முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஐங்கணைவில்லி முதல் - ஐந்திரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஐங்கணைவில்லி முதல் - ஐந்திரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஐஞ்சிறு காப்பியம் | நீலகேசி , சூளாமணி , யசோதர காவியம் , உதயணகுமார காவியம் , நாககுமார காவியம் . |
| ஐஞ்சுத்தி | ஐவகைத் தூய்மை செய்கை ; ஆன்மசுத்தி ; தானசுத்தி ; திரவிய சுத்தி ; மந்திர சுத்தி ; இலிங்க சுத்தி . |
| ஐஞ்ஞீலம் | கற்பூரம் ; இலவங்கம் ; சாதிக்காய் ; தக்கோலம் . |
| ஐஞ்ஞூறு | ஐந்து நூறு , ஐந்நூறு . |
| ஐஞ்ஞை | அறிவுகேடன் ; அழகு ; ஆடு . |
| ஐணம் | மான்தோல் . |
| ஐதிகப்பிரமாணம் | உலகுரையாகிய அளவை . |
| ஐதிகம் | ஐதிகப்பிரமாணம் ; செவிவழிச் செய்தி , உலகுரை , தொன்றுதொட்டு வரும் கேள்வி . |
| ஐது | அழகுடையது ; அழகு ; மெல்லியது ; நுண்ணியது ; வியப்புடையது ; இளகிய தன்மை ; செறிவில்லாதது . |
| ஐது நொய்தாக | மிக எளிதாக . |
| ஐந்தடக்குதல் | ஐம்பொறிகளையும் அடக்குதல் . |
| ஐந்தரம் | அழகுள்ளது ; நெருக்கமின்மை ; பனை ; மந்தம் . |
| ஐந்தரு | தேவலோகத்து ஐந்து மரங்கள் ; சந்தானம் ; தேவதாரம் ; கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் . |
| ஐந்தருச்செல்வி | இந்திரன் மனைவியாகிய இந்திராணி . |
| ஐந்தருநாதன் | ஐந்து மரங்களுக்குத் தலைவனான இந்திரன் . |
| ஐந்தலை நாகம் | ஐந்து தலைகளையுடைய ஒருவகைப் பாம்பு . |
| ஐந்தலைமணி | ஐந்து மணிகளையுடைய கொத்துமணி . |
| ஐந்தவத்தை | ஐந்து வகை நிலை ; சாக்கிரம் , சொப்பனம் , சுழுத்தி , துரியம் , துரியாதீதம் ; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை . |
| ஐந்தவம் | சாந்திர மதம் ; மிருகசீரிட நாள் . |
| ஐந்தவித்தல் | ஐம்புலனடக்கல் ; ஐந்து பொறிகளையும் அடக்குதல் . |
| ஐந்தறிவுயிர் | மக்கள் ; விலங்கு . |
| ஐந்தனுருபு | இன் , இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு . |
| ஐந்தாங்கால் | திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால் ; ஒருவகை விளையாட்டு . |
| ஐந்தாம்வேதம் | பாரதம் . |
| ஐந்தார் | பனைமரம் . |
| ஐந்தானம் | மிருகசீரிடம் . |
| ஐந்திணை | ஐவகை நிலம் : குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ; அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம் . |
| ஐந்திணைச் செய்யுள் | உரிப்பொருள் தோன்ற ஐந்திணையையும் கூறும் நூல் . |
| ஐந்திரம் | இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம் ; கிழக்கு ; யோகவகை ; சிற்ப நூல் . |
| ஐங்கணைவில்லி | காமன் . |
| ஐங்கதி | குதிரையின் ஐவகையான நடை : மல்ல நடை , மயில் நடை , குரக்கு நடை , முயல் நடை , மனநடை (மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி) . |
| ஐங்கரன் | ஐந்து கைகள் உள்ளவன் , விநாயகன் . |
| ஐங்கனி | சிறப்புடைய ஐந்து பழங்கள் ; எலுமிச்சம் பழம் , நாரத்தம் பழம் , மாதுளம் பழம் , தமரத்தம் பழம் , குளஞ்சிப் பழம் . |
| ஐங்காயத்தூள் | பிள்ளைப் பேற்றிற்குப்பின் கொடுக்கப்படும் ஐந்து சரக்குகள் சேர்ந்த ஒருவகை மருந்து . |
| ஐங்காயம் | ஐந்து காயம் ; கடுகு , ஒமம் , வெந்தயம் , உள்ளி , பெருங்காயம் . இவற்றுள் கடுகு , ஓமம் என்பனவற்றிற்குப் பதிலாக மிளகு , சுக்குச் சேர்த்தும் சிலர் கூறுவர் ; இயேசு நாதர் உடம்பிலுள்ள ஐந்து வடு ; தலைப் பிள்ளைக் கரு . |
| ஐங்காலம் | பிராத காலம் , சங்கவ காலம் , மத்தியான காலம் , அபரான்ன காலம் , சாயான்ன காலம் , இவை சூரியோதயம் முதல் முறையே அவ்வாறு நாழிகை கொண்ட காலப்பகுதியாகும் . |
| ஐங்குரவர் | ஐவகைப் பெரியர் ; அரசன் , ஆசிரியன் , தாய் , தந்தை , தமையன் . |
| ஐங்கூந்தல் | ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர் ; கொண்டை , குழல் , பனிச்சை , முடி , சுருள் என்பன . |
| ஐங்கோலம் | இருப்பை வித்து , ஓமம் , கடுகு , கருஞ்சீரகம் , வேப்ப வித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள் . |
| ஐச்சுவரியம் | செல்வம் . |
| ஐசிலம் | இருள்மரம் , சிறுநாகம் . |
| ஐசுவரியம் | செல்வம் , பேறு ; மேன்மை ; ஆற்றல் ; கடவுள் தன்மை . |
| ஐஞ்சந்தி | ஐந்து தெருக்கள் கூடும் இடம் . |
| ஐஞ்சிறப்பு | அருக தேவருக்குச் செய்யப்படும் பஞ்ச கலியாண பூசை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 214 | 215 | 216 | 217 | 218 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்கணைவில்லி முதல் - ஐந்திரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஐந்து, பழம், காலம், காவியம், ஐவகை, சுத்தி, கடுகு, நூல், மகளிர், சரக்குகள், ஓமம், செல்வம், வித்து, செய்யப்படும், பாலை, குறிஞ்சி, அடக்குதல், தன்மை, ஐதிகப்பிரமாணம், அழகு, இந்திரன், நிலை, முல்லை, ஒருவகை, நாள், மருதம்

