தமிழ் - தமிழ் அகரமுதலி - உடுப்பை முதல் - உண்டியல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
| உடையவர் | ஆன்மாக்களை அடிமையாக உடையவர் ; சுவாமி ; ஆன்மார்த்தலிங்கம் ; செல்வர் ; இராமானுசர் . |
| உடையவரசு | திருநாவுக்கரச நாயனார் . |
| உடையவன் | உரியவன் ; பொருளையுடையவன் ; கடவுள் ; செல்வன் ; தலைவன் . |
| உடையார் | செல்வர் ; சுவாமி ; சில வகுப்பார்களின் பட்டப் பெயர் இலங்கையில் ஒரு கிராம அலுவலர் . |
| உடையார்சாலை | கோயிலில் உள்ள அன்னசாலை . |
| உடையாள் | உமாதேவி ; உடைமையாகக் கொண்டவள் . |
| உடையாளி | கடவுள் |
| உடையான் | உடையவன் ; உரிமைக்காரன் ; அரசன் ; தலைவன் ; கடவுள் . |
| உடைவாரம் | மொத்த விளைவு , முழு விளைவு . |
| உடைவாள் | இடைக்கச்சில் செருகும் குறுவாள் . |
| உடைவு | தகர்கை ; உடைப்பு ; கேடு ; தளர்வு ; தோற்றோடுகை ; மனநெகிழ்ச்சி ; களவு . |
| உடைவேல் | குடைவேல மரம் . |
| உண்கண் | மை தீட்டிய கண் . |
| உண்கலம் | உணவு கொள்ளும் பாண்டம் , உண்ணும் ஏனம் . |
| உண்கலன் | உணவு கொள்ளும் பாண்டம் , உண்ணும் ஏனம் . |
| உண்டறுத்தல் | புசித்துச் செரிப்பித்துக் கொள்ளுதல் ; அனுபவித்து முடித்தல் ; நன்றி மறத்தல் ; ஈடுசெய்து தீர்த்தல் . |
| உண்டாக்குதல் | படைத்தல் ; தோன்றச் செய்தல் ; விளைவித்தல் ; வளர்த்தல் . |
| உண்டாக | காலம் பெற ; கருத்தரிக்க ; மிகுதியாக . |
| உண்டாட்டம் | விளையாட்டு . |
| உண்டாட்டு | கள்ளுண்டு களித்து விளையாடல் ; கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை ; பெருங்காப்பியவுறுப்புள் ஒன்று ; பலர் கூடியுண்ணும் விழா , மகளிர் விளையாட்டு வகை . |
| உண்டாத்தா | கள்ளிமரம் . |
| உண்டாதல் | விளைதல் ; செல்வச் செழிப்பாதல் ; உளதாதல் ; நிலையாதல் ; கருக்கொள்ளுதல் . |
| உண்டாயிருத்தல் | சூல்கொண்டிருத்தல் . |
| உண்டானவன் | செல்வமுள்ளவன் . |
| உண்டி | உணவு ; சோறு ; இரை ; பறவை ; விலங்கு ; இவற்றின் உணவு ; உண்டிச் சீட்டு ; கருவூலம் ; மாற்றுச்சீட்டு ; காணிக்கைப் பெட்டி ; கோயிலுக்குக் கொடுக்கும் பணம் ; நுகர்ச்சி ; கொட்டைக்கரந்தை . |
| உண்டிகை | காணிக்கைக் கலம் ; மாற்றுச் சீட்டு . |
| உண்டியல் | காணிக்கைக் கலம் ; மாற்றுச் சீட்டு . |
| உடுப்பை | காண்க : உசிலை . |
| உடுபதம் | வானம் , ஆகாயம் . |
| உடுபதி | காண்க : உடுக்கோன் ; மரமஞ்சள் . |
| உடுபம் | தெப்பம் . |
| உடுபன் | காண்க : உடுக்கோன் . |
| உடுபாதகம் | பனைமரம் . |
| உடும்பு | பல்லிவகையைச் சேர்ந்த ஊரும் ஓர் உயிரினம் பிளவுபட்ட நாக்குள்ள ஓர் உயிரினம் . |
| உடும்பு நாக்கன் | பொய்யன் , மாறுபடப் பேசுபவன் ; வஞ்சகன் . |
| உடுமடி | ஆடை . |
| உடுமாற்று | உடைமாற்றுகை ; நடைபாவாடை . |
| உடுமானம் | உடை ; நிலைமைக்குத் தகுந்த உடை . |
| உடுவம் | அம்பின் ஈர்க்கு . |
| உடுவேந்தன் | காண்க : உடுக்கோன் . |
| உடுவை | அகழி ; நீர்நிலை . |
| உடை | ஆடை ; செல்வம் ; உடைமை ; குடைவேல மரம் : சூரியன் மனைவி . |
| உடை | (வி) ஒடி , தகர் , உடை என்னும் ஏவல் . |
| உடைக்கல் | காவிக்கல் . |
| உடைகுளம் | இருபதாம் நட்சத்திரமாகிய பூராட நாள் ; மூளி ஏரி . |
| உடைகொல் | உடைமரம் : வேலமரம் . |
| உடைஞாண் | உடைமேல் தரிக்கும் கயிறு . |
| உடைநாண் | உடைமேல் தரிக்கும் கயிறு . |
| உடைத்தல் | தகர்த்தல் : அழித்தல் : வருத்துதல் : தோற்கச் செய்தல் : வெளிப்படுத்துதல் ; குட்டுதல் : பிளத்தல் : கரை உடைத்தல் : புண் கட்டியுடைதல் ; முறுக்கவிழத்தல் . |
| உடைதல் | தகர்தல் : உலைதல் : கெடுதல் : மலர்தல் : பிளத்தல் : முறுக்கவிழ்தல் : எளிமைப்படுதல் : புண்கட்டியுடைதல் : ஆறு முதலியன கரையுடைதல் : அவிழ்தல் ; தோற்றோடுதல் ; வெளிப்படுதல் . |
| உடைப்படை | நிலைப்படை . |
| உடைப்பு | உடைகை , உடைந்துவிடுதல் ; உடைந்த அறுவாய் , பிளப்பு . |
| உடைப்பெடுத்தல் | வெள்ளத்தாற் கரையழிதல் . |
| உடைப்பொருள் | உடைமைப் பொருள் , ஒருவருக்கு உடைத்தாகிய பொருள் . |
| உடைமணி | குழந்தைகளின் அரையணி ; மேகலை . |
| உடைமை | உடையனாகும் தன்மை ; உடைமைப் பொருள் ; செல்வம் ; அணிகலன் ; உரிமை ; உரியவை . |
| உடைய | ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| உடையநம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 150 | 151 | 152 | 153 | 154 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடுப்பை முதல் - உண்டியல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உணவு, கடவுள், சீட்டு, உடுக்கோன், நாயனார், பொருள், உடும்பு, உயிரினம், மாற்றுச், காணிக்கைக், கலம், உடைமேல், பிளத்தல், உடைமைப், உடைத்தல், கயிறு, உடைமை, தரிக்கும், செல்வம், விளையாட்டு, தலைவன், விளைவு, உடைப்பு, உடையவன், செல்வர், உடையவர், சுவாமி, குடைவேல, மரம், செய்தல், உடைய, ஏனம், உண்ணும், கொள்ளும், பாண்டம், கள்ளுண்டு

