முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இட்டம்பண்ணுதல் முதல் - இடங்கரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இட்டம்பண்ணுதல் முதல் - இடங்கரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இட்டுப்பிரித்தல் | அண்மையில் தலைவன் பிரிதல் . |
| இட்டுப்பிரிவு | அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு . |
| இடடுப்பிறத்தல் | ஒரு செயலுக்காகப் பிறத்தல் . |
| இட்டுரைத்தல் | சிறப்பித்துச் சொல்லுதல் . |
| இட்டுவட்டி | அன்னவட்டி . |
| இட்டுவருதல் | அழைத்து வருதல் ; கொடுத்து விட்டு வருதல் . |
| இட்டுறுதி | கண்டிப்பு ; ஆபத்துக்கால உதவி . |
| இட்டேற்றம் | பொய்யாகச் குற்றஞ் சாட்டுகை ; கொடுமை . |
| இட்டேறி | வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை ; வண்டிப் பாதை . |
| இட்டேறுதல் | கூடியதாதல் ; போதியதாதல் . |
| இட்டோடு | ஒற்றுமையின்மை . |
| இடக்கயம் | கொடி . |
| இடக்கர் | அவையில் சொல்லத்தகாத சொல் ; குடம் ; மீதூர்கை . |
| இடக்கரடக்கல் | பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று . |
| இடக்கரடக்கு | பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று . |
| இடக்கரிசை | செய்யுட் குற்றத்துள் ஒன்று . |
| இடக்கல் | தோண்டுதல் ; அகழ்தல் . |
| இடக்கன் | தாறுமாறு செய்பவன் . |
| இடக்கியம் | தேர்க்கொடி . |
| இடக்கு | சொல்லத்தகாத சொல் ; வீண்வாதம் ; முரண்செயல் . |
| இடக்குதல் | விழுதல் . |
| இடக்குமடக்கு | தாறுமாறு ; தொல்லை . |
| இடக்குமுடக்கு | தாறுமாறு ; தொல்லை . |
| இடக்கை | இடப்பக்கத்திலுள்ள கை ; இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி ; பெருமுரசுவகை . |
| இடகண் | இடப்பக்கத்தவன் . |
| இடகலை | காண்க : இடகலை . |
| இடங்கசாலை | அக்கசாலை . |
| இடங்கட்டுக்கொம்பு | மாட்டுக்குற்றவகை . |
| இடங்கணம் | வெண்காரம் . |
| இடங்கணி | சங்கிலி ; காண்க : இடங்கணிப்பொறி ; உளி . |
| இடங்கணிப்பொறி | கோட்டை மதிலில் வைக்கப்படும் இயந்திரங்களுள் ஒன்று . |
| இடங்கம் | உளி ; இரத்தினம் நிறுக்கப் பயன்படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல் ; மண்தோண்டும் படை ; வாளினுறை ; கணைக்கால் ; பொரிகாரம் ; கோபம் ; செருக்கு ; கற்சாணை . |
| இடங்கர் | கயவர் ; முதலைவகை ; நீர்ச்சால் ; குடம் ; சிறுவழி . |
| இடங்கரம் | மகளிர் சூதகத்தால் உண்டாகும் தீட்டு . |
| இட்டம்பண்ணுதல் | அடிமைத்தனத்தை விலக்குதல் . |
| இட்டலி | சிற்றுண்டிவகை . |
| இட்டலிக்கொப்பரை | இட்டலி அவிக்கும் பாத்திரம் . |
| இட்டலிங்கம் | மாணவனுக்கு ஆசிரியனால் கொடுக்கப்படும் அன்றாட வழிபாட்டிற்குரிய ஆன்மார்த்த லிங்கம் . |
| இட்டவழக்கு | சொன்னது சட்டமாயிருக்கை . |
| இட்டவை | வழி . |
| இட்டளப்படுதல் | சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல் . |
| இட்டளம் | நெருக்கம் ; வருத்தம் ; தளர்வு ; பொன் . |
| இட்டளர் | மனவருத்தமுள்ளவர் . |
| இட்டறுதி | குறித்த எல்லை ; இக்கட்டான நிலை ; வறுமை . |
| இட்டறை | யானையை வீழ்த்தும் குழி . |
| இட்டன் | விருப்பமானவன் ; நண்பன் ; தலைவன் . |
| இட்டாதெய்வம் | காண்க : இட்டதெய்வம் . |
| இட்டி | ஈட்டி ; வேள்வி ; சங்கிரகச் செய்யுள் ; கொடை ; பூசை ; இச்சை ; செங்கல் . |
| இட்டிகை | செங்கல் ; இடுக்குவழி ; கூட்டுமெழுகு . |
| இட்டிகைவாய்ச்சி | செங்கற்களை செதுக்கும் கருவி . |
| இட்டிடை | சிறுகிய இடை ; அற்பம் ; இடையூறு ; கடைசற் கருவியின் ஓருறுப்பு . |
| இட்டிடைஞ்சல் | துன்பம் ; வறுமை . |
| இட்டிது | சிறிது ; அண்மை . |
| இட்டிமை | சிறுமை ; ஒடுக்கம் . |
| இட்டிய | சிறிய . |
| இட்டியம் | யாக சம்பந்தம் ; வேள்வி . |
| இட்டீடு | விவாதம் . |
| இட்டீடுகொள்ளுதல் | வார்த்தையிட்டு வார்த்தை கொள்ளுதல் . |
| இட்டீறு | செருக்கால் செய்யும் செயல் . |
| இட்டு | தொடங்கி ; காரணமாக ; ஓர் அசை ; சிறுமை . |
| இட்டுக்கட்டிப் பேசுதல் | இல்லாததைக் கற்பித்துப் பேசுதல் . |
| இட்டுக்கட்டுதல் | இல்லாததை ஏற்றிச் சொல்லுதல் ; கற்பனை செய்தல் . |
| இட்டுக்கொடுத்தல் | ஏற்றிக் கொடுத்தல் ; புலாலுணவு படைத்தல் . |
| இட்டுக்கொண்டுபோதல் | கூட்டிக்கொண்டு செல்லுதல் . |
| இட்டுக்கொண்டுவருதல் | உடன் அழைத்து வருதல் . |
| இட்டுநீர் | தாரை வார்க்கும் நீர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இட்டம்பண்ணுதல் முதல் - இடங்கரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, காண்க, சொல், தாறுமாறு, தலைவன், வருதல், தொல்லை, இடங்கணிப்பொறி, இடகலை, வறுமை, சிறுமை, பேசுதல், செங்கல், வேள்வி, சிறிய, இட்டலி, கூறல், அழைத்து, பாதை, சொல்லுதல், இடத்தில், அண்மை, சொல்லத்தகாத, குடம், மறைத்துக், தகுதி, சொற்களை, கூறத்தகாத, பலர்முன், வழக்குள்

