முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » எழுத்துமடக்கு முதல் - எழுப்புதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - எழுத்துமடக்கு முதல் - எழுப்புதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| எழுந்தருளுதல் | வருதல் ; புறப்படுதல் ; தோன்றல் ; சிலை முதலியவற்றினிடமாகத் தெய்வம் வெளிப்படுதல் . |
| எழுந்தருளுந்திருமேனி | உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி . |
| எழுந்தருளுநாயகர் | உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி . |
| எழுந்திருத்தல் | எழுதல் ; இருக்கையை விட்டு எழுதல் ; எழுந்து பின் இருத்தல் . |
| எழுந்திருப்பு | எழும்புதல் ; எழுந்து நிற்கை . |
| எழுந்தேற்றம் | இறுமாப்பு ; துணிவு ; எழுந்தமானம் ; கவனிப்பின்மை ; பெருமை ; விழாவில் சாமி புறப்பாடு . |
| எழுநகரம் | சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை . |
| எழுநயம் | சமணர் கூறும் எழுவகை வாதமுறை , இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் . |
| எழுநரகம் | எழுவகையான நரகங்கள் ; அள்ளல் , இரௌரவம் , கும்பிபாகம் , கூடசாலம் , செந்துத் தானம் , பூதி , மாபூதி , (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம் , பெருமணல் வட்டம் , எரிபரல் வட்டம் ; அரிபடை வட்டம் ; புகை வட்டம் ; பெருங்கீழ் வட்டம் , இருள் வட்டம் என்பன . |
| எழுநா | ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி . |
| எழுநாயிறு | காண்க : எழுஞாயிறு . |
| எழுநிலைக்கோபுரம் | ஏழடுக்குக் கட்டடமாய் ஒன்றன்மேல் ஒன்றாய் அமைக்கப்பட்ட கோபுரம் . |
| எழுநிலைமாடம் | ஏழடுக்கு மாளிகை . |
| எழுப்பம் | எழும்புகை , எழுகை , உயர்வு ; கிளர்ச்சி . |
| எழுப்பு | (வி) துயிலெழுப்பு ; தூக்கு ; உயிரோடெழுப்பு ; சண்டைமூட்டு ; கிளப்பிவிடு ; வீடெழுப்பு ; இசையெழுப்பு . |
| எழுப்புதல் | எழும்பச்செய்தல் ; துயில்எழுப்புதல் ; உயிர்பெற்றெழச் செய்தல் ; ஒலியெழுப்புதல் ; ஊக்கம் உண்டாக்குதல் ; கலகம் முதலியென மூட்டுதல் . |
| எழுத்துமடக்கு | சொல்லணி மடக்கு வகையுள் ஒன்று ஓரெழுத்தையே பின்னும் மடக்கிக் கூறுதல் . |
| எழுத்துமறைவேளை | மாலைப்பொழுது . |
| எழுத்து வருத்தனம் | ஓரெழுத் தொருமொழியாய்ப் பின் அதனோடு எழுத்துகள் ஒவ்வொன்றாய்ச் சேர வேறு வேறு பொருள் தந்து நிற்கை . |
| எழுத்து வாங்குதல் | அடிமையாவதற்கு அறிகுறியாக ஆண்டான் பெயரை மார்பில் எழுதிக்கொள்ளுதல் ; கையெழுத்து வாங்குதல் . |
| எழுத்துவாசனை | எழுத்துநடை ; எழுதவும் படிக்கவும் அறிதல் . |
| எழுத்துவெட்டுதல் | எழுத்துப்பொறித்தல் ; கல் ; உலோகம் ; பாண்டம் முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை . |
| எழுத்துவேலை | இராயசம் ; சீலைச் சித்திரத்தொழில் . |
| எழுத்தூசி | எழுத்தாணி . |
| எழுத்தெண்ணிப்படித்தல் | ஒன்றும் விடாமல் படித்தல் ; நன்றாகப் படித்தல் ; எழுத்துக்கூட்டிப் படித்தல் . |
| எழுதகம் | சிற்ப வேலையில் ஒன்று ; சித்திரவேலை ; தூணின் அடிக்கல் . |
| எழுதம் | சிற்ப வேலையில் ஒன்று ; சித்திரவேலை ; தூணின் அடிக்கல் . |
| எழுதல் | எழுந்திருத்தல் ; மேல் எழும்புதல் ; தோன்றுதல் ; புறப்படுதல் ; தொழிலுறுதல் ; பெயர்தல் ; மனங் கிளர்தல் ; மிகுதல் ; வளர்தல் ; உயிர்பெற்றெழுதல் ; துயிலெழுதல் ; பரவுதல் ; தொடங்குதல் . |
| எழுதாக்கிளவி | மறை ,வேதம் . |
| எழுதாக்கேள்வி | மறை ,வேதம் . |
| எழுதாவெழுத்து | அச்செழுத்து . |
| எழுதிக்கொள்ளுதல் | பதவிசெய்தல் , அடிமையாக்குதல் ; விண்ணப்பம் செய்தல் . |
| எழுதிவைத்தல் | சாசனம் செய்துவைத்தல் . |
| எழுதீவு | நாவல் , இறலி , இலவம் , கிரவுஞ்சம் , குசை , தேக்கம் , புட்கரம் என்னும் ஏழு தீவுகள் . |
| எழுதுகொடி | முலைமேல் எழுதும் தொய்யில் . |
| எழுதுகோல் | தூரியக்கோல் ; ஓவியம் வரையும் கோல் ; எழுத்து வரையும் கோல் . |
| எழுதுதல் | எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் . |
| எழுதுபடம் | துணிமேல் எழுதிய படம் . |
| எழுதுவரிக்கோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் . |
| எழுதுவரிகோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் . |
| எழுந்தபடி | நிலைத்தபடி , நேரிட்டபடி , கண்டபடி . |
| எழுந்தருள்படி | தெய்வத் திருமேனிப் புறப்பாடு ; பெரியோர் வருகை . |
| எழுந்தருளியிருத்தல் | தெய்வம் குடிகொண்டருளுதல் ; பெரியோர் வீற்றிருத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 201 | 202 | 203 | 204 | 205 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எழுத்துமடக்கு முதல் - எழுப்புதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வட்டம், எழுத்து, எழுதல், படித்தல், தெய்வத், ஒன்று, தூணின், அடிக்கல், வேதம், சித்திரவேலை, வேலையில், தெய்வம், சிற்ப, ஓவியம், வரையும், எழுதுங்கோலம், பெரியோர், ஆகத்து, மகளிர், கோல், வரைதல், எழுதிக்கொள்ளுதல், வாங்குதல், பின், எழும்புதல், எழுந்து, எழுந்தருளப், திருமேனி, எழுந்திருத்தல், நிற்கை, புறப்பாடு, உற்சவமூர்த்தி, வேறு, புறப்படுதல், செய்தல், சமணர், திருவிழாவில், பண்ணும்

