தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒருபடி முதல் - ஒருவு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
ஒருபோக்காய்ப்போதல் | திரும்பிவாராது போதல் . |
ஒருபோக்கு | ஒருவிதம் , ஒருமாதிரி ; மாறானநடை . |
ஒருபோகு | ஒருபடித்தான நிலம் ; கொச்சகக் கலிப்பாவினுள் ஒன்று ; ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்று . |
ஒருபோது | ஒருவேளை , ஒருபொழுது ; ஒரு சமயம் ; ஒருமுறை உண்டு நோன்பிருக்குங்காலம் . |
ஒருமட்டம் | ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி . |
ஒருமட்டு | ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி . |
ஒருமடைசெய்தல் | ஒருமுகமாக்குதல் . |
ஒருமனப்படுதல் | ஐம்புலனடக்கல் , மனத்தை ஒரு வழிப்படுத்துதல் , ஓர் எண்ணமாதல் , மனவடக்கம் . |
ஒருமனப்பாடு | மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் . |
ஒருமா | இருபதில் ஒரு பங்கு . |
ஒருமாதிரி | ஒருவிதம் ; தனிப் போக்கு . |
ஒருமாரை | ஒரு மா அரை , ஒரு மாவும் அரை மாவும் சேர்ந்த இலக்கம் |
ஒருமிக்க | ஒருசேர , ஏகமாய் . |
ஒருமித்தல் | ஒன்றுசேர்தல் ; உடன்படல் , ஒருமைப்படல் . |
ஒருமிப்பு | ஒன்றிப்பு , ஒற்றுமைப்படுகை இசைவு ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை . |
ஒருமுகம் | நேர்வழி ; ஒற்றுமை ; ஒருபுறம் ; ஒரு கூட்டம் ; ஒரு கட்சி . |
ஒருமுகமாய்ப்பேசுதல் | ஒரு மிக்கப் பேசுதல் ; எல்லாரும் ஒரேபடித்தாய்ப் பேசுதல் . |
ஒருமுகவெழினி | ஒருவகைத் திரை . |
ஒருமுற்றிரட்டை | ஓரடி முற்றெதுகையாய் வருவது . |
ஒருமை | ஒரே தன்மை ; ஒற்றுமை ; தனிமை ; ஒப்பற்ற தன்மை ; மனமொருமிக்கை ; ஒருமையெண் ; மெய்ம்மை ; ஒரு பிறப்பு ; இறையுணர்வு ; வீடுபேறு . |
ஒருமைப்படுதல் | ஒற்றுமைப்படல் ; மனம் ஒரு முகப்படுதல் ; உடன்படல் . |
ஒருமைப்பாடு | ஒற்றுமைப்படுகை ; மனத்தை ஒரு வழிப்படுத்துதல் ; ஒற்றுமை உணர்வு ; ஒன்றிப்பு . |
ஒருமை பன்மை மயக்கம் | தொடருள் ஒருமை பன்மைகள் ஒன்றற்கொன்று மாறி வழங்குகை . |
ஒருமை மகளிர் | பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர் ; கற்புடைய மாதர் . |
ஒருமொழி | ஆணை ; பல சொற்களாய்ப் பிரிக்கமுடியாத சொல் ; ஒரு பொருளைத் தரும் ஒரு சொல் . |
ஒருவண்ணம் | ஒருவாறு . |
ஒருவந்தம் | உறுதி ; ஒருதலை ; நிலைபேறு ; சம்பந்தம் ; ஒற்றுமை ; தனியிடம் . |
ஒருவயிற்றோர் | உடன்பிறந்தார் . |
ஒருவர் | ஓராள் ; ஒருவன் ; அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர் , மரியாதைப் பன்மை . |
ஒருவர்க்கொருவர் | இருவரும் ஒத்த தன்மையராயிருக்கை , பரஸ்பரம் . |
ஒருவழித்தணத்தல் | அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை . |
ஒருவழிப்படுதல் | ஒருமுகப்படுதல் ; நேர்படுதல் ; ஒற்றுமைப்படுதல் ; |
ஒருவழியுறுப்பு | ஏகதேசம் |
ஒருவன் | ஓர் ஆண்மகன் ; ஒப்பற்றவன் ; கடவுள் . |
ஒருவருக்காக | ஒரேபடியாக , ஒரேமாதிரி ; ஒரேமுறையில் ; ஒருசேர |
ஒருவாக்கு | ஒருமுகமாகச் சொல்லும் சொல் ; உறுதிமொழி . |
ஒருவாமை | பிறழாமை , நீங்காமை . |
ஒருவாய்க்கோதை | காண்க : ஒருகட்பறை . |
ஒருவாற்றான் | ஒருவாறு , ஒருவிதமாக , ஓரளவாக ; ஒருசேர . |
ஒருவியாழவட்டம் | குரு சூரியனைச் சுற்றிவருகிற காலம் , பன்னிரண்டு ஆண்டு . |
ஒருவு | ஆடு ; நீங்குகை . |
ஒருபடி | ஒருவகை , ஒருவாறு ,ஒருவிதம் . |
ஒருபடித்தாய் | ஒரேவிதமாய் ; பிரயாசமாய் ; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய் . |
ஒருபது | பத்து . |
ஒருபாட்டம் | ஒருதடவை ; ஒருபாறல் மழை , ஒருமுறை பெய்யும் மழை . |
ஒருபான் | காண்க : ஒருபது . |
ஒருபிடி | கைப்பிடி யளவு ; ஒருகை யளவு ; ஒரே பற்று ; விடாப்பிடி , உறுதிப்பிடி ; உறுதி ; பிடிவாதம் . |
ஒருபுடை | ஏகதேசம் ; ஒருபக்கமாய் . |
ஒருபுடையுவமை | முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை . |
ஒருபுடையொப்புமை | முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை . |
ஒரு பூ | ஒருபோகம் . |
ஒருபொருட்கிளவி | ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் ,பரியாயச் சொற்கள் . |
ஒருபொருட்பன்மொழி | ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் , மீமிசைச் சொல் . |
ஒருபொருள் | ஒரே கருத்து ; உண்மை ; கடவுள் . |
ஒருபொழுது | ஒரு காலம் ; ஒரு சந்தி . |
ஒருபோக்கன் | தனிப் போக்குடையவன் , வேறுபட்ட நடையுள்ளவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 223 | 224 | 225 | 226 | 227 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒருபடி முதல் - ஒருவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், ஒருவாறு, மனத்தை, ஒருமை, ஒற்றுமை, தரும், ஒருசேர, பொருளைத், ஒருவிதம், சொற்கள், ஒத்த, கடவுள், காண்க, ஒருவன், உறுதி, ஏகதேசம், ஒருபது, மட்டும், ஒத்திருக்கும், உவமை, தன்மையில், ஒப்பாகாமல், மாதர், யளவு, முழுவதும், காலம், தன்மை, வழிப்படுத்துதல், மனவடக்கம், ஒன்றிற், ஒன்று, ஒரேசரி, அளவு, ஒருபொழுது, செலுத்துகை, தனிப், ஒருமாதிரி, பேசுதல், ஒருமுறை, ஒற்றுமைப்படுகை, ஒன்றிப்பு, மாவும், உடன்படல், பன்மை