தமிழ் - தமிழ் அகரமுதலி - உறுதியோர் முதல் - உன்மத்தகம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
உறுபு | பாலை யாழ்த்திறம் ; செறிவு ; மிகுதி . |
உறுபூசல் | கை கலந்த போர் . |
உறுபொருள் | தானே வந்தடையும் பொருள் , உடையர் இல்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள் , வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் மறைந்து கிடந்ததும் தாயத்தார் பெறாததுமாகிய பொருள் . |
உறும்பு | உலர்ந்த கரம்பை ; மண்ணின் கூரிய சிறு கட்டி . |
உறும்புதல் | உறுமுதல் . |
உறுமால் | உருமால் , தலைச்சாத்து , தலைச்சீலை , தலைப்பாகை , மேல் வேட்டி . |
உறுமாலை | உருமால் , தலைச்சாத்து , தலைச்சீலை , தலைப்பாகை , மேல் வேட்டி . |
உறுமி | ஒருவகைத் தோற்கருவி , பறை . |
உறுமுதல் | உறுமென்று ஒலித்தல் ; முறுமுறுத்தல் ; குமுறுதல் ; சினத்தல் ; இரைதல் ; முழங்குதல் ; எழும்புதல் . |
உறுவது | வரற்பாலது ; இலாபம் ; ஒப்பது ; தருவது . |
உறுவதுகூறல் | எண்வகை விடையுள் ஒன்று , ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்து நேர்வது கூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை . |
உறுவதுதெரிதல் | பின்வருவன அறிதல் என்னும் வணிகர் குணம் . |
உறுவரர் | தேவர் . |
உறுவல் | உறுவேன் என்னும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று ; துன்பம் . |
உறுவலி | மிக்க வலிமை ; மிக்க வலிமையுடையவன் . |
உறுவன் | அடைந்தோன் ; மிக்கோன் ; எதிர்த்து நிற்போன் ; பெரியோன் ; முனிவன் ; அருகன் ; 'உறுவேன்' எனனும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று . |
உறுவித்தல் | பொருத்துதல் ; நுகர்தல் . |
உறை | பெருமை ; நீளம் ; உயரம் ; பொருள் ; மருந்து ; உணவு ; வெண்கலம் ; பெய்யுறை ; ஆயுதவுறை ; நீர்த்துளி ; மழை ; காரம் ; போர்வை ; உறுப்பு ; இருப்பிடம் ; பாலிடுபிரை ; ஓர் இலக்கக் குறிப்பு ; வாழ்நாள் ; துன்பம் ; கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம் ; பொன் ; பாம்பின் நச்சுப்பை . |
உறைக்கப் பார்த்தல் | உற்றுநோக்குதல் . |
உறைக்கிணறு | சுடுமண் உறையிட்ட கிணறு . |
உறைகாலம் | மழைக்காலம் ; வாழ்நாள் . |
உறைகுத்துதல் | பாலுக்குப் பிரைமோர் இடுதல் . |
உறைகோடுதல் | பருவமழை பெய்யாது ஒழிதல் , பெய்யவேண்டும் காலத்து மழை பெய்யாமை . |
உறைச்சாலை | மருந்தகம் , மருந்துச் சாலை . |
உறைத்தல் | துளித்தல் ; பெய்தல் ; உதிர்தல் ; நீர் சொரிதல் ; உறுதியடைதல் ; தாக்கிப் பயன்விளைத்தல் ; மோதுதல் ; மிகுதல் ; அதட்டுதல் ; அமுக்குதல் ; ஒத்தல் ; காரமாயிருத்தல் ; உறுத்தல் ; எரிதல் ; அழுந்தல் . |
உறைதல் | தோய்தல் ; தங்குதல் ; வாழ்தல் ; ஒழுகுதல் ; இறுகுதல் ; செறிதல் ; உறுதியாதல் . |
உறைநாழி | வெட்டியான் மானியம் . |
உறைப்பன் | வலியன் , திண்ணியன் . |
உறைப்பு | காரம் ; எரிவு ; சுவைக் கூர்மை ; அழுத்தம் ; வாய்ப்பு ; கொடுமை ; வேதனை ; மழைபெய்தல் ; தாக்குதல் ; மிகுதி ; பதிவு ; உறுதி . |
உறைபதி | உறைவிடம் , இருப்பிடம் . |
உறைபோதல் | உறையிட முடியாதொழிதல் ; எண்ண முடியாது போதல் . |
உறைமோர் | பாலில் இடும் பிரைமோர் . |
உறையல் | பிணக்கு , மாறுபாடு . |
உறையுள் | உறைகை ; தங்குமிடம் ; வீடு ; நாடு ; துயிலிடம் ; மக்கட்படுக்கை ; ஊழி ; உறை காலம் ; ஆயுள் ; வாழ்நாள் . |
உறைவி | உறைபவள் |
உறைவிடம் | இருப்பிடம் , வாழுமிடம் ; பொருள்கள் இருக்கும் இடம் , களஞ்சியம் . |
உறைவு | தங்குகை ; சிறு குகை ; உறைதல் ; இருப்பிடம் . |
உன்மணி | உயர்ந்த மணி . |
உன்மத்தகம் | ஊமத்தை . |
உறுதியோர் | தூதர் . |
உறுதுணை | உற்ற துணை ; பெருந்துணை ; நம்பிக்கையான துணை . |
உறுநன் | சேர்ந்தவன் . |
உறுப்படக்கி | ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை . |
உறுப்பணங்கெட்டவன் | உறுப்புக் குறையுடையவன் ; மூடன் . |
உறுப்பறை | உறப்புக் குறைந்தவன் ; உறுப்புக் குறைவு . |
உறுப்பா | கப்பல் கட்டுதற்குப் பயன்படும் மரவகை . |
உறுப்பில்பிண்டம் | உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று , உறுப்பற்ற தசைத்திரள் , கருவில் வடிவுறுமுன் சிதைந்த பிண்டம் . |
உறுப்பு | சிணை , அவயவம் , உடல் , நெருக்கம் , பங்கு ; மிகுதி ; மரக்கொம்பு ; மேல்வரிச்சட்டம் ; காணியாட்சிப் பத்திரம் ; பாலையாழ்த்திறம் ; உடல் அழகு . |
உறுப்பத்தோல் | பூணூலிற் கட்டிய மான்தோல் . |
உறுப்புள்ளவன் | உடல் அழகுள்ளவன் ; ஒழுக்கமுள்ளவன் ; திறமையுடையவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உறுதியோர் முதல் - உன்மத்தகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இருப்பிடம், பொருள், வாழ்நாள், மிகுதி, உடல், உறுப்பு, காரம், மிக்க, துன்பம், பிரைமோர், உறுப்புக், துணை, உறைவிடம், உறைதல், வினைமுற்று, பொருள்படும், தலைச்சாத்து, தலைச்சீலை, உருமால், உறுமுதல், சிறு, தலைப்பாகை, மேல், உறுவேன், என்னும், ஒன்று, வேட்டி, தன்மை