முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஏறுநெற்றி முதல் - ஐங்கணையவத்தை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏறுநெற்றி முதல் - ஐங்கணையவத்தை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஐ | ஒன்பதாம் உயிரெழுத்து ; முன்னிலையொருமை விகுதி ; சாரியை ; தொழிற்பெயர் விகுதி ; பண்புப்பெயர் விகுதி ; வியப்பிடைச் சொல் ; இரண்டாம் வேற்றுமை உருபு ; அழகு ; கோழை ; இருமல் ; இளி என்னும் இசையின் எழுத்து ; யானையைப் பாகரதட்டும் ஓசை ; தலைவன் ; கணவன் ; ஆசான் ; அரசன் ; தந்தை ; கடவுள் ; அம்பு ; நுண்மை ; ஐந்து ; ஐயம் ; கடுகு ; சருக்கரை . |
| ஐக்கம் | ஐக்கியம் , ஒன்றுபடுகை , ஒற்றுமை ; ஒன்றிப்பு . |
| ஐக்கவாதம் | பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனக் கூறும் மதம் . |
| ஐக்கியநாணயசங்கம் | கூட்டுறவால் நிதி பெருக்கும் நிறுவனம் . |
| ஐக்கியபாவம் | ஒற்றுமைத் தன்மை . |
| ஐக்கியம் | ஒற்றுமை , ஒன்றுபடுகை ; ஒன்றாந்தன்மை , ஒன்றிப்பு ; ஒன்றியம் . |
| ஐக்குஞ்சு | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| ஐககண்டியம் | கருத்தொத்திருக்கை . |
| ஐகமத்தியம் | ஒற்றுமை . |
| ஐகாந்திகம் | பொதுமை நீங்கியது ; நிறைவு ; முடிவுடையது . |
| ஐகாரக்குறுக்கம் | சார்பெழுத்துகளுள் ஒன்று ; இரண்டு மாத்திரையில் குறுகி ஒலிக்கும் ஐகாரம் . |
| ஐகாரம் | 'ஐ' என்னும் எழுத்து . |
| ஐகான் | 'ஐ' என்னும் எழுத்து . |
| ஐகிகம் | இகத்துக்குரியது ; இம்மை , இம்மைக்குரியது ; இவ்வுலகம் . |
| ஐங்கணை | மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் ; தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர் . |
| ஐங்கணைக்கிழவன் | மன்மதன் , காமன் . |
| ஐங்கணையவத்தை | தாமரை- சுப்பிரயோகம் (சொல்லும் நினைவும்) , அசோகம்-விப்பிரயோகம் (பெருமூச்சு விட்டு இரங்கல்) , குவளை-சோகம் (வெதும்பி உணவை வெறுத்தல்) , மா-மோகம் (அழுது பிதற்றல்) , முல்லை-சாதல் (மயங்கலும் சாதலும்) . |
| ஏறுநெற்றி | அகன்ற நெற்றி . |
| ஏறுபடி | அதிகப்படி ; தாழ்வாரம் . |
| ஏறுபெட்டி | மரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி . |
| ஏறுபொழுது | முற்பகல் , காலைநேரம் . |
| ஏறுமாறு | தாறுமாறு , குழப்பம் . |
| ஏறுமிராசி | சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிப்பதற்கு இடமாய் மகரமுதல் மிதுனம் வரையுமுள்ள ஆறு இராசிகள் . |
| ஏறுமுகஉருத்திராட்சகம் | உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை . |
| ஏறுமுகக்கண்டிகை | உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை . |
| ஏறுமுகம் | வளரும் நிலை . |
| ஏறுவட்டம் | நட்சத்திரம் முதலியன நாழிகை ஏறும் முறை ; பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை . |
| ஏறுவாசி | ஏற்றம் , உயர்ந்துசெல் நிலை ; உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு . |
| ஏறுவால் | நீண்ட வால் . |
| ஏறுவிடுதல் | ஆயர் தம் மகளை மணம் புரியத்தக்கோர் தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுகளை ஓடவிடுதல் . |
| ஏறுவெயில் | காலை வெயில் , முற்பகல் வெயில் . |
| ஏறுழவன் | படைவீரன் . |
| ஏறூர்ந்தோன் | காளையூர்தியையுடைய சிவன் . |
| ஏறெடுத்தல் | மேலெடுத்தல் , நிமிர்தல் . |
| ஏன் | எதற்கு , என்ன , என்ன காரணம் , என்னை ; இரக்கப்பொருளைத் தரும் இடைச் சொல் ; தன்மையொருமை விகுதி ; பன்றி . |
| ஏன்றுகொள்ளுதல் | ஏற்றல் , ஏற்றுக்கொள்ளல் ; பிறரைத் தாங்குதல் ; எதிர்த்து நிற்றல் . |
| ஏன்றுகோள் | ஆதரிக்கை , காப்பாற்றுகை . |
| ஏன | ஏனைய , பிற , மற்றைய , வேறான . |
| ஏனக்கோடு | பன்றிக்கொம்பு ; வெதுப்படக்கி . |
| ஏனப்படம் | பன்றிமுகக் கேடகம் . |
| ஏனப்பானம் | தட்டுமுட்டு . |
| ஏனம் | பன்றி ; காட்டுப்பன்றி ; கருவி ; பாத்திரம் ; பாவம் ; குற்றம் ; எழுத்தின் சாரியை ; ஓலைக்குடை ; அணிகலன் . |
| ஏனல் | கதிர் ; கருந்தினை ; தினைப்புனம் ; செந்தினை . |
| ஏனவாயன் | பேதை ; தீங்கு பேசுவோன் . |
| ஏனாதி | மறவன் ; நாவிதன் ; படைத்தலைவன் ; ஒரு பட்டப்பெயர் ; அமைச்சன் ; ஒரு பழைய சாதியார் ; சாணாரில் ஒரு வகுப்பு ; ஓர் இளகம் , இலேகியம் . |
| ஏனாதிமோதிரம் | ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம் . |
| ஏனும் | ஒரு வினையெச்ச விகுதி ; என்றாலும் . |
| ஏனென்னுதல் | இடுக்கணுக்கு உதவ வினாதல் , ஆபத்தில் உதவ முற்படுதல் . |
| ஏனை | ஒழிபு , மற்றையெனும் இடைச்சொல் ; ஒழிந்த ; மற்று ; எத்தன்மைத்து ; மலங்குமீன் . |
| ஏனையுவமம் | வெளிப்படை உவமம் . |
| ஏனோதானோவெனல் | பராமுகமாயிருத்தல் , பிடிப்பின்றியிருத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 213 | 214 | 215 | 216 | 217 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏறுநெற்றி முதல் - ஐங்கணையவத்தை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விகுதி, மலர், ஒற்றுமை, சொல், எழுத்து, என்னும், முகங்கள், பெறுமாறு, அதிகம், கோக்கப்படும், நிலை, என்ன, பன்றி, வெயில், முதலியன, மணிகளின், மாலை, குவளை, ஐக்கியம், ஐந்து, அரசன், சாரியை, ஒன்றுபடுகை, ஒன்றிப்பு, முற்பகல், முல்லை, தாமரை, ஐகாரம், உருத்திராட்ச

