முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஊச்சுதல் முதல் - ஊடுதாக்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஊச்சுதல் முதல் - ஊடுதாக்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊடல் | ஊடுதல் , தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு , பொய்ச்சினம் ; பகைத்தல் ; வெறுத்தல் . |
| ஊடறுத்தல் | ஊடுருவுதல் , நடுவே புகுந்து செல்லுதல் ; வழக்குத் தீர்த்தல் ; இடையில் அடைத்தல் . |
| ஊடாட்டம் | பழகுகை , பலகாற் பயிலுகை . |
| ஊடாடுதல் | நடுவே திரிதல் ; பலகாற் பயிலுதல் ; கலத்தல் ; கலந்து பழகுதல் ; பெருமுயற்சி செய்தல் . |
| ஊடான் | கடல்மீன்வகையுள் ஒன்று . |
| ஊடு | உள் ; நடு , இடை ; நெசவின் தார்நூல் ; ஏழனுருபு ; குறுவையும் ஒட்டடையும் கலந்து விதைத்துச் செய்யும் சாகுபடி . |
| ஊடு | (வி) பிணங்கு ; பிரி ; பகைகொள் ; வெறு . |
| ஊடு சாகுபடி | இருவகைத் தவசங்களைக் கலந்து பயிரிடுகை . |
| ஊடுசெல்லுதல் | நடுவில் போதல் , இடையே போதல் . |
| ஊடுதட்டு | இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம் . |
| ஊடுதல் | புலத்தல் ; வெறுத்தல் ; பிணங்குதல் ; ஊடுருவுதல் . |
| ஊடுதாக்குதல் | பின்னிடாமல் எதிர்நிற்றல் ; ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் ; இரண்டு பொருள்களின் வலியை ஓப்பிடுதல் . |
| ஊச்சுதல் | உறிஞ்சுதல் . |
| ஊசரம் | உவர்நிலம் ; உவர்மண் . |
| ஊசல் | அசைவு ; ஊஞ்சல் ; மனத்தடுமாற்றம் ; பதனழிதல் ; ஒரு சிற்றிலக்கிய வகை ; ஊசற் பருவம் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; ஊழல் ; கடும்பற்றுள்ளம் , இவறல் . |
| ஊசல்வரி | ஊஞ்சற் பாட்டு . |
| ஊசலாடுதல் | ஊஞ்சலாடுதல் ; அசைதல் ; ஊசல் போல முன்பின் அசைந்து இருதலைப்பட்டு நிற்றல் ; அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் . |
| ஊசா | மூக்குத்திக் கொடி . |
| ஊசாட்டம் | உலாவித் திரிகை ; ஊசலாட்டம் ; களவு . |
| ஊசாடுதல் | ஊசலாடுதல் ; உலாவித் திரிதல் . |
| ஊசாலி | மீன்பிடி கூடை . |
| ஊசி | இழைவாங்கி ; துணி தைக்கும் ஊசி ; எழுத்தாணி ; குண்டூசி ; நிறைகோலின் நடுமுள் ; கடிகாரத்தின் முள் ; கூர்மை ; சிறுமை ; ஊசிப்பொறி ; குயவர் மட்கலத்தை அறுக்கும் கருவி ; வடதிசை . |
| ஊசிக்கண் | சிறு கண் . |
| ஊசிக்கப்பல் | புகையிலைவகை . |
| ஊசிக்களா | முள்ளுக் களாச்செடி . |
| ஊசிக்காது | ஊசித்துளை ; நுனித்தறியும் செவிப்பயன் . |
| ஊசிக்காந்தம் | இரும்பிழுக்குங் காந்தக்கல் . |
| ஊசிக்காய் | ஒருவகைத் தேங்காய் . |
| ஊசிக்கால் | மச்சுக்கால் ; நடுக் குத்துக்கால் . |
| ஊசித்தூற்றல் | சிறு மழை . |
| ஊசித்தொண்டை | ஊசிபோல ஒடுங்கிய தொண்டை , சிறு தொண்டை . |
| ஊசிப்புழு | ஒருவகைப் புழு . |
| ஊசிமல்லிகை | ஒரு மல்லிகைவகை ; முல்லை . |
| ஊசிமிளகாய் | கொச்சி மிளகாய் , காந்தாரி மிளகாய் . |
| ஊசிமுல்லை | காண்க : ஊசிமல்லிகை . |
| ஊசியோடுதல் | ஊசித் தையல் செல்லுதல் . |
| ஊசிவெடி | பட்டாசு வெடிவகை . |
| ஊசிவேர் | சிறுவேர் , சல்லிவேர் . |
| ஊசுதல் | சீவுதல் ; தைத்தல் ; அழுகுதல் ; சுவை கெடுதல் ; நாறுதல் . |
| ஊஞ்சல் | ஊசல் ; ஊஞ்சற்பாட்டு . |
| ஊஞ்சற்பாட்டு | ஊஞ்சலாடும்போது மகளிர் பாடும் பாட்டு . |
| ஊட்டம் | உண்டி , உணவு ; செழிப்பு . |
| ஊட்டல் | உண்பிக்கை ; ஊட்டுதல் ; அடைவிக்கை , கன்று முதலியன பால் குடித்தல் . |
| ஊட்டி | உணவு ; மழை ; குரல்வளை ; பறவை விலங்குகளின் தீனி . |
| ஊட்டித்தல் | தாளியடித்தல் ; வயலை மட்டஞ் செய்தல் . |
| ஊட்டிமரம் | தேட்கொடுக்கிப் பூண்டு . |
| ஊட்டு | உண்பிக்கை ; உணவு ; ஊட்டுங் கவளம் ; காளி முதலிய தெய்வங்களுக்கு இடும் படையல் . |
| ஊட்டுணை | தலையாட்டம் . |
| ஊட்டுதல் | உண்ணல் ; உண்பித்தல் ; வாயிலிடுதல் ; புகட்டுதல் ; கன்று பால் குடித்தல் ; சாய மேற்றுதல் ; அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல் ; நினைப்பூட்டுதல் ; நுகரச் செய்தல் . |
| ஊட்டுந்தாய் | ஐவகைத் தாயருள் ஒருத்தி , சோறூட்டுபவள் . |
| ஊட்டுப்புரை | உணவளிக்கும் சாலை . |
| ஊட்டுவான் | சமையற்காரன் . |
| ஊடகம் | ஊடே , இடையில் ; விடியற்காலம் ; ஒரு கடல்மீன்வகை . |
| ஊடடித்தல் | களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல் . |
| ஊடணம் | கருமிளகுகொடி ; சுக்கு . |
| ஊடணை | திப்பிலி . |
| ஊடரம் | பூவழலை , உவர்நிலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊச்சுதல் முதல் - ஊடுதாக்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், சிறு, உணவு, ஊட்டுதல், கலந்து, ஊசல், மிளகாய், ஊஞ்சற்பாட்டு, ஊசிமல்லிகை, தொண்டை, நடுவே, ஊடுருவுதல், உண்பிக்கை, பால், குடித்தல், முதலியன, கன்று, வெறுத்தல், உலாவித், ஊசலாடுதல், புகுந்து, ஒன்று, செல்லுதல், திரிதல், பலகாற், சாகுபடி, போதல், பாட்டு, ஊஞ்சல், ஊடுதல், உவர்நிலம், இடையில்

