தமிழ் - தமிழ் அகரமுதலி - எளிதரவு முதல் - என்புருக்கி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| என்பவன் | என்று சொல்பவன் ; என்று சொல்லப்படுபவன் . |
| என்பான் | என்று சொல்பவன் ; என்று சொல்லப்படுபவன் . |
| என்பித்தல் | என்று சொல்லுவித்தல் ; விளக்கமுறச் செய்தல் ; சான்றுகாட்டி நிறுவுதல் . |
| என்பிலது | எலும்பில்லாத உயிரி , புழு . |
| என்பிலி | எலும்பில்லாத உயிரி , புழு . |
| என்பு | எலும்பு ; எலும்புக்கூடு ; உடம்பு ; புல் |
| என்புதின்றி | கழுதைக்குடத்திப் பூண்டு . |
| என்புருக்கி | எலும்புருக்கிநோய் . |
| எளியவன் | வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் . |
| எளிவருதல் | இலகுவாதல் , சுலபமாதல் ; எளிதிற்கிட்டுதல் ; இழிவடைதல் . |
| எளிவிலையன் | விலை குறைந்த பண்டம் . |
| எளிவு | எளிவரவு , சுலபம் . |
| எற்செய்வான் | சூரியன் . |
| எற்சோறு | பழைய காலத்திலிருந்த ஒரு வரி . |
| எற்பாடு | பிற்பகல் , மாலைப் பொழுதுக்குமுன் பத்துநாழிகை நேரம் ; மாலை ; காலை . |
| எற்பு | என்பு , எலும்பு . |
| எற்புச்சட்டகம் | உடல் . |
| எற்றம் | மனத்துணிவு . |
| எற்றற்பட்டை | இறைகூடை . |
| எற்றன்மரம் | நீர் இறைக்கும் கருவிவகை ; தோணிமரம் . |
| எற்றித்தல் | இரங்குதல் . |
| எற்று | எற்றுகை ; எத்தன்மையது ; வியப்பிரக்கக் குறிப்புச்சொல் . |
| எற்றுண்ணுதல் | எறியப்படுதல் . |
| எற்றுதல் | அடித்தல் , புடைத்தல் ; உதைத்தல் ; மோதுதல் ; எறிதல் ; குத்துதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; உடைத்தல் ; நீக்குதல் ; நூல்தெறித்தல் ; இறங்குதல் ; எழுப்புதல் ; நீங்குதல் . |
| எற்றுநூல் | மரக்கோட்டம் பார்க்கும் நூல் ; மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல் . |
| எற்றுள்ளும் | எவற்றுள்ளும் . |
| எற்றே | ஒரு வியப்புமொழி ; ஓர் இரக்கச்சொல் ; எத்தன்மைத்து . |
| எற்றைக்கும் | என்றென்றைக்கும் , எந்நாளும் . |
| எற்றோ | எற்று , எத்தன்மைத்து ; வியப்பிரக்கச்சொல் . |
| எறட்டுதல் | வீசி இறைத்தல் |
| எறி | குத்து ; தள்ளு ; அறை ; அடி ; வெட்டு ; வீச்சு ; உதை ; அடிக்கை ; குறிப்பாகச் சொல்லுகை . |
| எறிகால் | பெருங்காற்று . |
| எறிகாலி | உதைகாற் பசு , காலால் உதைக்கும் பசு . |
| எறித்தல் | ஒளிவீசுதல் ; வெயிற்காலம் ; தைத்தல் ; உறைத்தல் ; பரத்தல் . |
| எறிதல் | உதைத்தல் ; வீசுதல் ; வெட்டுதல் ; முறித்தல் ; அறுத்தல் ; பறித்தல் ; அழித்தல் ; ஓட்டுதல் ; குத்தல் ; அடித்தல் . |
| எறிப்பிடைச்செய்யுள் | செய்யுள் வகையுள் ஒன்று , இதனைப் 'பிபீலிகா மத்திமம்' என்று வழங்குவர் . |
| எறிப்பு | ஒளிசெய்தல் , வெயிலெறிக்கை ; கடுவெயில் . |
| எறிபடுதல் | ஒதுக்கப்படுதல் ; உதைபடுதல் . |
| எறிபடை | கைவிடுபடை ; வேல் ; ஈட்டி . |
| எறிபாவாடை | தெய்வங்கள் , பெரியோர்களுக்கு முன் விரிக்கும் பாவாடை விருது . |
| எறிபுலம் | வெட்டிச் சுட்டகொல்லை நிலம் . |
| எறிபுனம் | வெட்டிச் சுட்டகொல்லை நிலம் . |
| எறிமணி | சேமக்கலம் , சேகண்டி . |
| எறிமுத்து | சிறிய அம்மை . |
| எறியல் | கோடரி . |
| எறியாயுதம் | காண்க : எறிபடை . |
| எறியால் | ஒரு மீன்வகை . |
| எறியுப்பு | கல்லுப்பு . |
| எறிவ | எறியப்படுவன , எறியப்படும் ஆயுதங்கள் . |
| எறிவல்லயம் | கை விட்டெறியும் ஓர் ஆயுதம் . |
| எறிவளையம் | உருளை ; சக்கரப்படை . |
| எறும்பி | யானை ; எறும்பு . |
| எறுழ் | வலிமை ; தண்டாயுதம் ; தடி ; தூண் ; செந்நிறப் பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை . |
| எறுழ்வலி | மிகுந்த வலிமை ; மிக்க வலிமையுடையோன் . |
| எறுழம் | எறுழ்மரம் . |
| எறுழி | பன்றி ; காட்டுப் பன்றி . |
| என் | என்ன ; வினா வினைக்குறிப்பு ; ஐயக்கிளவி ; இகழ்ச்சிக் குறிப்பு ; 'எது' அல்லது 'எதை' எனப் பொருள்படும் இடைச்சொல் ; தன்மை ஒருமைச் சொல் ; யான் என்பது வேற்றுமைப் பொருளில் அடையும் திரிபு ; ஓர் அசைச்சொல் . |
| என்கை | என்று சொல்லுகை . |
| என்ப | எனறு சொல்லப்படுவன ; என்று சொல்லுவர் ; ஓர் அசைச்சொல் . |
| எளிதரவு | தாழ்மை ; வறுமை . |
| எளிதல் | எளிமையடைதல் . |
| எளிதாதல் | இலகுவாதல் ; சுலபமாகத் தருதல் . |
| எளிது | எளியது ; இலேசு ; சுலபம் ; அருமையற்றது ; இலகு ; தாழ்ந்தது . |
| எளிமை | இலகு ; தாழ்வு ; தளர்வு ; அறியாமை ; வறுமை ; தனிமை ; வலியின்மை ; அடிமை . |
| எளியன் | வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 203 | 204 | 205 | 206 | 207 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எளிதரவு முதல் - என்புருக்கி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நூல், எத்தன்மைத்து, சொல்லுகை, வெட்டுதல், எறிதல், அடித்தல், உதைத்தல், எறிபடை, வெட்டிச், அசைச்சொல், வறுமை, இலகு, பன்றி, வலிமை, சுட்டகொல்லை, நிலம், எற்று, சுலபம், புழு, என்பு, எலும்பு, உயிரி, எலும்பில்லாத, சொல்பவன், சொல்லப்படுபவன், வறியவன், இலகுவாய், தாழ்ந்தவன், இலகுவாதல், குணத்தில், அறிவில்லாதவன், அடையப்படுபவன், வலியில்லாதவன், சொல்

