தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒன்றியாள் முதல் - ஓங்காளம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒன்றுதல் | பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல் ; மனங்கலத்தல் ; சம்மதித்தல் ; உவமையாதல் ; ஒருமுகப்படுதல் . |
| ஒன்றுநன் | நண்பன் ; |
| ஒன்றுபடுத்தல் | ஒப்புரவாக்கல் ; ஒருமைப்படுத்தல் . |
| ஒன்றுபடுதல் | கூடுதல் ; பொருந்துதல் ; ஒருதன்மையாதல் ; இணக்கமாதல் . |
| ஒன்றுபாதி | பாதி ; ஏறக்குறையப் பாதி ; நடுச்சாமம் . |
| ஒன்றும் | சிறிதும் . |
| ஒன்றுமற்றவன் | பயனில்லாதவன் ; வறியவன் . |
| ஒன்றுமொழிதல் | வஞ்சினங்கூறுதல் ; சூளுரைத்தல் . |
| ஒன்றுவிட்ட | உறவு முறையில் ஒரு தலைமுறைவிட்ட . |
| ஒன்றொழிபொதுச்சொல் | இருதிணை ஆண் பெண்ணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல் . |
| ஒன்றோ | எண்ணிடைச்சொல் ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; வியப்பிரக்கச்சொல் . |
| ஒன்னப்பூ | மாதர் காதணியுள் ஒன்று . |
| ஒன்னலன் | பகைவன் . |
| ஒன்னாதோர் | பகைவர் . |
| ஒன்னார் | பகைவர் . |
| ஒன்னுதல் | பொருந்துதல் ; பொறுத்தல் . |
| ஓ | பதினோராம் உயிரெழுத்து ; வினாவெழுத்து ; விளரி என்னும் இசையின் எழுத்து ; நீக்கம் ; ஒழிவு ; சென்று தங்குகை ; மதகுநீர் தாங்கும் பலகை ; உயர்வு இழிவு சிறப்புக் குறிப்பு ; மகிழ்ச்சிக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; தெரிதல் குறிப்பு ; நினைவுக் குறிப்பு ; கொன்றை ; பிரமன் ; ஒழியிசை , வினா , சிறப்பு , எதிர்மறை , தெரிநிலை ; பிரிநிலை , ஐயம் , அசைநிலை இவற்றைக் காட்டும் ஓர் இடைச்சொல் . |
| ஓஒ | வியப்புக் குறிப்பு . |
| ஓக்கம் | உயர்ச்சி ; எழுச்சி ; பருமை ; பெருமை ; பெருக்கம் . |
| ஓக்காளம் | ஓங்காளம் , வாயாலெடுத்தல் , கக்குதல் . |
| ஓக்காளித்தல் | வாந்திக் குணமுண்டாதல் ; வாந்தி செய்தல் . |
| ஓக்காளிப்பு | வாந்திக் குணம் . |
| ஓக்கியம் | ஏற்றது , தகுந்தது . |
| ஓக்குதல் | உயர்த்துதல் , எழும்பச்செய்தல் ; அறுதியிடுதல் ; தருதல் ; எறிதல் ; ஆக்குதல் . |
| ஓகணம் | பேன் ; மூட்டைப்பூச்சி . |
| ஓகணி | பேன் ; மூட்டைப்பூச்சி . |
| ஓகம் | பெருங்கூட்டம் ; பெருக்கு ; வெள்ளம் ; புகலிடம் , அடைக்கலம் ; ஒரு குருவி . |
| ஓகாரம் | ' ஓ ' என்னும் உயிரெழுத்து ; மயில் . |
| ஓகாரவுரு | பிரணவ வடிவம் , கடவுள் . |
| ஓகுலம் | அப்பம் . |
| ஓகை | உவகை , மகிழ்ச்சி ; இனிய மொழி ; ஆரவாரம் ; ஆறு ; நீர்ப்பெருக்கு . |
| ஓகோ | வியப்பு முதலிய மனநிலை காட்டும் சொல் . |
| ஓகோதனி | ஓகணம் , மூட்டுப்பூச்சி . |
| ஓங்கல் | உயர்ச்சி ; மேடு ; மலை ; மலையுச்சி ; எழுச்சி ; மூங்கில் ; யானை ; மரக்கலம் ; வலியோன் ; தலைவன் ; அரசன் ; வழித்தோன்றல் ; சாதகப்புள் ; ஒருவகை நீர்ப்பறவை . |
| ஓங்கார உப்பு | கல்லுப்பு . |
| ஓங்காரம் | பிரணவம் , ஓம் . |
| ஓங்காரவுரு | கடவுள் ; கௌரிபாடாணம் . |
| ஓங்காரன் | ஓங்காரவுருவன் , கடவுள் . |
| ஓங்காரி | பிரணவப் பொருளானவள் , சக்தி . |
| ஓங்காரித்தல் | ஓங்காரத்தை உச்சரித்தல் ; உறுக்குதல் ; வாந்தி செய்தல் . |
| ஓங்காளம் | காண்க : ஓக்காளம் . |
| ஒன்றியாள் | ஒற்றையாள் ; மனைவியில்லாதவன் . |
| ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் | ஒரு பொருளைக் கூறி முடிக்கையில் அதற்கு இனமான பொருளையும் அங்குத்தானே கூறுகை . |
| ஒன்றினொன்றபாவம் | ஒன்றில் ஒன்று இன்மை . |
| ஒன்று | ஒன்று என்னும் எண் ; மதிப்பிற்குரியபொருள் ; வீடுபேறு ; ஒற்றுமை ; வாய்மை ; அறம் ; அஃறிணையொருமை . |
| ஒன்றுக்கிருத்தல் | சிறுநீர் கழித்தல் . |
| ஒன்றுக்குப்போதல் | சிறுநீர் கழித்தல் . |
| ஒன்றுக்குமற்றவன் | பயனற்றவன் . |
| ஒன்றுக்கொன்று | ஒன்றறோடொன்று ; ஒன்றுக்கு மாறாய் ஒன்று ; ஏட்டிக்குப் போட்டி . |
| ஒன்றுகட்டுதல் | சரிப்படுத்தல் . |
| ஒன்றுகுடி | ஒதுக்குக்குடி , ஒட்டுக்குடி . |
| ஒன்றுகூட்டு | ஒரு சேர்க்கை . |
| ஒன்றுகூடுதல் | ஒன்றாய்ச் சேர்தல் ; ஒற்றுமைப்படுதல் . |
| ஒன்றுகை | ஒன்றுதல் , இசைகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 228 | 229 | 230 | 231 | 232 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்றியாள் முதல் - ஓங்காளம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறிப்பு, ஒன்று, என்னும், பொருந்துதல், கடவுள், ஓகணம், செய்தல், வாந்திக், வாந்தி, பேன், மூட்டைப்பூச்சி, கழித்தல், சிறுநீர், முடித்தல், ஓங்காளம், உயர்ச்சி, பகைவர், இடைச்சொல், பாதி, ஒன்றுதல், உயிரெழுத்து, வியப்புக், எழுச்சி, சொல், காட்டும், ஓக்காளம்

