தமிழ் - தமிழ் அகரமுதலி - இவறல் முதல் - இழுத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இழிதல் | இறங்குதல் ; விழுதல் ; இழிவுபடுதல் ; தாழ்தல் ; வெளிப்படுதல் . |
| இழிதிணை | காண்க : அஃறிணை . |
| இழிந்தேறும்வழி | படுகர் ; ஏற்ற இறக்கமான பாதை . |
| இழிந்தோர் | தாழ்ந்தநிலையில் இருக்கின்றவர் . |
| இழிநீர் | வடியுநீர் . |
| இழிப்பு | நிந்திக்கை ; இகழ்வு ; இழிப்புச் சுவை . |
| இழிபாடு | இழிவு . |
| இழிபிறப்பினோன் | இழிசினன் , கீழ்மகன் . |
| இழிபு | இழிவு ; தாழ்வு ; பள்ளம் ; கீழ்மை ; சிறுமை . |
| இழிபுனல் | வடிந்த நீர் ; மலையினின்று விழுகின்ற அருவி . |
| இழிய | ஒழுக . |
| இழியற்கண் | இமை திறந்த கண் . |
| இழியினன் | காண்க : இழிசினன் . |
| இழிவரவு | காண்க : இளிவரவு . |
| இழிவழக்கு | இழிசினர் வழக்கு . |
| இழிவு | தாழ்வு ; இகழ்ச்சி , நிந்தை ; குறைவு ; குற்றம் ; கேடு ; பள்ளம் ; தீட்டு . |
| இழிவுசிறப்பு | இழிந்த தன்மையை மிகுத்து உரைத்தல் . |
| இழின் | ஒருவகை ஒலிக்குறிப்பு . |
| இழினெனல் | ஒருவகை ஒலிக்குறிப்பு . |
| இழு | (வி) ஈர் ; பின்வாங்கு ; வசமாக்கு ; உறிஞ்சு . |
| இழுக்கடித்தல் | அலையவைத்தல் . |
| இழுக்கம் | பிழை ; ஒழுக்கந் தவறுகை ; தீயநடத்தை ; ஈனம் ; தளர்வு ; தாமதம் . |
| இழுக்கல் | வழுக்குகை ; வழுக்குநிலம் ; தளர்வு ; தவறுதல் . |
| இழுக்காமை | மறவாமை . |
| இழுக்காறு | தீநெறி , தீயொழுக்கம் . |
| இழுக்கு | குற்றம் ; பொல்லாங்கு ; நிந்தை ; தாழ்வு ; மறதி ; வழுக்கு ; தவறு . |
| இழுக்குதல் | தவறுதல் ; வழுக்குதல் ; இழத்தல் ; தளர்தல் ; துன்புறுதல் ; தள்ளிவிடல் ; மறத்தல் ; பின்வாங்கல் . |
| இழுகுணி | சோம்பேறி ; பிசினாறி . |
| இழுகுதல் | பூசுதல் ; பரத்தல் ; படிதல் ; தாமதித்தல் . |
| இழுங்கு | நீங்குகை ; ஈனம் , வழு . |
| இழுத்தல் | உறிஞ்சுதல் ; ஈர்த்தல் ; வலித்தல் ; வசமாக்கல் ; காலம் நீட்டித்தல் ; சுழித்து வாங்குதல் ; பின்வாங்குதல் ; புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல் ; ஒலியை நீட்டுதல் ; சுரம் பாடுதல் . |
| இவறல் | விருப்பம் ; பேரவா ; கடும்பற்றுள்ளம் , ஈயாமை ; மறதி . |
| இவறலன் | தானும் துய்யான் பிறருக்கும் ஈயான் , கடும்பற்றுள்ளன் . |
| இவறன்மை | கடும்பற்றுள்ளம் ; அசட்டை ; ஆசை . |
| இவறியார் | கைவிடாதவர் ; ஆசைப்பட்டோர் . |
| இவறுதல் | ஆசையுறல் ; விரும்புதல் ; மறத்தல் ; மிகுதல் ; உலாவுதல் ; கைவிடாதிருத்தல் ; வேண்டும்வழிப் பொருள் கொடாமை . |
| இவனட்டம் | மிளகு . |
| இவுளி | குதிரை ; மாமரம் . |
| இவுளிமறவன் | குதிரைவீரன் . |
| இவை | அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல் . |
| இழத்தல் | தவறவிடுதல் ; சாகக் கொடுத்தல் ; கைவிடுதல் . |
| இழந்தநாள் | பயனின்றிக் கழிந்த நாள் . |
| இழப்பு | இழக்கை , நட்டம் ; பொருளழிவு . |
| இழப்புணி | இழந்தவன்(ள்) . |
| இழவு | இழப்பு ; கேடு ; சாவு ; எச்சில் ; வறுமை . |
| இழவுக்கடித்தல் | சாவுவீட்டில் மார்பில் அடித்து அழுதல் ; வீணுக்கு முயலுதல் . |
| இழவுகொடுத்தல் | வீணிலே வருத்தல் . |
| இழவுசொல்லுதல் | சாவுச்செய்தியை அறிவித்தல் . |
| இழவுவிழுதல் | சாவு நேர்தல் ; கேடு உண்டாதல் . |
| இழவூழ் | கேடு தரும் வினைப்பயன் . |
| இழவோலை | சாவோலை , சாவையறிவிக்குங் கடிதம் . |
| இழி | (வி) இறங்கு . |
| இழிகடை | மிக இழிந்தது . |
| இழிகண் | எப்பொழுதும் பீளைநீர் ஒழுகும் கண் . |
| இழிகுலம் | தாழ்ந்த குடி . |
| இழிகை | கைச்சுரிகை ; கையீட்டி ; இறங்குதல் . |
| இழிங்கு | ஈனம் ; வடு . |
| இழிச்சல்வாய் | திறந்த வாய் . |
| இழிச்சுதல் | இழிவுபடுத்தல் ; இறக்குதல் ; கீழ்ப்படுத்தல் ; அவமதித்தல் ; இடித்தல் ; தள்ளிக்கொடுத்தல் . |
| இழிசினர்மொழி | கீழ்மக்கள் பேச்சு . |
| இழிசினன் | புலைமகன் ; தாழ்ந்தோன் . |
| இழிஞன் | புலைமகன் ; தாழ்ந்தோன் . |
| இழிசொல் | பழிச்சொல் ; பொய்ம்மொழி ; கடுஞ்சொல் ; பயனில்சொல் . |
| இழித்தல் | இறக்குதல் ; இகழுதல் . |
| இழித்துரை | இழிவாகக் கூறும் சொல் . |
| இழிதகவு | இழிவு , எளிமை . |
| இழிதகன் | இழிந்தவன் ; பிறர் பழிக்கதக்க செயலையுடையவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இவறல் முதல் - இழுத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கேடு, இழிவு, ஈனம், சொல், தாழ்வு, இழிசினன், காண்க, கடும்பற்றுள்ளம், இழத்தல், மறத்தல், இறக்குதல், தாழ்ந்தோன், புலைமகன், மறதி, சாவு, இழப்பு, ஒலிக்குறிப்பு, திறந்த, பள்ளம், இறங்குதல், நிந்தை, குற்றம், தளர்வு, ஒருவகை, தவறுதல்

