முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஒழிதல் முதல் - ஒளிச்சித்திரப்படம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒழிதல் முதல் - ஒளிச்சித்திரப்படம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
ஒழுகுநீட்சி | நேராக நீண்டிருக்கை . |
ஒழுகுமாடம் | உடம்பு . |
ஒழுகுவண்ணம் | ஒழுகியலோசையால் செல்லும் சந்தம் . |
ஒழுகை | வண்டி ; சகடவொழுங்கு |
ஒழுங்கரம் | ஒருவகை அரம் . |
ஒழுங்கல் | நிரல்படல் , வரிசையாயிருத்தல் . |
ஒழுங்கீனம் | சீர்கேடு . |
ஒழுங்கு | வரிசை , நிரை ; முறை ; நன்னடை ; விதி ; கட்டளை ; திரள் ; அளவு ; முதலியன காட்டும் ; நிலவிவரக் கணக்கு . |
ஒழுங்குகட்டுதல் | விதி ஏற்படுத்துதல் ; |
ஒழுங்குபடுத்துதல் | நேராக்குதல் , முறைப்படுத்துதல் . |
ஒழுங்கை | ஒடுங்கியவழி , இடுக்கு வழி ; கட்டட முகப்பு . |
ஒள்ளி | செம்பொன் ; சுக்கிரன் . |
ஒள்ளிமை | அறிவு விளக்கம் . |
ஒள்ளியன் | அறிவுடையோன் ; புகழுடையவன் ; சிறந்தவன் ; நல்லவன் . |
ஒள்ளியோன் | ஒளி செய்வோன் ; சுக்கிரன் ; அறிவுடையோன் . |
ஒள்ளொளி | மிகுந்த ஒளி . |
ஒளி | சோதி ; விளக்கம் ; சூரியன் ; சந்திரன் ; விண்மீன் ; மின்னல் ; வெயில் ; கண்மணி ; பார்வை ; அறிவு ; மதிப்பு ; தோற்றம் ; அழகு ; நன்மதிப்பு ; கடவுள் ; புகழ் . |
ஒளிக்கடல் | பற்கள் . |
ஒளிச்சித்திரப்படம் | ஒளிப்படம் , புகைப்படம் , நிழற்படம் . |
ஒழிதல் | அழிதல் ; சாதல் ; நீங்கல் ; தவிர்தல் ; விடுதல் ; வெறுமையாதல் ; எஞ்சுதல் ; தங்குதல் ; ஓய்தல் . |
ஒழிந்தார் | ஏனையோர் , தவிர்ந்தோர் ; மற்றவர் . |
ஒழிப்பணி | பலவற்றைச் சுருக்கிக் காட்டும் அணிவகை . |
ஒழிப்பு | விலக்கு , தவிர்ப்பு . |
ஒழிபியல் | நூலின்கண் முன் இயல்களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறும் இயல் , பொதுவியல் . |
ஒழிபு | மிச்சம் , எச்சம் . |
ஒழிபொருள் | எச்சில் |
ஒழிய | தவிர , நீங்க ; கெட . |
ஒழியாவிளக்கம் | விடிவிளக்கு . |
ஒழியாவிளக்கு | விடிவிளக்கு . |
ஒழியிசை | ஒழிந்த பொருள்தரும் சொற்களைத்தருவது . |
ஒழிவு | மிச்சம் ; நீக்கம் ; முடிவு ; பற்றின்மை ; மறைவு ; குறைவு ; ஒழிகை . |
ஒழுக்கம் | நடை , முறைமை ; நன்னடத்தை , ஆசாரம் ; சீலம் ; உலகம் ஓம்பிய நெறி ; உயர்ச்சி ; தன்மை ; குலம் . |
ஒழுக்கல் | ஒழுக்குதல் ; வடிதல் ; வார்த்தல் ; ஊற்றுதல் ; வரிசையாக வைத்தல் ; எழுச்சி . |
ஒழுக்கவணக்கம் | நல்லொழுக்கம் . |
ஒழுக்கவி | கோயிலில் நாள்தோறும் படைக்கும் சமைத்த உணவு . |
ஒழுக்கு | ஒழுகுகை ; நீர் முதலியன ஓடுகை , நீரோட்டம் ; வரிசை ; நடைமுறை ; நன்னடை , ஆசாரம் . |
ஒழுக்குதல் | ஒழுகச் செய்தல் ; நடப்பித்தல் , வார்த்தல் ; நீள இழுத்தல் ; துளித்தல் . |
ஒழுக்குநீர்ப்பாட்டம் | ஆற்றுக்கால் பாசன வரி . |
ஒழுக்குப்பீளை | கண்ணிலிருந்து பீளைதள்ளும் நோய் . |
ஒழுக்குமாற்றுதல் | நீர் ஒழுகும் ஓட்டையை அடைத்தல் . |
ஒழுக்குவிழுதல் | ஓட்டைவழி நீர் சொட்டுதல் ; நீர் ஒழுகும்படியான பொள்ளல் ஏற்படல் . |
ஒழுக்கெறும்பு | ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து செல்லும் எறும்பு . |
ஒழுக்கை | முடுக்குத்தெரு ; சந்து . |
ஒழுக | மெதுவாக ; சிறிது சிறிதாக ; சொரிய ; வடிய ; ஓட . |
ஒழுகல் | ஒழுகுதல் ; நடத்தல் ; பாய்தல் ; உயர்ச்சி ; நீளம் ; முறையாக நடத்தல் ; வளர்தல் ; இளகுதல் . |
ஒழுகலாறு | ஒழுக்கநெறி , நடத்தை , நன்னெறி . |
ஒழுகிசை | மெல்லிசை , வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம் . |
ஒழுகிசைச்செப்பல் | இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை இரண்டும் விரவிவரும் வெண்பாவின் ஓசை . |
ஒழுகிசைத்துள்ளல் | வெண்டளையும் , கலித்தளையும் விரவிவரும் கலிப்பாவின் ஓசை . |
ஒழுகிசையகவல் | நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவரும் அகவலோசை . |
ஒழுகிப்போதல் | நீர்ப்பொருள் சிந்துகை ; மனம் கரைந்து உருகுகை . |
ஒழுகு | உயரம் ; ஒழுங்கு ; நீளம் ; நிலவரலாறு கூறும் கணக்கு ; கோயில் நடைமுறை வரலாறுகளை விளக்கும் நூல் ; வண்டி ; வரிசை . |
ஒழுகுசங்கிலி | தொடர்சங்கிலி . |
ஒழுகுதல் | நீர் பாய்தல் ; நீர்ப்பொருள் சொட்டுதல் ; ஓடுதல் ; பரத்தல் ; ஒழுங்குபடுதல் ; நடத்தல் ; நீளுதல் ; வளர்தல் ; போதல் ; பெருகியோடுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 225 | 226 | 227 | 228 | 229 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒழிதல் முதல் - ஒளிச்சித்திரப்படம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீர், வரிசை, விரவிவரும், நடத்தல், நடைமுறை, ஒழுக்குதல், உயர்ச்சி, சொட்டுதல், வார்த்தல், பாய்தல், வெண்டளை, நீர்ப்பொருள், வளர்தல், நீளம், ஆசாரம், ஒழுகுதல், விடிவிளக்கு, முதலியன, காட்டும், விதி, நன்னடை, வண்டி, ஒழுங்கு, கணக்கு, சுக்கிரன், கூறும், மிச்சம், அறிவுடையோன், விளக்கம், அறிவு, செல்லும்