தமிழ் - தமிழ் அகரமுதலி - உன்மத்தகி முதல் - ஊச்சு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊகித்தல் | உத்தேசித்தல் ; தருக்கித்து ஆராய்தல் ; ஆலோசித்தல் ; ஆராய்ந்தறிதல் . |
| ஊகை | ஊகம் ; யூகை ; கல்வி . |
| ஊங்கண் | உவ்விடத்து , முன்பு . |
| ஊங்கணோர் | முன்னுள்ளோர் . |
| ஊங்கு | சிறந்தது ; மிகுதி ; முன் ; உவ்விடம் ; விசேடம் . |
| ஊங்குதல் | ஆடுதல் . |
| ஊச்சில் | தசைநோய் . |
| ஊச்சு | அச்சம் . |
| உன்மத்தம் | மயக்கம் ; வெறி , பைத்தியம் ; காமன் கணைகளுள் ஒன்றன் செயல் ; ஊமத்தை . |
| உன்மத்தன் | பித்தன் , வெறியன் ; மயக்கமுடையோன் . |
| உன்மத்தை | காண்க : ஊமத்தை . |
| உன்மதம் | மதிமயக்கம் ; மிக்க காமம் . |
| உன்மனி | உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் . |
| உன்மனை | உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் . |
| உன்மாதம் | மயக்கம் ; வெறி . |
| உன்மானம் | நிறுக்கை ; பொருள்களை நிறுத்தப் பார்த்து அளவிடல் . |
| உன்முகம் | முன்னோக்குதல் ; மேல்நோக்கிய முகம் , மேல்நோக்கம் ; அண்ணாந்து பார்க்கை ; ஒன்றிற் கருத்தாயிருக்கை ; அனுகூலமாய் இருத்தல் . |
| உன்முகன் | கருத்தாயிருப்பவன் . |
| உன்முகி | கருத்தாயிருப்பவன் . |
| உன்மேதை | கொழுப்பு , புலால் . |
| உன்மை | தசை பிடுங்குங் குறடு . |
| உன்னதம் | உயர்ச்சி ; மேன்மை . |
| உன்னநிலை | போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தம் அறியும் புறத்துறை . |
| உன்னம் | நினைவு , கருத்து ; தியானம் ; மனம் ; நிமித்தம் குறிக்கும் ஒரு மரம் ; அன்னம் ; நீர்வாழ் பறவை ; தசை பிடுங்குங் குறடு ; அபிநயக்கைவகை . |
| உன்னயம் | உயர்த்துகை ; உயர்வு : குதிரை சாத்திர நூல்களுள் ஒன்று . |
| உன்னல் | நினைத்தல் ; ஆராய்வாக நினைத்தல் ; சிந்தித்தல் ; விரைந்தெழும்புதல் ; மனம் . |
| உன்னலர் | பகைவர் . |
| உன்னாயங்கொடி | ஒரு கொடிவகை . |
| உன்னி | குதிரை ; அழிஞ்சில் ; செடிவகை ; தியானத்திற்குரிய பொருள் . |
| உன்னித்தில் | உயர்தல் ; தியானித்தல் . |
| உன்னிப்பு | கவனிப்பு ; ஊகிப்பு ; அறிவுக்கூர்மை ; குறிப்பு ; உயரம் ; முயற்சி ; மதிப்பு . |
| உன்னியம் | ஒற்றுமை ; உரிமை , சொந்தம் . |
| உன்னியர் | சுற்றத்தார் , உறவினர் . |
| உன்னு | விரைந்தெழும்புகை ; இழுக்கை . |
| உன்னுதல் | நினைத்தல் ; பேச வாயெடுத்தல் ; எழும்புதல் ; முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல் . |
| உனகன் | இழிந்தவன் . |
| உனினம் | சிறுபூளை . |
| ஊ | ஆறாம் உயிரெழுத்து ; நெட்டுயிரெழுத்துள் ஒன்று ; வினையெச்ச விகுதியுள் ஒன்று ; ஓரொலிக்குறிப்பு ; 'கைக்கிளை' என்னும் இசையின் எழுத்து ; ஊன் , இறைச்சி ; உணவு . |
| ஊக்கப்பாடு | ஊக்கங்கொள்கை . |
| ஊக்கம் | உள்ளக் கிளர்ச்சி , மனவெழுச்சி ; உள்ளத்தின் மிகுதி ; முயற்சி ; வலிமை ; உயர்ச்சி ; மேற்கொண்ட எண்ணம் ; உண்மை . |
| ஊக்கல் | முயலுகை ; மிகுதி . |
| ஊக்கலர் | முயற்சியுடையவர் . |
| ஊக்கு | ஊக்கம் , முயற்சி ; கொக்கி . |
| ஊக்கு | (வி) முயல் ; எழுப்பு ; ஏறு . |
| ஊக்குணா | நிலப்பனை . |
| ஊக்குதல் | ஆட்டுதல் ; நெகிழ்த்துதல் ; தப்புதல் ; ஆர்வமூட்டுதல் ; முயலுதல் ; கற்பித்தல் ; நினைத்தல் ; ஏறுதல் ; நோக்குதல் . |
| ஊகடன் | முருங்கைமரம் ; முருங்கை ; காட்டு முருங்கை . |
| ஊகத்தாதனம் | யோகாசனவகை . |
| ஊகம் | எண்ணி அறிதல் ; ஆராய்ச்சி ; நினைவு ; தியானம் ; படைவகுப்பு ; குரங்கு ; கருங்குரங்கு ; புலி ; ஒரு புல்வகை ; ஊமத்தை ; நீதி . |
| ஊகனம் | நியாயஞ் சொல்லுகை ; காரணங் காட்டுகை ; ஊகம் ; துணிபு . |
| ஊகனி | துடைப்பம் . |
| ஊகாஞ்சிதம் | தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல் . |
| ஊகாமுள் | ஊகம் புல்லின் முள் . |
| ஊகாரம் | 'ஊ' என்னும் எழுத்து . |
| ஊகி | ஊகிப்பவன் (ள்) ; நுண்ணறிவுடையவன்(ள்) . |
| ஊகி | (வி) நினை , எண்ணு , உத்தேசி . |
| உன்மத்தகி | குறிஞ்சாக்கொடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 180 | 181 | 182 | 183 | 184 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உன்மத்தகி முதல் - ஊச்சு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நினைத்தல், ஊகம், மிகுதி, ஒன்று, ஊமத்தை, முயற்சி, மனம், குதிரை, எழுத்து, முருங்கை, ஊக்கு, ஊக்கம், தியானம், என்னும், நிமித்தம், உள்ள, உடலிலே, வெறி, மயக்கம், யோகத்தானம், கருத்தாயிருப்பவன், உயர்ச்சி, குறடு, பிடுங்குங், நினைவு

