒற்றையிதழ்ப் பூ | ஓரிதழ் உள்ள மலர் . |
| ஒற்றையிரட்டை பிடிக்கை | ஒருவகை விளையாட்டு . |
| ஒறுத்தல் | தண்டித்தல் ; கடிதல் ; வெறுத்தல் ; இகழ்தல் ; அழித்தல் ; துன்புறுத்தல் ; வருத்துதல் ; ஒடுக்குதல் ; நீக்கல் ; குறைத்தல் ; அலைத்தல் ; நோய் செய்தல் ; உலோபம் பண்ணுதல் . |
| ஒறுப்பு | தண்டிப்பு , தண்டனை ; வெறுப்பு ; கடிந்து பேசுகை ; உடல் வருந்துகை ; குறைவு ; பொருளின் அருமை ; கிராக்கி . |
| ஒறுவாய் | கதுவாய் , சிதைவடைந்த வாய் ; கொறுவாய் ; மூளிவாய் ; ஒடிந்த விளிம்பு ; வடு ; சிதைவு . |
| ஒறுவாய்ப்பல் | சிதைவடைந்த பல்வரிசை . |
| ஒறுவாய்ப்பானை | விளிம்பு சிதைந்த பானை . |
| ஒறுவாயன் | உதடு சிதைந்த வாயையுடையவன் . |
| ஒறுவினை | நீங்காத் துன்பம் , தீரா வருத்தம் . |
| ஒறுவு | வருத்தம் , துன்பம் . |
| ஒறுவுகலம் | காண்க : ஒறுவாய்ப்பானை . |
| ஒன் | ஒரு சாரியை . |
| ஒன்பதின்மர் | ஒன்பது பேர் . |
| ஒன்பது | ஓரெண் , பத்தில் ஒன்று குறைந்த எண் . |
| ஒன்பதொத்து | ஒருவகைத் தாளம் . |
| ஒன்பான் | ஒன்பது . |
| ஒன்ற | ஓர் உவமைச்சொல் . |
| ஒன்றடிமன்றடி | குழப்பம் . |
| ஒன்றரைக்கண்ணன் | ஒரு பக்கஞ் சரிந்த பார்வையாளன் . |
| ஒன்றல் | ஒன்றுதல் ; பொருந்துதல் . |
| ஒன்றலர் | சேராதவர் , பகைவர் . |
| ஒன்றறவாடம் | ஒன்றுவிட்டு ஒருநாள் . |
| ஒன்றறிசொல் | ஒன்றன்பாற்சொல் . |
| ஒன்றறியாதவன் | ஏதும் அறியாதவன் . |
| ஒன்றன்கூட்டம் | ஒரே பொருளின் கூட்டம் . |
| ஒன்றன்பால் | அஃறிணையொருமைப்பால் . |
| ஒன்றாக | ஒரு பொருளாக ; நிச்சயமாக ; ஒருமிக்க . |
| ஒன்றாதல் | ஒற்றுமைப்படுதல் , ஐக்கியப்படுதல் ; முதலாதல் ; இணையின்றாதல் . |
| ஒன்றாதவஞ்சித்தளை | நிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை , கனிச்சீர் முன் நேரசை வரும் தளை . |
| ஒன்றாமை | சேராமை ; பொருந்தாமை ; பகைமை . |
| ஒன்றாய் | ஒரசேர , ஒருமிக்க . |
| ஒன்றார் | சேரார் , பொருந்தார் , பகைவர் . |
| ஒன்றாவொன்றும் | யாதொன்றினாலும் . |
| ஒன்றி | ஒற்றை ; தனிமை ; தனித்த ஆள் ; தனித்தது ; பிரமசாரி . |
| ஒன்றிக்காரன் | குடும்பமில்லாதவன் ; மனைவி மக்களற்றவன் , தனியாள் . |
| ஒன்றித்தல் | பொருந்துதல் ; ஒருமைப்படுதல் . |
| ஒன்றிப்பு | ஒருமிப்பு . |
| ஒன்றியவஞ்சித்தளை | நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை , கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை . |
| ஒன்றியார் | உள்ளாயினார் , தன்னைச் சேர்ந்தவர் . |
| ஒற்றுமைகோடல் | பிறரோடு ஒன்றித்து வாழ்தல் . வேளாண்மாந்தர் ; இயல்புகளுள் ஒன்று . |
| ஒற்றுமைநயம் | ஒற்றுமைத்தன்மை ; ஒருமித்த தன்மை ; காரண காரியங்கள் ஒன்றாயிருக்கை . |
| ஒற்றுவன் | ஒற்றன் ; தூதுவன் . |
| ஒற்றுவித்தல் | ஒற்றுமூலமாய் நிகழ்ந்தனவற்றை அறிதல் . |
| ஒற்றுறுப்பு | யாழின் உறுப்புவகை ; ஒற்றாகிய உறுப்பு . |
| ஒற்றெழுத்து | மெய்யெழுத்து . |
| ஒற்றை | ஒன்று ; ஒற்றைப்பட்ட எண் ; தனிமை ; தன்னந்தனி ; தனியேடு ; ஒப்பின்மை ; ஒருதுளை வாத்தியம் . |
| ஒற்றைக்கண்ணன் | ஒரு கண் தெரிந்தவன் ; சுக்கிரன் ; குபேரன் . |
| ஒற்றைக்காலினிற்கை | விடாது முயல்கை ; |
| ஒற்றைக்குச்சி | சிலம்ப வித்தை ; |
| ஒற்றைக்கை | ஒரு கையால் காட்டும் அபிநயம் . |
| ஒற்றைக்கொம்பன் | விநாயகன் ; ஒற்றைக் கொம்புள்ள யானை . |
| ஒற்றைச்சேவகன் | தனி வீரன் . |
| ஒற்றைத்தலைவலி | ஒருபக்கத் தலைவதி , ஒற்றைத் தலைநோய் . |
| ஒற்றைத்தாலி | தாலி மாத்திரமுள்ள கழுத்தணி . |
| ஒற்றைநாடி | ஒல்லியான உடம்பு ; மாட்டுக் குற்றவகை . |
| ஒற்றைநின்றாள் | கைம்பெண் . |
| ஒற்றைப்படை | ஒற்றறையான எண் . |
| ஒற்றையடிப்பாதை | நடந்த கால்தடம் பட்டு அமைந்த பாதை . |
| ஒற்றையலகுசாகுபடி | ஒற்றையாக நாற்றுகளை நட்டுப் பயிர்செய்கை . |
| ஒற்றையாழித்தேர் | ஒற்றைச் சக்கரமுடைய சூரியனின் தேர் . |
| ஒற்றையாழித்தேரான் | சூரியன் |
| ஒற்றையாழித்தேரோன் | சூரியன் |
| ஒற்றையாழியன் | சூரியன் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 227 | 228 | 229 | 230 | 231 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றுமைகோடல் முதல் - ஒன்றியார் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வரும், முன், சூரியன், ஒன்பது, ஒன்று, நேரசை, உரிச்சீரின், கனிச்சீர், நிரையசை, தனிமை, ஒற்றை, நிரையீற்று, பகைவர், ஒறுவாய்ப்பானை, விளிம்பு, சிதைவடைந்த, பொருளின், சிதைந்த, துன்பம், தனியாள், பொருந்துதல், வருத்தம், ஒருமிக்க

